தமிழிசைப் பேரகராதி

தமிழிசைப் பேரகராதி என்பது தமிழிசைக் கலைச்சொற்களுக்கான அகராதி ஆகும். இதை நா. மம்மது அவர்கள் ஆக்கி உள்ளார். இந்த நூல் 498 பக்கங்களுடன் வெளி வந்துள்ளது. இது இசை பற்றிய துறை அகராதி என்பதால், இதில் இடம்பெறும் சொற்கள் பலவற்றுக்கான விரிவான பொருள்கள் தரப்பட்டுள்ளன. இதனால் இது தமிழ் இசை இயலின் கலைச்சொல் களஞ்சிய அகராதி ஆகிறது என நூலாசிரியர் குறிப்பிட்டுள்ளார்.[1] இன்னிசை அறக்கட்டளை என்னும் நிறுவனம் இதன் முதற் பதிப்பை 2010 ஆம் ஆண்டில் வெளியிட்டது.

தமிழிசைப் பேரகராதி
நூல் பெயர்:தமிழிசைப் பேரகராதி
ஆசிரியர்(கள்):நா. மம்மது
வகை:இசையியல்
துறை:தமிழ் இசைச் சொற்களஞ்சியம்
காலம்:2010
இடம்:மதுரை
மொழி:தமிழ்
பக்கங்கள்:498
பதிப்பகர்:இன்னிசை அறக்கட்டளை
பதிப்பு:முதற்பதிப்பு

இந்நூலாசிரியர் திரு ந.மம்மது அவர்கள் 2019 ஆம் ஆண்டில் தமிழிசைப் பேரகராதியை வெளியிட்டு 100 பண்களுக்கான பண் களஞ்சியத்தை குறுந்தகடு வடிவில் வெளியிட்டுள்ளார்.

நூல் வரலாறு

தொகு

2005ல் அமெரிக்காவின் டெக்சாசு மாநிலத்தில் இடம்பெற்ற அமெரிக்கத் தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பின் மாநாட்டில் கலந்துகொள்ள வந்திருந்த அறிஞர்களுக்கு அம் மாநாட்டை முன்னின்று நடத்திய திரு. பால் சி பாண்டியன் அளித்த விருந்து நிகழ்வின்போது இந்நூலுக்கான கரு உருவானது. நூலின் ஆசிரியராக நா. மம்மதுவைக் கேட்டுக்கொள்வதெனவும் முடிவானது. பின்னர் இப்பணியை முன்னெடுப்பதற்காக இன்னிசை அறக்கட்டளை தொடங்கப்பட்டது. இதன் புரவலராக பால் பாண்டியனும், ஒருங்கிணைப்பாளராக கு. ஞானசம்பந்தனும், தொகுப்பாசிரியராக நா. மம்மதுவும் பொறுப்பேற்றனர். பத்துக்கு மேற்பட்ட அறிஞர்களைக் கொண்ட கருத்தாளர் குழுவொன்றும் அமைக்கப்பட்டது.[2] 2005ல் கருவாக உருவாகிய பணி 2010ல் நூலுருவானது.

மேற்கோள்கள்

தொகு
  1. மம்மது, நா., 2010. ஆசிரியர் முகவுரை பக். கக.
  2. மம்மது, நா., 2010. கு. ஞானசம்பந்தன் அவர்களின் அறிமுகவுரை

உசாத்துணைகள்

தொகு
  • மம்மது, நா., தமிழிசைப் பேரகராதி (சொற்களஞ்சியம்), இன்னிசை அறக்கட்டளை, மதுரை, 2010.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=தமிழிசைப்_பேரகராதி&oldid=3732340" இலிருந்து மீள்விக்கப்பட்டது