அதிமீயொலிவேகம்

அதிகூடிய மீயொலிவேகம் காற்றியக்கவியலில் அதிமீயொலிவேகம் எனக் குறிக்கப்படுகிறது. 1970-களிலிருந்து மாக் 5-க்கும் அதிகமான வேகங்களைக் குறிப்பிட இப்பதம் பயன்படுத்தப்படுகிறது.[1][2][3]

நாசா எக்சு-43 சோதனை வானூர்தி மாக் 7-ல்
அதிமீயொலிவேகத்தின் ஒப்புச்செயலாக்கம் (மாக் 5)

அதிமீயொலிவேகம் எனக் குறிக்கப்படுவதற்கான மாக் எண் வேறுபடுகிறது, ஏனெனில் காற்றின் பண்பு மாற்றங்கள் வெவ்வேறு வேகங்களில் வெவ்வேறாக இருக்கும்; பொதுவாக மாக் எண் 5 இவ்வகைச் சூழல்களில் பயன்படுத்தப்படுகிறது. மற்றொருவகையில், திமிசுத்தாரைகள் உந்துவிசையைத் தயாரிக்க இயலாத வேகம் அதிமீயொலிவேகம் எனக் குறிக்கப்படுகிறது.

சிறப்பியல்புகள் தொகு

அதிமீயொலிவேகத்துக்கான வரையறை குழப்பமாகவும் சில வேளைகளில் விவாதத்துக்குரியதாகவும் உள்ளது, ஏனெனில் மீயொலிவேகத்துக்கும் அதிமீயொலிவேகத்துக்கும் இடையில் ஏதும் தொடர்ச்சியற்ற தன்மை இருப்பதில்லை. மீயொலிவேகப் பகுப்பாய்வுகளில் புறக்கணிக்கப்படக்கூடிய பல பண்புகள் அதிமீயொலிவேகத்தில் முக்கியத்துவம் பெறுகின்றன. அவ்வாறு முக்கியத்துவம் பெறும் அதிமீயொலிவேகத்தின் தனித்தன்மைகள்:

  1. அதிர்வுப் படலம்
  2. காற்றியக்க வெப்பமேற்றம்
  3. சிதறம் படலம்
  4. இயல்புவளிம விளைவுகள்
  5. குறைவான அடர்த்தியின் விளைவுகள்
  6. காற்றியக்க குணகங்களின் மாக் எண் சார்பற்ற தன்மை.

வெளியிணைப்புகள் தொகு

மேற்கோள்கள் தொகு

  1. Galison, P., தொகுப்பாசிரியர் (2000). Atmospheric Flight in the Twentieth Century. Springer. பக். 90. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-94-011-4379-0. https://books.google.com/books?id=qfrOBgAAQBAJ. 
  2. "Specific Heat Capacity, Calorically Imperfect Gas". Glenn Research Center. NASA. பார்க்கப்பட்ட நாள் 2019-12-27.
  3. Anderson, John (2006). Hypersonic and High-Temperature Gas Dynamics (Second ). AIAA Education Series. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:1-56347-780-7. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=அதிமீயொலிவேகம்&oldid=3752224" இலிருந்து மீள்விக்கப்பட்டது