1700கள்
1700கள் என்றழைக்கப்படும் பத்தாண்டு காலம் 1700ஆம் ஆண்டு துவங்கி 1709-இல் முடிவடைந்தது.
நிகழ்வுகள்
1700
==== சனவரி - சூன் ====
- ஜனவரி 1 - மேற்கு ஐரோப்பாவின் சீர்திருத்தத் திருச்சபை (இங்கிலாந்து தவிர்த்து) கிரெகொரியின் நாட்காட்டியைப் பயன்படுத்த ஆரம்பித்தது.
- ஜனவரி 1 - ரஷ்யா ஜூலியன் நாட்காட்டியை பயன்படுத்த ஆரம்பித்தது.
- ஜனவரி 26 - வட அமெரிக்காவின் வான்கூவர் தீவுக் கரையில் 8.7 முதல் 9.2 ரிக்டர் வரையான நிலநடுக்கம் ஏற்பட்டது. தீவின் மேற்குக் கரையில் முழுக்கிராமமும் அழிந்தது. எவரும் உயிர் தப்பவில்லை. இதனால் ஏற்பட்ட ஆழிப்பேரலை சப்பானைத் தாக்கி பெரும் சேதத்தை ஏற்படுத்தியது.
- பெப்ரவரி 3 – ஸ்கொட்லாந்தின் எடின்பரோவில் பரவிய தீ நகரின் மத்திய பகுதியை அழித்தது.
- பெப்ரவரி 27 - புதிய பிரித்தானியா தீவு கண்டுபிடிக்கப்பட்டது.
- மார்ச் 1 - புனித உரோமைப் பேரரசு, டென்மார்க், நோர்வே கிரெகொரியின் நாட்காட்டியை அறிமுகப்படுத்தின
- மார்ச் 1 - சுவீடன் தனது புதிய நாட்காட்டியை அறிமுகப்படுத்தியது.
- மார்ச் 25 – பிரான்சு, இங்கிலாந்து, ஒல்லாந்து நாடுகளுக்கிடையே லண்டனில் உடன்பாடு எட்டப்பட்டது.
- ஏப்ரல் - எத்தியோப்பியாவின் தலைநகர் கொண்டாரில் தீ பரவி அரண்மனைகள் உட்படப் பல கட்டடங்கள் அழிந்தன.
சூலை - திசம்பர் தொகு
- சூலை 11 – கோட்பிரீட் லைப்னிட்ஸ் தலைமையில் புருசிய அறிவியல் கழகம் ஆரம்பிக்கப்பட்டது.
- ஆகஸ்டு 18 – சுவீடன், டென்மார்க், நோர்வே ஆகிய நாடுகளுக்கிடையே அமைதி உடன்பாடு எட்டப்பட்டது. அதே நாளில் போலந்து மன்னர் இரண்டாம் அகஸ்தசு, உருசியாவின் முதலாம் பீட்டர் ஆகியோர் சுவீடன் மீது போர் தொடுத்தனர்.
- நவம்பர் 15 – பிரான்சின் பதினான்காம் லூயி தனது பேரன் ஐந்தாம் பிலிப்புக்காக எசுப்பானியாவின் மன்னனாக முடி சூடினான்.
- நவம்பர் 20 - சுவீடனின் பன்னிரண்டாம் சார்ல்ஸ் நார்வா என்ற இடத்தில் ரஷ்யாவின் முதலாம் பீட்டரைத் தோற்கடித்தான்.
- நவம்பர் 23 – பதினோராம் கிளெமென்ட் 243வது திருத்தந்தையாக முடிசூடினார்.
- நவம்பர் 30 - சுவீடனின் பன்னிரண்டாம் சார்ல்ஸ் தலைமையில் 8.500 இராணுவத்தினர் எஸ்தோனியாவில் நார்வா என்ற இடத்தில் பெரும் உருசியப்ப் படைகளை வென்றனர்.
