பெப்ரவரி 5
நாள்
<< | பெப்ரவரி 2024 | >> | ||||
ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
1 | 2 | 3 | ||||
4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 |
11 | 12 | 13 | 14 | 15 | 16 | 17 |
18 | 19 | 20 | 21 | 22 | 23 | 24 |
25 | 26 | 27 | 28 | 29 | ||
MMXXIV |
பெப்ரவரி 5 (February 5) கிரிகோரியன் ஆண்டின் 36 ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 329 (நெட்டாண்டுகளில் 330) நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
தொகு- 62 – இத்தாலியின் பொம்பெயி நகரில் நிலநடுக்கம் இடம்பெற்றது.
- 756 – ஆன் லூசான் தாங் சீன அரசுக்கெதிராகக் கிளர்ச்சியில் ஈடுபட்டு, தன்னைப் பேரரசனாக அறிவித்தான்.
- 789 – முதலாம் இதிரிசு மொரோக்கோவை அப்பாசியக் கலீபகத்தில் இருந்து பிரித்து, முதலாவது மொரோக்கோ நாட்டை உருவாக்கினார்.
- 1597 – சப்பானின் ஆரம்பகால கிறித்தவர்கள் பலர் அந்நாட்டின் புதிய அரசால் சமூகத்திற்குக் கெடுதலாக இருப்பதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுக் கொல்லப்பட்டனர்.
- 1649 – முதலாம் சார்லசின் மகன் சார்லசு இசுடுவர்டை இசுக்காட்லாந்து நாடாளுமன்றம் இரண்டாம் சார்லசு என்ற பெயரில் அந்நாட்டின் மன்னனாக நாட்டில் இல்லாத நிலையில் அங்கீகரித்தது.
- 1778 – தென் கரொலைனா அமெரிக்க கூட்டமைப்பு அரசியலமைப்பை ஏற்றுக்கொண்ட இரண்டாவது மாநிலமானது.
- 1782 – எசுப்பானியப் படைகள் பிரித்தானியப் படைகளைத் தோற்கடித்து மெனோர்க்கா தீவைக் கைப்பற்றின.
- 1782 – அமெரிக்கா, ஒகைய்யோவில் பெண்கள், குழந்தைகள் உட்பட 90 அமெரிக்கப் பழங்குடிகள் வெள்ளை இனத்தவரால் படுகொலை செய்யப்பட்டனர்.
- 1782 – நான்காவது ஆங்கிலோ-இடச்சுப் போர்: பிரித்தானியர் கண்டிக்கு ஹியூ பொயிட் என்ற தமது தூதுவரைப் பேச்சுவார்த்தைக்கு அனுப்பினர்.[1][2]
- 1783 – இத்தாலியின் தெற்கே கலபிரியாவில் பெரும் நிலநடுக்கம் ஏற்பட்டதில் 32,000–50,000 பேர் வரை உயிரிழந்தனர்.
- 1807 – பிரித்தானியாவின் பிளெனைம் சாவா ஆகிய கப்பல்கள் மொரிசியசு, ரொட்ரிகசு தீவுக்கருகில் காணாமல் போயின.
- 1818 – காருல் யோவான் சுவீடன், நோர்வே மன்னராக முடிசூடினார்.
- 1852 – உருசியாவின் சென் பீட்டர்ஸ்பேர்க் நகரில் புதிய ஏர்மிட்டேச் அருங்காட்சியகம் பொது மக்களுக்குத் திறந்து விடப்பட்டது.
- 1859 – மோல்டாவியா, வலாச்சியா இளவரசர் அலெக்சாந்துரு கூசா இரு பிராந்தியங்களையும் ஒன்றிணைத்து உதுமானியப் பேரரசின் கீழ் சுயாட்சி பெற்ற மாநிலமாக மாற்றினார். இது பின்னர் இன்றைய உருமேனியா நாடானது.[3]
- 1869 – வரலாற்றில் மிகப் பெரும் வண்டல் தங்கம் ஆத்திரேலியாவில் விக்டோரியா மாநிலத்தில் கண்டுபிடிக்கப்பட்டது.
