1872
1872 (MDCCCLXXII) ஒரு திங்கட்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் நெட்டாண்டாகும், அல்லது ஜூலியன் நாட்காட்டியில் சனிக்கிழமையில் ஆரம்பமான ஒரு நெட்டாண்டு ஆகும்.
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1872 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1872 MDCCCLXXII |
திருவள்ளுவர் ஆண்டு | 1903 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2625 |
அர்மீனிய நாட்காட்டி | 1321 ԹՎ ՌՅԻԱ |
சீன நாட்காட்டி | 4568-4569 |
எபிரேய நாட்காட்டி | 5631-5632 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1927-1928 1794-1795 4973-4974 |
இரானிய நாட்காட்டி | 1250-1251 |
இசுலாமிய நாட்காட்டி | 1288 – 1289 |
சப்பானிய நாட்காட்டி | Meiji 5 (明治5年) |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 2122 |
யூலியன் நாட்காட்டி | கிரகோரியன் நாட்காட்டி 12 நாட்கள் குறைக்கப்பட்டு |
கொரிய நாட்காட்டி | 4205 |
நிகழ்வுகள்
தொகு- ஜனவரி 1 - இலங்கையில் ரூபாய், மற்றும் சதம் ஆகிய நாணயங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.
- மார்ச் 26 - கலிபோர்னியாவில் லோன் பைன் என்ற இடத்தில் 7.2 ரிக்டர் அளவு நிலநடுக்கம் பதிவு செய்யப்பட்டது.
- ஜூன் 14 - கனடாவில் தொழிற்சங்கங்கள் சட்டபூர்வமாக்கப்பட்டன.
- ஜூலை 3 - யாழ்ப்பாணக் கல்லூரி ஆரம்பிக்கப்பட்டது. இதன் முதல் அதிபராக வண. ஈ. பி. ஹேஸ்ரிங்ஸ் பதவியேற்றார்.
- செப்டம்பர் - யாழ்ப்பாண கத்தோலிக்க வாலிபர் அமைப்பு (The Jaffna Catholic Young Men's Association) யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கப்பட்டது.
- நவம்பர் 9 - மசாசுசெட்ஸ் மாநிலத்தில் பொஸ்ரன் நகரில் இடம்பெற்ற பெரும் தீயில் நகரின் பெரும் பகுதி அழிக்கப்பட்டது.
- நவம்பர் 30 - முதலாவது அனைத்துலக காற்பந்தாட்டப் போட்டி ஸ்கொட்லாந்துக்கும் இங்கிலாந்துக்கும் இடையில் இடம்பெற்றது. ஸ்கொட்லாந்து 0 இங்கிலாந்து 0.