- டிசம்பர் 31 - 17 நூற்றாண்டின் கடைசி நாள்.
தேதி அறியாதவை தொகு
- சிங்கங்கள் லிபியாவில் அழிந்து மறைந்தன.
1701
- சனவரி 1 - 18-ஆம் நூற்றாண்டின் முதலாவது நாள்.
- சனவரி 12 - நெதர்லாந்தின் சில பகுதிகள் கிரெகொரியின் நாட்காட்டிக்கு மாறின.
- சனவரி 18 - பிரான்டன்பர்க்-புரூசியா புருசிய இராச்சியம் ஆனது. முதலாம் பிரெடெரிக் புருசியாவின் அரசராக அறிவிக்கப்பட்டார். புருசியா புனித உரோமைப் பேரரசின் ஒரு பகுதியாகத் தொடர்ந்தது. பெர்லின் அதன் தலைநகரம் ஆகும்.
- மார்ச் - எசுப்பானிய மரபுரிமைப் போர் ஆரம்பம்.
- சூன் 24 - 1701 ஒப்பந்தச் சட்டத்தின் படி ஐக்கிய இராச்சியத்தில் முடிக்குரியவர் ஒரு ரோமன் கத்தோலிக்கரை மணந்து கொள்வது தடை செய்யப்பட்டது.
1702
- மார்ச் 8 (பழைய முறை) - இங்கிலாந்தின் மூன்றாம் வில்லியம் மன்னர் பெப்ரவரி 20 அன்று குதிரையில் இருந்து வீழ்ந்த காயத்தினால் மரணமானார். அவரது மைத்துனி இளவரசி ஆன் புதிய அரசியாக முடி சூடினார்.
- மார்ச் 11 (பழைய முறை) - முதலாவது ஆங்கில-மொழி தேசிய செய்தித்தாள் த டெய்லி குராண்ட் முதற்தடவையாக வெளிவந்தது.[1]
- மே - வார்சாவா சுவீடனின் பன்னிரண்டாம் சார்ல்சு மன்னனால் கைப்பற்றப்பட்டது.
- மே 14 - பிரான்சு மீது இங்கிலாந்து இராச்சியம், டச்சுக் குடியரசு, புனித உரோமைப் பேரரசு ஆகியன போரை அறிவித்தன.
- டெலவெயர் தனிக் குடியேற்ற நாடாக அறிவிக்கப்பட்டது.
- நார்வேயின் பேர்கன் நகரத்தில் பரவி தீயினால் நகரின் 90% பகுதிகள் எரிந்தன.
1703
- சனவரி 14 - இத்தாலியின் நோர்சியா நகரில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
- பெப்ரவரி 2 - இத்தாலியின் லாக்கிலா நகரை நிலநடுக்கம் தாக்கியது.
- மே 27 (மே 16 (பழைய நாட்காட்டி) - பெரும் வடக்குப் போர்: ரஷ்யாவின் முதலாம் பீட்டர் சுவீடனிடம் இருந்து இங்கிரியாவைக் கைப்பற்றியதை அடுத்து சென் பீட்டர்ஸ்பேர்க் அமைக்கப்பட்டது.
- சூன் - ஐசுலாந்தில் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு நிறைவேற்றப்பட்டது. முழுமையான கணக்கெடுப்பு நடத்தப்பட்ட முதலாவது நாடு இதுவாகும்.
- சூலை 29-சூலை 31 - எழுத்தாளர் டானியல் டீஃபோ அரசியல் அங்கதப் பிரசுரம் ஒன்றை வெளியிட்டமைக்காக தண்டனைக் கட்டையில் வைக்கப்பட்டு, பின்னர் நான்கு மாதங்கள் சிறைப்படுத்தப்பட்டார்.
