சேத் கார்லோ சாண்டிலர்
சேத் கார்லோ சாண்டிலர், இளையவர் (Seth Carlo Chandler, Jr., 16 செப்டம்பர் 1846 - 31 டிசம்பர் 1913) என்பவர் அமெரிக்க வானியலாளர் ஆவார்.
சேத் கார்லோ சாண்டிலர் Seth Carlo Chandler | |
---|---|
பிறப்பு | செப்டம்பர் 16, 1846 பாஸ்டன், மாசச்சூசெட்ஸ் |
இறப்பு | திசம்பர் 31, 1913 | (அகவை 67)
தேசியம் | அமெரிக்க ஐக்கிய நாடு |
துறை | வானியல் |
அறியப்படுவது | சாண்டிலர் தலையாட்டம் |
தாக்கம் செலுத்தியோர் | பெஞ்சமின் கூல்டு |
விருதுகள் | அரசு வானியற்கழகப் பொற்பதக்கம் (1896) ஜேம்சு கிரெய்கு வாட்சன் பதக்கம் (1894) |
சேத் கார்லோ சாண்டிலர் மாசச்சூசெட்ஸ், போசுட்டன் நகரில் சேத் கார்லோ, மேரி ஆகியோருக்குப் பிறந்தார்.[1] இவர் தனது உயர்நிலைப்பள்ளி இறுதி ஆண்டில் ஃஆர்வார்டு கல்லூரி வான்காணகத்தைச் சேர்ந்த பெஞ்சமின் பெயிர்சு என்பவருக்குக் கணிதக் கணக்கீடுகளைச் செய்துள்ளார்.
இவர் ஆர்வார்டு கல்லூரியில் பயின்று 1861 இல் இளங்கலைப் பட்டம் பெற்றுள்ளார். பட்டப்படிப்பு முடிந்ததும், பெஞ்சமின் கூல்டு என்பவரிடம் உதவியாளராகப் பணிபுரிந்துள்ளார். அர்கெந்தீனா தேசிய வான்காணகத்தின் இயக்குநராகப் பணியேற்க கூல்டு சென்றபொது இவரும் அங்கிருந்து விலகினார். என்றாலும் ஆர்வார்டு கல்லுரி வான்காணகத்தில் இருந்தபடியே வானியலில் தொடர்ந்து பயில்நிலை வானியலாராக ஆய்வு செய்துள்ளார். பிறகு 1885 இல் இருந்து அவர் தனியாக ஆய்வு மேற்கொண்டுள்ளார்.
சாண்டிலர் புவிமுனைகளின் இருப்புமாற்றத்தையும் புவிமேற்பரப்பின் அகலாங்குப் புள்ளிகளின் மாற்றத்தையும் கண்டுபிடித்தார். 1891 இல் அகலாங்கு 428 நாள் சுழல்வட்டத்தில் 0.3 பாகை நொடியளவுக்கு மாறுவதாக அறிவித்தார். இம்மாற்றம் பிறகு "சாண்டிலர் தலையாட்டம்" (Chandler wobble) எனப்பட்டது.. இந்தத் துறையில் இவரது ஆய்வு ஏறத்தாழ முப்பது ஆண்டுகட்கு நீடித்துள்ளது.
சாண்டிலர் வானியற்புலத்தில் மாறுபடும் விண்மீன்கள் உட்பட பல பங்களிப்புகளை வழங்கியுள்ளார். இவர் தனித்து குறுமீன் வெடிப்பையும், T வடமுனைச் சுடர்வையும் கண்டுபிடித்துள்ளார். மேலும் ஒளிப்பிறழ்வு மாறிலியை இவர் துல்லியமாகக் கணித்துள்ளார். சிறுகோள்கள், வால்வெள்ளிகள் ஆகியவற்றின் வட்டணை அளபுருக்களையும் (Orbital parameters) கணித்துள்ளார்.
சாண்டிலருக்கு அரசு வானியற்கழகப் பொற்பதக்கம் 1896 இலும் ஜேம்சு கிரெய்கு வாட்சன் பதக்கம் 1894 இலும் வழங்கப்பட்டது. சாண்டிலர் என்று நிலாவில் உள்ள எரிமலைவாய் ஒன்று இவரது நினைவாகப் பெயரிடப்பட்டுள்ளது.
மேற்கோள்கள்
தொகு- ↑ Hockey, Thomas (2009). The Biographical Encyclopedia of Astronomers. Springer Publishing. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-387-31022-0. பார்க்கப்பட்ட நாள் ஆகத்து 22, 2012.
உசாத்துணை
தொகு- "Latitude, How American Astronomers Solved the Mystery of Variation" by Bill Carter and Merri Sue Carter, Naval Institute Press, Annapolis, MD., 2002.
வெளி இணைப்புகள்
தொகு- Biography (National Academy of Sciences)