திசம்பர் 31
நாள்
<< | திசம்பர் 2024 | >> | ||||
ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 |
8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 |
15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 |
22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 |
29 | 30 | 31 | ||||
MMXXIV |
திசம்பர் 31 (December 31) கிரிகோரியன் ஆண்டின் 365 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 366 ஆம் நாள். இது ஆண்டின் இறுதி நாள் ஆகும்.
நிகழ்வுகள்
- 535 – பைசாந்திய இராணுவத் தளபதி பெலிசாரியசு சிசிலி மீதான முற்றுகையை வெற்றிகரமாக முடித்தான்.
- 1225 – வியட்நாமின் 216 ஆண்டு கால லீ வம்ச அரசு முடிவுக்கு வந்து, டிரான் வம்சம் ஆட்சியைப் பிடித்தது.
- 1600 – பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனி ஆரம்பிக்கப்பட்டது.
- 1687 – நன்னம்பிக்கை முனையை அடைவதற்காக ஹியூகெனாட் எனப்படும் புரட்டஸ்தாந்தர்களின் முதற் தொகுதியினர் பிரான்சை விட்டுப் புறப்பட்டனர்.
- 1695 – இங்கிலாந்தில் பலகணி வரி அறிமுகப்படுத்தப்பட்டதை அடுத்து பலர் தமது பலகணிகளை செங்கல் கொண்டு மூட ஆரம்பித்தார்கள்.
- 1775 – அமெரிக்கப் புரட்சிப் போர்: கியூபெக் சமரில் பிரித்தானியப் படைகள் அமெரிக்க விடுதலைப் படையின் தாக்குதலை முறியடித்தன.
- 1847 – ஆறுமுக நாவலர் தனது முதலாவது பிரசங்கத்தை வண்ணார்பண்ணை வைத்தீஸ்வரன் கோவிலில் ஆரம்பித்தார்.
- 1857 – விக்டோரியா மகாராணி கனடாவின் தலைநகராக ஒட்டாவாவைத் தேர்ந்தெடுத்தார்.
- 1862 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: மேற்கு வேர்ஜீனியாவை கூட்டணியில் இணைப்பதற்கான சட்டமூலத்தில் ஆபிரகாம் லிங்கன் கையெழுத்திட்டதில் வேர்ஜீனியா இரண்டாகப் பிரிந்தது.
- 1879 – வெள்ளொளிர்வு விளக்கு முதற்தடவையாக தொமஸ் எடிசனால் காட்சிப்படுத்தப்பட்டது.
- 1881 – இலங்கை முழுவதும் நிலநடுக்கம் உணரப்பட்டது.[1]
- 1923 – லண்டனின் பிக் பென் மணிக்கூண்டின் மணியொலி மணிக்கொரு தடவை பிபிசியில் ஒலிபரப்பு செய்ய ஆரம்பிக்கப்பட்டது.
- 1944 – இரண்டாம் உலகப் போர்: அங்கேரி நாட்சி செருமனி மீது போரை அறிவித்தது.
- 1944 – இரண்டாம் உலகப் போர்: மேற்குப் போர்முனையின் கடைசிப் போர் நார்ட்வின்ட் நடவடிக்கை ஆரம்பமானது.
- 1946 – அமெரிக்க அரசுத்தலைவர் ஹரி ட்ரூமன் இரண்டாம் உலகப் போரில் ஐக்கிய அமெரிக்காவின் பங்கு முடிவுக்கு வந்ததாக அதிகாரபூர்வமாக அறிவித்தார்.
- 1963 – மத்திய ஆப்பிரிக்கக் கூட்டமைப்பு அதிகாரபூர்வமாகக் கலைந்தது. சாம்பியா, மலாவி, ரொடீசியா என மூன்று நாடுகள் உருவாகின.
- 1965 – மத்திய ஆப்பிரிக்கக் குடியரசில் இராணுவப் புரட்சி இடம்பெற்றது.
