1690
1690 (MDCXC) ஒரு ஞாயிற்றுக்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் சாதாரண ஆண்டாகும். பழைய ஜூலியன் நாட்காட்டியில் புதன்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண ஆண்டாகும்.
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1690 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1690 MDCXC |
திருவள்ளுவர் ஆண்டு | 1721 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2443 |
அர்மீனிய நாட்காட்டி | 1139 ԹՎ ՌՃԼԹ |
சீன நாட்காட்டி | 4386-4387 |
எபிரேய நாட்காட்டி | 5449-5450 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1745-1746 1612-1613 4791-4792 |
இரானிய நாட்காட்டி | 1068-1069 |
இசுலாமிய நாட்காட்டி | 1101 – 1102 |
சப்பானிய நாட்காட்டி | Genroku 3 (元禄3年) |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 1940 |
யூலியன் நாட்காட்டி | கிரகோரியன் நாட்காட்டி 10 நாட்கள் குறைக்கப்பட்டு |
கொரிய நாட்காட்டி | 4023 |
நிகழ்வுகள்
தொகு- ஜனவரி 6 - முதலாம் லெப்பல்ட் மன்னனின் மகன் ஜோசப் ரோமின் மன்னன் ஆனான்.
- ஜனவரி 14 - கிளாரினெட் இசைக்கருவி ஜேர்மனியின் நூரென்பேர்க்கில் கண்டுபிடிக்கப்பட்டது.
- பெப்ரவரி 3 - ஐக்கிய அமெரிக்காவின் முதலாவது காகித நாணயம் மசாசூசெட்ஸில் அறிமுகப்படுத்தப்பட்டது.
- ஜூன் 26 - தென்மேற்கு இங்கிலாந்தின் நகரான டெயின்மவுத் நகரை பிரான்ஸ் முற்றுகையிட்டது.
- ஆகஸ்ட் 24 - கல்கத்தா நகரம் அமைக்கப்பட்டது.
- அக்டோபர் 7 - ஆங்கிலேயர் கியூபெக் நகரைத் தாக்கினர்.
- டிசம்பர் - யுரேனஸ் முதன் முதலில் ஜோன் ஃபிளாம்ஸ்டீட் என்பவரால் அவதானிக்கப்பட்டது.
- டிசம்பர் 24 - யாழ்ப்பாணத்தில் நத்தார் இரவு ஆராதனைக்காகக் கூடியிருந்த சுமார் 300 கத்தோலிக்கர்கள் டச்சுப் படைகளினால் அடித்துத் துன்புறுத்தப்பட்டனர்.
- டிசம்பர் 29 - இத்தாலியின் அன்கானோர் நகரில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
நாள் அறியப்படாதவை
தொகு- பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனி கூடலூரில் உள்ள புனித டேவிட் கோட்டையை மராத்தியர்களிடம் இருந்து வாங்கினர்.
பிறப்புகள்
தொகு- பாஸ்கரராயர், எழுத்தாளர் (இ. 1785)