- 1885 – பெல்ஜிய மன்னன் இரண்டாம் லியோபோல்ட் கொங்கோவைத் தனது தனிப்பட்ட பிரதேசமாக ஆக்கினான்.
- 1900 – பனாமா கால்வாய் தொடர்பாக ஐக்கிய அமெரிக்காவுக்கும் ஐக்கிய இராச்சியத்துக்கும் இடையில் உடன்பாடு எட்டப்பட்டது.
- 1909 – உலகின் முதலாவது செயற்கை நெகிழி பேக்கலைட்டு கண்டுபிடிக்கப்பட்டதாக பெல்ஜிய வேதியியலாளர் லொயோ பேக்லண்டு அறிவித்தார்.
- 1917 – மெக்சிக்கோவின் தற்போதைய கூட்டாட்சி அரசியலமைப்பு எற்றுக்கொள்ளப்பட்டது.
- 1918 – ஐரோப்பாவுக்கு அமெரிக்கப் படைகளை ஏற்றிச் சென்ற துசுக்கானியா என்ற கப்பல் அயர்லாந்துக் கரையில் தாக்கப்பட்டு மூழ்கடிக்கப்பட்டது.
- 1918 – செருமனியின் விமானம் ஒன்றை அமெரிக்கா சுட்டு வீழ்த்தியது. இதுவே அமெரிக்காவின் முதலாவது வான்வழி வெற்றியாகும்.
- 1922 – ரீடர்ஸ் டைஜஸ்ட் மாதிகை முதலாவது இதழ் வெளியிடப்பட்டது.
- 1939 – இராணுவத் தளபதி பிரான்சிஸ்கோ பிராங்கோ எசுப்பானியாவின் 68-வது தலைவரானார்.
- 1941 – இரண்டாம் உலகப் போர்: நேசநாட்டுப் படைகள் எரித்திரியாவின் கெரென் நகர் மீதான தாக்குதலை ஆரம்பித்தன.
- 1958 – ஐக்கிய அமெரிக்காவின் ஜோர்ஜியாவில் சவான்னா கரைகளில் அமெரிக்க வான் படையின் ஐதரசன் குண்டு ஒன்று காணாமல் போனது. இதுவரையில் இது கண்டுபிடிக்கப்படவில்லை.
- 1958 – ஐக்கிய அரபுக் குடியரசின் முதலாவது அரசுத்தலைவராக ஜமால் அப்துல் நாசிர் நியமிக்கப்பட்டார்.
- 1960 – உருசிய மக்கள் நட்புறவுப் பல்கலைக்கழகம் மாஸ்கோவில் ஆரம்பிக்கப்பட்டது.
- 1962 – அல்சீரியாவுக்கு விடுதலை தரப்பட வேண்டும் என பிரெஞ்சு அரசுத்தலைவர் சார்லஸ் டி கோல் கோரிக்கை விடுத்தார்.
- 1971 – அப்பல்லோ 14 விண்கலத்தில் சென்ற அலன் ஷெப்பர்ட், எட்கார் மிட்ச்செல் ஆகியோருடன் சந்திரனில் தரையிறங்கினர்.
- 1975 – பெருவின் லிமா நகரில் காவல்துறையினர் பணி நிறுத்தத்தில் ஈடுபட்டதை அடுத்து அங்கு கலவரம் மூண்டது.
- 1985 – 2,131 ஆண்டுகளாக ரோம், கார்த்திஜ் நகரங்களுக்கிடையே இடம்பெற்றுவந்த போரை முடிவுக்கும் கொண்டுவரும் பொருட்டு இரு நகர முதல்வர்களுக்கும் இடையே அமைதி உடன்பாடு எட்டப்பட்டது.
- 1994 – சாரயேவோவின் சந்தைப் பகுதி ஒன்றில் எறிகணை ஒன்று வெடித்ததில் 60 பேர் வரை உயிரிழந்தனர்.