- நவம்பர் 24-டிசம்பர் 2 - அத்திலாந்திக்கு வெப்ப மண்டலச் சூறாவளி தெற்கு இங்கிலாந்து மற்றும் ஆங்கிலக் கால்வாயைத் தாக்கியதில் 8,000 பேர் வரையில் உயிரிழந்தனர்.
- நவம்பர் 30 - ஐசாக் நியூட்டன் இலண்டன் அரச கழகத்தின் தலைவராக நியமிக்கப்பட்டார். 1727 இல் இறக்கும் வரை இப்பதவியில் இருந்தார்.
- கோவா பாதிரியார் ஜக்கோல்மி கொன்சால்வெசு இலங்கை வந்தார்.[2].
1704
- பெப்ரவரி 29 - பிரெஞ்சுப் படைகளும் அமெரிக்காவின் பழங்குடி இந்தியர்களும் இணைந்து மசாசுசெட்ஸ் இல் டியர்ஃபீல்ட் என்ற இடத்தில் ஆங்கிலக் குடியேறிகளைத் தாக்கியதில் பெண்கள், குழந்தைகள் உட்பட 50 இற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.
- ஏப்ரல் 24 - பிரித்தானிய வட அமெரிக்காவின் 13 குடியேற்றங்களின் முதலாவது [[நாளிதழ் தி பாஸ்டன் நியூஸ்-லெட்டர் வெளிவந்தது.
- ஆகஸ்டு 3 - எசுப்பானியாவிடம் இருந்து ஜிப்ரால்ட்டரை ஆங்கிலேய-டச்சுப் படைகள் கைப்பற்றின.
- செப்டம்பர் - ஜிப்ரால்ட்டர் மீதான பிரெஞ்சு, எசுப்பானியப் படைகளின் 12வது முற்றுகை ஆரம்பமானது.
- புரூணை சுல்தானகம் தனது வட-கிழக்குப் பகுதிகளை சூலு சுல்தானகத்திடம் இழந்தது.gh three editions this year.
- ஐசாக் நியூட்டன் தனது Opticks நூலை வெளியிட்டார்.
- எதியோப்பியாவில் கொண்டார் நகரில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
- உருசியப் படைகள் டார்ட்டு மற்றும் நார்வா நகர்களைக் கைப்பற்றினர்.
1705
- ஏப்ரல் 16 - ஐசாக் நியூட்டன் சர் பட்டம் வழங்கிக் கௌரவிக்கப்பட்டார்.
- நவம்பர் 5 - டப்ளின் கசெட் முதலாவது பதிப்பு வெளியானது.
- இலங்கையின் கொழும்பு நகரில் டச்சு ஆட்சியாளர்களால் மதப்பள்ளி ஒன்று ஆரம்பிக்கப்பட்டது. இங்கு எபிரேயம், டச்சு, போர்த்துக்கீசம், சிங்களம், தமிழ் மொழிகள் பயிற்றுவிக்கப்பட்டன.[3].
1706
- மார்ச் 27 - எதியோப்பியாவின் முதலாம் இலியாசசு பேரரசர் முடிதுறந்து துறவு நிலைக்கு சென்றார். முதலாம் தெக்கில் எய்மானோட் மன்னராகப் பதவியேற்றார்.
- சூலை 22 - இசுக்கொட்லாந்து, இங்கிலாந்து நாடுகளுக்கிடையே இலண்டனில் ஒன்றிய உடன்பாடு எட்டப்பட்டது.[4]
- அக்டோபர் - தோமசு டுவைனிங் முதலாவது தேனீர் அறையை இலண்டன் ஸ்ட்ராண்ட் 216 ஆம் இலக்கத்தில் ஆரம்பித்தார். இது இன்றும் (2023) திறந்துள்ளது.[5][6][7]
1707
- ஜனவரி 1 - ஐந்தாம் ஜோன் போர்த்துக்கல்லின் மன்னனாக முடி சூடினான்.
- ஜனவரி 16 - ஸ்கொட்லாந்து மற்றும் இங்கிலாந்து பேரரசுகளை இணைக்க ஸ்கொட்லாந்து நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்தது.