- 1968 – உலகின் முதலாவது சூப்பர்சோனிக் பயணிகள் விமானம் துப்போலெவ் டி.யு-144 தனது முதலாவது பறப்பை மேற்கொண்டது.
- 1981 – கானாவில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியில் அரசுத்தலைவர் இல்லா லிமான் பதவியிலிருந்து அகற்றப்பட்டார்.
- 1983 – நைஜீரியாவில் இராணுவத் தளபதி மேஜர் முகம்மது புகாரி தலைமையில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியை அடுத்து இரண்டாவது நைஜீரியக் குடியரசு கலைந்தது.
- 1984 – ராஜீவ் காந்தி இந்தியப் பிரதமரானார்.
- 1986 – புவேர்ட்டோ ரிக்கோவில் சான் வான் நகரில் உணவுசாலையை அதன் மூன்று ஊழியர்கள் தீ வைத்ததில், 97 பேர் உயிரிழந்தனர், 140 பேர் காயமடைந்தனர்.
- 1987 – ரொபேர்ட் முகாபே சிம்பாப்வேயின் அரசுத்தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
- 1991 – சோவியத் ஒன்றியம் அதிகாரபூர்வமாகக் கலைக்கப்பட்டு ஐந்து நாட்களுக்குள் அனைத்து அரசு நிறுவனங்களும் செயலிழந்தன.
- 1992 – செக்கோசிலோவாக்கியா கலைக்கப்பட்டு செக் குடியரசு, சிலோவாக்கியா என இரு நாடுகளாகப் பிரிந்தது.
- 1994 – முதலாம் செச்சினியப் போர்: உருசிய இராணுவம் குரோசுனி மீது தாக்குதலை ஆரம்பித்தது.
- 1994 – பீனிக்சு தீவுகள், மற்றும் லைன் தீவுகளில் நேரமாற்றம் நடைமுறைப்படுத்தப்பட்டதை அடுத்து, கிரிபட்டியில் இந்நாள் முற்றாக விலக்கப்பட்டது.
- 1999 – 20-ஆம் நூற்றாண்டு, 2-ஆம் ஆயிரமாண்டு ஆகியவற்றின் கடைசி நாள்.
- 1999 – உருசியாவின் முதலாவது அரசுத்தலைவர் போரிஸ் யெல்ட்சின் பதவி விலகினார். பிரதமர் விளாதிமிர் பூட்டின் அரசுத்தலைவரானார்.
- 1999 – 1977 ஆம் ஆண்டில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்திற்கு அமைய, ஐக்கிய அமெரிக்கா பனாமா கால்வாயின் அதிகாரத்தை பனாமாவிடம் ஒப்படைத்தது.
- 1999 – இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் 814 ஐக் கடத்திய ஐந்து கடத்தல்காரர்கள் தாம் விடுவிக்கக் கோரிய இரண்டு இசுலாமிய மதகுருமார்கள் விடுவிக்கப்பட்டதை அடுத்து 190 பணயக்கைதிகளையும் விடுவித்துவிட்டு விமானத்தைக் கைவிட்டு வெளியேறினர்.
- 2004 – உலகின் அப்போதைய மிக உயரமான வானளாவியான தாய்வானின் 509 மீட்டர் உயர தாய்ப்பே 101 அதிகாரபூர்வமாகத் திறக்கப்பட்டது.
- 2006 – ஐக்கிய அமெரிக்காவிடம் இரண்டாம் உலகப் போரின் போது பெற்ற கடன்களை ஐக்கிய இராச்சியம் முழுவதுமாக கட்டி முடித்தது.
- 2009 – நீல நிலவும் நிலவு மறைப்பும் நிகழ்ந்தன.
- 2011 – நாசா இரண்டு கிரெயில் செயற்கைக்கோள்களின் முதலாவதை நிலாவின் சுற்றுவட்டத்துள் செலுத்தியது.
- 2014 – சாங்காயில் இடம்பெற்ற புத்தாண்டுக் கொண்டாட்ட நெரிசலில் 36 பேர் உயிரிழந்தனர், 49 பேர் காயமடைந்தனர்.