- 1997 – சுவிட்சர்லாந்தின் மூன்று முக்கிய வங்கிகள் பெரும் இனவழிப்பில் உயிர்தப்பியவர்களுக்காக $71 மில்லியன் நிதித் திட்டத்தை அறிவித்தன.
- 2000 – செச்சினியாவின் குரோசுனி புறநகரில் உருசியப் படையினர் 60 பொது மக்களைக் கொன்றனர்.
- 2004 – எயிட்டியில் புரட்சியாளர்கள் கோனாய்விசு நகரைக் கைப்பற்றினர்.
- 2008 – தெற்கத்திய ஐக்கிய அமெரிக்காவில் சூறாவளி தாக்கியதில் 57 பேர் உயிரிழந்தனர்.
பிறப்புகள்
தொகு- 1840 – ஜான் பாய்டு டன்லப், இசுக்கொட்டியத் தொழிலதிபர் (இ. 1921)
- 1908 – இல்டன் சகோதரிகள், ஆங்கிலேய ஒட்டிப் பிறந்த இரட்டையர் (இ. 1969)
- 1918 – வி. தர்மலிங்கம், இலங்கைத் தமிழ் அரசியல்வாதி (இ. 1985)
- 1924 – துரைசாமி சைமன் லூர்துசாமி, இந்தியக் கத்தோலிக்கக் கருதினால் (இ. 2014)
- 1933 – இரா. சம்பந்தன், இலங்கைத் தமிழ் அரசியல்வாதி (இ. 2024)
- 1934 – வெ. யோகேஸ்வரன், இலங்கைத் தமிழ் அரசியல்வாதி (இ. 1989)
- 1943 – மைக்கேல் மண், அமெரிக்க இயக்குநர்
- 1948 – டாம் வில்கின்சன், ஆங்கிலேய நடிகர்
- 1976 – அபிஷேக் பச்சன், இந்திய நடிகர்
- 1985 – கிறிஸ்டியானோ ரொனால்டோ, போர்த்துக்கீசக் கால்பந்து வீரர்
- 1992 – நெய்மார், பிரேசில் காற்பந்து வீரர்
இறப்புகள்
தொகு- 1597 – கொன்சாலோ கார்சியா, இந்திய உரோமன் கத்தோலிக்கப் புனிதர் (பி. 1556)
- 1898 – மு. கா. சித்திலெப்பை, இலங்கைத் தமிழறிஞர் (பி. 1838)
- 1993 – ஜோசப் எல் மேங்கியூவிஸ், அமெரிக்க இயக்குநர் (பி. 1909)
- 2000 – டி. ஜி. லிங்கப்பா, தென்னிந்தியத் திரைப்பட இசையமைப்பாளர் (பி. 1927))
- 2008 – மகேஷ் யோகி, இந்திய ஆன்மிக குரு (பி. 1918)
- 2012 – தி. சு. சதாசிவம், தமிழக எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், நடிகர் (பி. 1938)
- 2015 – கே. என். சொக்சி, இலங்கை அரசியல்வாதி (பி. 1933)
- 2021 – மா. செங்குட்டுவன், தமிழகக் கவிஞர், எழுத்தாளர், இதழாளர் (பி. 1928)
- 2023 – டி. பி. கஜேந்திரன், இந்தியத் திரைப்பட நடிகர், இயக்குநர் (பி. 1955)
சிறப்பு நாள்
தொகு- காசுமீர் ஒருமைப்பாடு நாள் (பாக்கித்தான்)
- விடுதலை நாள் (சான் மரீனோ)
- ஒற்றுமை நாள் (புருண்டி)
மேற்கோள்கள்
தொகு- ↑ Schrikker, Alicia (2007). Dutch and British Colonial Intervention in Sri Lanka, 1780-1815. Leiden, Boston. p. 114.
- ↑ "Remarkable enents". Ferguson's Ceylon Directory, Colombo. 1871.
- ↑ Stoica, Vasile (1919). The Roumanian Question: The Roumanians and their Lands. Pittsburgh Printing Company. p. 69 – via உலக மின்னூலகம்.