மீயொலிவேகம்

ஒலியின் விரைவை விட வேகமாக (அதாவது மாக் 1 விட வேகமாக) ஒரு பொருள் செல்லும் நிலையைக் குறிப்பதே மீயொலிவேகம் ஆகும். கடல் மட்டத்தில் உலர் வானிலையில் 20 °C (68 °F) வெப்பநிலையில் காற்றில் பயணிக்கும் ஒரு பொருளுக்கு மாக் 1 என்பது (ஒலியின் விரைவு) 343 மீ/வி, 1,125 அடி/வி, 768 மைல்/மணி, 667 நாட், அல்லது 1,235 கிமீ/மணி ஆகும். ஒலியின் விரைவை விட 5 மடங்குக்கும் அதிக வேகத்தில் (அதாவது மாக் 5) பயணித்தால் அது அதிமீயொலிவேகம் என்றழைக்கப்படுகிறது. பறத்தலின் போது சில பகுதிகளில் மட்டும் பாய்வு மீயொலிவேகத்திலும் மற்ற இடங்களில் குறையொலிவேகத்திலும் இருந்தால் அது ஒலியொத்தவேகம் என்றழைக்கப்படும். இது பொதுவாக மாக் 0.8 க்கும் 1.23க்குமிடையில் நிகழ்கிறது.

U.S. Navy F/A-18 approaching the sound barrier. The white halo is formed by condensed water droplets which result from the shockwave shedding from the aircraft (see Prandtl-Glauert Singularity).[1][2]

மீட்சிமைபெறும் ஊடகங்களில் அழுத்த அலைகளாகப் பயணிக்கும் அதிர்வுகளே ஒலியாகும். வளிமங்களின் மூலக்கூறு எடை மற்றும் வெப்பநிலையைப் பொறுத்து ஒவ்வொரு திசையிலும் வெவ்வேறு திசைவேகங்களில் ஒலி பயணிக்கும், திசைவேக மாற்றத்தில் அழுத்தத்தின் விளைவு மிகச்சிறிய அளவிலானது. குத்துயரத்தைப் பொறுத்து காற்றின் பொதிவு மற்றும் வெப்பநிலையின் மாற்றத்தால் ஒரே திசைவேகத்தில் பயணிக்கும் வானூர்தியின் மாக் எண் குத்துயரத்தைப் பொறுத்து மாறுபடும். அறை வெப்பநிலையில் இருக்கும் நீரில் மீயொலிவேகம் என்பது 1,440 மீவி (4,274 அடிவி)-யை விட அதிகமான வேகமாகும்.

நொறுங்கும் பொருட்களில் ஒலியின் வேகத்தை விட அதிக வேகத்தில் பரவும் விரிசல் இயக்கம் மீயொலிவேக முறிவு எனப்படும்.

மேலும் பார்க்கதொகு

குறிப்புதவிகள்தொகு

  1. APOD: 2007 August 19 - A Sonic Boom
  2. "F-14 CONDENSATION CLOUD IN ACTION". 2007-10-29 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2012-07-11 அன்று பார்க்கப்பட்டது.

வெளியிணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=மீயொலிவேகம்&oldid=3567749" இருந்து மீள்விக்கப்பட்டது