தானிசு இந்தியா

தானிசு இந்தியா (Danish India) டென்மார்க்கின், (1814 வரை டென்மார்க்-நோர்வே) முன்னாள் இந்தியக் குடியேற்றங்களைக் குறிப்பதாகும். இவை தற்போதையத் தமிழ்நாட்டிலிலுள்ள தரங்கம்பாடி (Tranquebar), தற்போதைய மேற்கு வங்காளத்தின் செராம்பூர் மற்றும் அந்தமான் நிகோபார் தீவுகள் மைய ஆட்சிப்பகுதியில் உள்ள நிக்கோபார் தீவுகள் உள்ளிட்டவையாகும்.[1][2][3]

தானிசு இந்தியா
Dansk Ostindien
1620–1869
கொடி of தானிசு இந்தியா
டென்மார்க்கு கொடி
இந்தியாவில் டேனிஷ் மற்றும் பிற ஐரோப்பிய குடியேற்றங்கள்
இந்தியாவில் டேனிஷ் மற்றும் பிற ஐரோப்பிய குடியேற்றங்கள்
நிலைடென்மார்க் கிழக்கிந்தியக் கம்பனி (1620–1777)
டானோ-நோர்வீஜியக் குடியேற்றங்கள் (1777–1814)
தானிசுக் குடியேற்றங்கள் (1814–1869)
தலைநகரம்டான்ஸ்போர்கு கோட்டை
பேசப்படும் மொழிகள்டேனிஷ் மொழி, தமிழ், இந்தி, வங்காளி
டென்மார்க்கு மன்னர் (மற்றும் நோர்வே 1814 வரை) 
• 1588-1648
கிறிஸ்டியன் IV
• 1863-1906
கிறிஸ்டியன் IX
ஆளுனர் 
• 1620-1621
ஓவெ ஜெட்டெ
• 1673-1682
சிவெர்ட் கார்ட்சன் அடெலர்
• 1759-1760
கிறிஸ்டியன் ஃபிரெடெரிக் ஹோயர்
• 1788-1806
பீட்டர் ஆங்கர்
• 1825-1829
ஹான்சு டெ பிரிங்க்-செய்டெலன்
• 1841-1845
பீடர் ஹான்சென்
வரலாற்று சகாப்தம்குடிமைப்பட்டக் காலம்
• தொடக்கம்
1620
• முடிவு
1869
நாணயம்தானிசு இந்திய ரூபாய்
பின்னையது
}
இந்தியாவில் கம்பனிகளின் ஆட்சி
பிரித்தானிய இராச்சியம்
தற்போதைய பகுதிகள் இந்தியா
1620இல் கட்டபட்ட தான்சுபோர்கு கோட்டை, தரங்கம்பாடி

இந்தியாவின் டேனிஷ் குடியேற்றபகுதிகளை 17வது நூற்றாண்டிலிருந்து 19வது நூற்றாண்டு வரை செயலில் இருந்த டென்மார்க் கிழக்கிந்தியக் கம்பனி நிறுவியது. இந்தக் குடியேற்றங்களின் தலைநகராக 1620 இல் கோரமண்டல் கடற்கரையில் உள்ள தரங்கம்பாடியில் கட்டப்பட்ட டான்சுபோர்கு கோட்டை விளங்கியது.

தானிசுக்காரர்கள் பல வணிக புறமையங்களை நிறுவி தரங்கம்பாடியிலிருந்து ஆண்டனர்:

1777ஆம் ஆண்டில் இபகுதிகளை தானிசுக் கம்பனி அரசிடம் ஒப்படைக்க இவை தானிசு மன்னராட்சி் குடியேற்றங்களாயின.

1789 ஆம் ஆண்டு அந்தமான் தீவுகள் பிரித்தானியக் குடியேற்றமானது. நெபோலியப் போர்களின் போது ஐக்கிய இராச்சியம் தானிசு கடல்வணிகத்தை தாக்கி இந்தியாவிலிருந்த தானிசுக் கிழக்கிந்தியக் கம்பனிக்கு மிகுந்த நட்டத்தை உண்டாக்கியது. மே 1801 - ஆகத்து 1802 மற்றும் 1808 - செப்டம்பர் 20, 1815 காலகட்டங்களில் ஆங்கிலேயர்கள் தரங்கம்பாடி மற்றும் பிரெடிரிக்சுநகர் கோட்டைகளைப் பிடித்து தங்கள் கட்டுபாட்டில் வைத்திருந்தனர்.

மெதுவாக தானிசுக் குடியேற்றங்கள் வலுவிழந்து பிரித்தானிய இந்தியாவின் பகுதிகளாயின: 1839ஆம் ஆண்டில் செராம்பூர் பிரித்தானியர்களுக்கு விற்கப்பட்டது, 1845இல் தரங்கம்பாடியும் பெரும்பாலான சிறு குடியேற்றங்களும் விற்கப்பட்டன. 1868 அக்டோபரில், 1848இலிருந்தே புறக்கணிக்கப்பட்டிருந்த, நிக்கோபார் தீவுகளும் பிரித்தானியர்களுக்கு விற்கப்பட்டன.

மேற்கோள்கள்

தொகு
  1. Rasmussen, Peter Ravn (1996). "Tranquebar: The Danish East India Company 1616–1669". University of Copenhagen. Archived from the original on 2 February 2014. பார்க்கப்பட்ட நாள் 18 March 2013.
  2. Felbæk, Ole (1990). "Den danske Asienhandel 1616–1807: Værdi og Volumen". Historisk Tidsskrift 90 (2): 320–324. https://tidsskrift.dk/historisktidsskrift/article/view/53283/71019. 
  3. Magdalena, Naum; Nordin, Jonas, eds. (2013). Scandinavian Colonialism and the Rise of Modernity. Contributions To Global Historical Archaeology. Vol. 37. Springer. p. 8. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4614-6201-9 – via SpringerLink. Denmark and particularly Sweden struggled with upholding overseas colonies and recruiting settlers and staff willing to relocate.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தானிசு_இந்தியா&oldid=4099492" இலிருந்து மீள்விக்கப்பட்டது