பிறப்புகள்
- 1491 – இழ்சாக் கார்ட்டியே, பிரான்சிய கடற்படை அதிகாரி, நாடுகாண் பயணி (இ. 1557)
- 1514 – ஆண்ட்ரியசு வெசாலியசு, பெல்ஜிய உடற்கூற்றியலாளர், மருத்துவர் (இ. 1564)
- 1738 – காரன்வாலிஸ், பிரித்தானிய இந்தியாவின் 3வது தலைமை ஆளுநர் (இ. 1805)
- 1815 – ஜார்ஜ் கார்டன் மீடு, அமெரிக்க இராணுவ அதிகாரி, பொறியியலாளர் (இ. 1872)
- 1864 – இராபர்ட் கிராண்ட் ஐத்கென், அமெரிக்க வானியலாளர் (இ. 1951)
- 1869 – ஆன்றி மட்டீசு, பிரான்சிய ஓவியர், சிற்பி (இ. 1954)
- 1878 – எலிசபெத் ஆர்டன், கனடிய தொழிலதிபர் (இ. 1966)
- 1905 – எலன் தோடுசன் பிரின்சு, அமெரிக்க வான்யலாளர் (இ. 2002)
- 1910 – டி. எஸ். துரைராஜ், தமிழக நாடக, திரைப்பட நடிகர் (இ. 1986)
- 1929 – ச. வே. சுப்பிரமணியன், தமிழறிஞர் (இ. 2017)
- 1935 – சல்மான், சவூதி அரேபிய மன்னர்
- 1943 – ஜான் டென்வர், அமெரிக்கப் பாடகர், நடிகர் (இ. 1997)
- 1943 – பென் கிங்ஸ்லி, ஆங்கிலேய நடிகர்
- 1947 – நாஞ்சில் நாடன், தமிழக எழுத்தாளர்
- 1989 – பிரியா பவானி சங்கர், இந்தியத் திரைப்பட நடிகை, தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளர்
இறப்புகள்
- 335 – முதலாம் சில்வெஸ்தர் (திருத்தந்தை)
- 1691 – இராபர்ட் வில்லியம் பாயில், அயர்லாந்து வேதியியலாளர், இயற்பியலாளர் (பி. 1627)
- 1719 – ஜான் பிளேம்சுடீடு, ஆங்கிலேய வானியலாளர் (பி. 1646)
- 1876 – கத்தரீன் லபோரே, பிறரன்பின் புதல்வியர் துறவற சபையின் அருட்சகோதரி, பிரான்சியப் புனிதர் (பி. 1806)
- 1913 – சேத் கார்லோ சாண்டிலர், அமெரிக்க வானியலாளர் (பி. 1846)
- 1940 – விஸ்வநாத தாஸ், விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர், நாடக கலைஞர் (பி. 1886)
- 1973 – அலெக்சாந்தர் விசோத்சுகி, உருசிய-அமெரிக்க வானியலாளர் (பி. 1888)
- 1984 – கே. ஆர். ராமநாதன், இந்திய இயற்பியலாளர் (பி. 1893)
- 1986 – ராஜ் நாராயணன், இந்திய இடதுசாரி அரசியல்வாதி, விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர் (பி. 1917)
- 1994 – கரவை கந்தசாமி, ஈழத்து இடதுசாரி அரசியல்வாதி, தொழிற்சங்கவாதி
- 2001 – தொ. மு. சிதம்பர ரகுநாதன், தமிழக எழுத்தாளர் (பி. 1923)
- 2011 – இராணி ஜெத்மலானி, இந்திய மனித உரிமை செயற்பாட்டாளர், வழக்கறிஞர்
- 2022 – திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் (பி. 1927)
சிறப்பு நாள்
மேற்கோள்கள்
- ↑ John H. Martyn, Notes on Jaffna, American Ceylon Mission Press, தெல்லிப்பழை, இலங்கை, 1923, (2ம் பதிப்பு: 2003) பக். 43