- ஜனவரி 9 - ஸ்கொட்லாந்து மற்றும் இங்கிலாந்து பேரரசுகளை இணைக்க இங்கிலாந்து நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்தது.
- மே 1 - ஸ்கொட்லாந்து மற்றும் இங்கிலாந்து நாடாளுமறங்கள் இணைக்கப்பட்டன.
- ஜூன் 4 - ஒல்லாந்தர் யாழ்ப்பாணத்தில் தேசவழமைச் சட்டத்தை அறிமுகப்படுத்தினர்.[3].
- அக்டோபர் 22 - நான்கு பிரித்தானிய கடற்படைக் கப்பல்கள் சிலி தீவுகளில் மூழ்கியதில் ஆயிரக்கணக்கான மாலுமிகள் கொல்லப்பட்டனர்.
- அக்டோபர் 23 - பெரிய பிரித்தானியாவின் முதலாவது நாடாளுமன்ற அமர்வுகள் ஆரம்பமாயின.
- டிசம்பர் 16 - ஜப்பானின் பூஜி மலையின் கடைசி வெடிப்பு நிகழ்ந்தது.
- லாவோ முடிவுக்கு வந்தது.
- நாயக்கர் கண்டிப் பேரரசைக் கைப்பற்றினர்.
1708
- ஆகத்து 18 - எசுப்பானியாவின் மினோர்க்கா நகரம் பிரித்தானியப் படைகளால் கைப்பற்றப்பட்டது.[8]
- ஆகத்து 29 - மாசச்சூசெட்ஸ், ஏவர்ஹில் நகரில் பழங்குடியினரின் தாக்குதலில் 16 குடியேறிகள் கொல்லப்பட்டனர்.
- செப்டம்பர் 28 - பெரும் வடக்குப் போர்: லெசுனயாவில் உருசியாவின் முதலாம் பீட்டர் [[சுவீடன்|சுவீடியப் படைகளைத் தோற்கடித்தான்.
- அக்டோபர் 12 பிரித்தானியப் படைகள் லீல் நகரைக் கைப்பற்றினர்.[9]
- அக்டோபர் 26 இலண்டனில் புனித பவுல் பேராலயம் கட்டி முடிக்கப்பட்டது.[10]
- பிரித்தானிய நாடாளுமன்றத்தின் அனுமதியுடன், கிழக்கிந்தியத் தீவுகளில் வணிகம் செய்து வந்த இலண்டன் மேர்ச்சன்ட்சு கம்பனி, இங்கிலீசு கம்பனியுடன் இணைக்கப்பட்டு பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம் உருவானது.[11]
1709
- சனவரி 6 - 500 ஆண்டுகளின் பின்னர் மேற்கு ஐரோப்பாவின் பெரும் பனிக்காலம் ஆரம்பமாகி, மூன்று மாதங்கள் வரை நீடித்தது.[12] பிரான்சில் அத்திலாந்திக்குக் கரை, செய்ன் ஆறு ஆகியன உறைந்தன. பாரீசில் மட்டும் 24,000 பேர் வரை இறந்தனர். மிதக்கும் பனி வடகடல் வரை எட்டியது.
- சனவரி 10 - இங்கிலாந்தின் முதலாம் ஏபிரகாம் டார்பி கோக் எரிபொருளைப் பயன்படுத்தித் தனது ஊதுலையில் வார்ப்பிரும்பை உருவாக்கினார்.[13][14][8]
- மே - பிரித்தானியாவுக்குள் முதற் தடவையாக செருமானிய பாலத்தீனுகள் ஏதிலிகளாக உள்நுழைந்தனர்.[15]
- சூன் 27 - பெரும் வடக்குப் போர்: உக்ரைன், உருசியாவின் முதலாம் பீட்டர் பேரரசன் சுவீடனின் பன்னிரண்டாம் சார்ல்சைத் தோற்கடித்தான்.
