குறுமீன் வெடிப்பு

குறுமீன் வெடிப்பு (nova) என்பது வெண் குறுமீனில் நடக்கும் மாற்றமாகும்.

விளக்கம்

தொகு
 
குறுமீன் வெடிப்பு - சிகப்பு அரக்கனிலிருந்து வெண் குறுமீன் பொருட்களை ஈர்க்கிறது

பொதுவாக இரட்டை வின்மீன்களில் ஒன்று வெண் குறுமீன் ஆகவும், மற்றொன்று சிவப்பு அரக்கன் ஆகவும் இருக்கும். ஐம்பது வருடங்களுக்கு ஒரு முறை, சிகப்பு அரக்கனிலிருந்து வெண் குறுமீன் பொருட்களை (குறிப்பாக ஹைட்ரஜன்) ஈர்க்கும். இவ்வாறு திடீரென நடக்கும் சேர்க்கையால், வெண் குறுமீன் தன்னை விண்மீன் அளவுக்கு உயர்த்திக்கொண்டு அணுச்சேர்க்கை மூலம் மீண்டும் எரியத் தொடங்கும்.[1] அணுச்சேர்க்கை முடிந்தவுடன் அதன் மேல் பாகம் குறுமீன் வெடிப்பை நிகழ்த்தும். இது பொதுவாக வெண் குறுமீனில் நடக்கும் தற்காலிக ஒளி மாற்றம் ஆகும். இந்நிகழ்வு பால் வழியில் வருடத்திற்கு 40 முறை நடப்பதாக அறியப்படுகிறது.[2]

மேற்கோள்

தொகு
  1. வான சாஸ்திரம், வேங்கடம், விகடன் பிரசுரம், ப-73, நோவா, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-89936-22-8.
  2. Prialnik, Dina (2001). "Novae". In Paul Murdin (ed.). Encyclopedia of Astronomy and Astrophysics. Institute of Physics Publishing/Nature Publishing Group. pp. 1846–1856. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-56159-268-4.

உசாத்துணை

தொகு

மேலும் வாசிக்க

தொகு
  • Payne-Gaposchkin, C. (1957). The Galactic Novae. North Holland Publishing Co.
  • Hernanz, M.; Josè, J. (2002). Classical Nova Explosions. American Institute of Physics.
  • Bode, M.F.; Evans, E. (2008). Classical Novae. Cambridge University Press.
"https://ta.wikipedia.org/w/index.php?title=குறுமீன்_வெடிப்பு&oldid=2744941" இலிருந்து மீள்விக்கப்பட்டது