- டிசம்பர் 25 - இலண்டனில் இருந்து 4,000 பேரை ஏற்றிக் கொண்டு 10 கப்பல்கள் நியூயோர்க்குக்குப் புறப்பட்டன.
- மெய்ப்பாத புராணிகர் திருப்பைஞ்ஞீலிப் புராணம் என்னும் நூலை 821 செய்யுள்களால் இயற்றினார்.
போர்கள் தொகு
- ஸ்பானியப் போர் (1701 - 1714)
பேரரசர்கள் தொகு
- பிலிப்பு V, ஸ்பெயின் மன்னன் (1700-1746)
- சத்திரபதி சாகு, மராட்டியப் பேரரசன் (1707-1749)
நபர்கள் தொகு
- வள்ளல் சீதக்காதி, (1650-1720)
மேற்கோள்கள் தொகு
- ↑ Penguin Pocket On This Day. Penguin Reference Library. 2006. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-14-102715-0. https://archive.org/details/penguinpocketont0000unse.
- ↑ John H. Martyn, Notes on Jaffna, American Ceylon Mission Press, தெல்லிப்பழை, Ceylon, 1923, (2ம் பதிப்பு: 2003) பக்.5
- ↑ 3.0 3.1 John H. Martyn, Notes on Jaffna, American Ceylon Mission Press, தெல்லிப்பழை, Ceylon, 1923, (2ம் பதிப்பு: 2003) பக்.6
- ↑ Palmer, Alan; Veronica (1992). The Chronology of British History. London: Century Ltd. பக். 204–205. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-7126-5616-2.
- ↑ "Icons, a portrait of England 1700-1750" இம் மூலத்தில் இருந்து 17 ஆகஸ்ட் 2007 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20070817164123/http://www.icons.org.uk/theicons/icons-timeline/1700-1750.
- ↑ Button, Henry G.; Lampert, Andrew P. (1976). The Guinness Book of the Business World. Enfield: Guinness Superlatives. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-900424-32-X. https://archive.org/details/guinnessbookofbu0000butt.
- ↑ "About Twinings - 216 Strand". Twinings. 2015. http://www.twinings.co.uk/about-twinings/216-strand. பார்த்த நாள்: 2015-02-13.
- ↑ 8.0 8.1 Williams, Hywel (2005). Cassell's Chronology of World History. London: Weidenfeld & Nicolson. பக். 292. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-304-35730-8. https://archive.org/details/cassellschronolo0000will.
- ↑ Palmer, Alan; Veronica (1992). The Chronology of British History. London: Century Ltd. பக். 205–206. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-7126-5616-2.
- ↑ "Stamps celebrate St Paul's with Wren epitaph". Evening Standard இம் மூலத்தில் இருந்து 2008-05-19 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20080519010804/http://www.thisislondon.co.uk/standard/article-23484259-details/Stamps+celebrate+St+Paul%27s+with+Wren+epitaph/article.do. பார்த்த நாள்: 2008-06-05.
- ↑ Landow, George P. (2010). "The British East India Company — the Company that Owned a Nation (or Two)". The Victorian Web. http://victorianweb.org/history/empire/india/eic.html. பார்த்த நாள்: 2011-11-22.
- ↑ Pain, Stephanie. "1709: The year that Europe froze." New Scientist, 7 February 2009.
- ↑ Mott, R. A. (5 சனவரி 1957). "The earliest use of coke for ironmaking". The Gas World, coking section supplement 145: 7–18.
- ↑ Raistrick, Arthur (1953). Dynasty of Ironfounders: the Darbys and Coalbrookdale. London: Longmans, Green. பக். 34.
- ↑ Gardiner, Juliet; Wenborn, Neil (ed.) (1995). The History Today Companion to British History. London: Collins & Brown. பக். 577. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:1-85585-178-4.