அலன் ஷெப்பர்ட்

அலன் பார்ட்லெட் ஷெப்பர்ட் (Alan Bartlett Shepard, நவம்பர் 18, 1923ஜூலை 21, 1998) விண்வெளிக்குச் சென்ற இரண்டாவது மனிதரும் முதலாவது அமெரிக்கரும் ஆவார். முதன் முதலாக மே 5, 1961 இல் மேர்க்குரி விண்கலத்தில் பயணம் செய்து மொத்தம் 15 நிமிடங்கள் பூமியின் சுற்று வட்டத்தில் சுற்றித் திரும்பினார். பின்னர் 1971 இல் தனது 47வது அகவையில் அப்பல்லோ 14 விண்கலத்தில் சந்திரனுக்கு சென்று சந்திரனில் நடந்த 4வது மனிதர் ஆனார்.

அலன் பார்ர்ட்லெட் ஷெப்பர்ட்
Alan Bartlett Shepard, Jr
அலன் ஷெப்பர்ட்
நாசா விண்வெளிவீரர்
தேசியம் அமெரிக்கர்
தற்போதைய நிலை காலமானார்
பிறப்பு நவம்பர் 18, 1923(1923-11-18)
டெரி, நியூ ஹாம்ப்ஷயர்,  ஐக்கிய அமெரிக்கா
இறப்பு சூலை 21, 1998(1998-07-21) (அகவை 74)
கலிபோர்னியா,  ஐக்கிய அமெரிக்கா
வேறு தொழில் விமானி
படிநிலை Rear ஆட்மிரல், அமெரிக்க கடற்படை
விண்பயண நேரம் 9நா 0ம 17நிமி 26செ
தெரிவு 1959 நாசா பிரிவு
பயணங்கள் மேர்க்குரி-ரெட்ஸ்டோன், அப்பல்லோ 14
பயண
சின்னம்

விண்வெளிப் பயணங்கள் தொகு

மேர்க்குரித் திட்டம் தொகு

1959 இல் புதிதாக உருவாக்கப்பட்ட நாசா விண்வெளி ஆய்வு நிறுவனத்தினால் விண்வெளிப் பயிற்சிக்காக அழைக்கப்பட்ட 110 பயிற்சி விமானிகளுள் செப்பர்டும் ஒருவர். மிகவும் கடினமான பயிற்சிகளின் பின்னர் மேர்க்குரி திட்டத்துக்காக தெரிவு செய்யப்பட்ட ஏழு விண்வெளி வீரர்களுள் இவரும் ஒருவர்.

 
ஃபிறீடம் 7 விண்கலத்தில் அலன் ஷெப்பர்ட்

முதலாவது அமெரிக்கராக விண்வெளிக்கு செல்லவென இவர் ஜனவரி 1961 இல் தெரிவு செய்யப்பட்டார். முதலில் அக்டோபர் 1960 இல் விண்வெளிக்குச் செல்லத் திட்டமிடப்பட்ட போதும் பல தடைகள் காரணமாக பயணம் மே 1961 இற்குத் தள்ளிப் போடப்பட்டது[1].

ஏப்ரல் 12, 1961 இல் சோவியத் விண்வெளி வீரர் யூரி ககாரின் விண்வெளிக்குச் சென்ற முதலாவது மனிதர் என்ற பெயரைப் பெற்றார்.

மே 5, 1961 இல், அலன் ஷெப்பர்ட் மேர்க்குரித் திட்டத்தின் கீழ் ஃப்றீடம் 7 (Freedom 7) என்ற விண்கலத்தில் 116 (statute miles) தூரத்திற்கு சென்றார்.

அப்பல்லோ திட்டம் தொகு

 
அப்பல்லோ 14 இல் சந்திரனுக்கு சென்ற அலன் ஷெப்பர்ட் அங்கு அமெரிக்கக் கொடியை நாட்டுகிறார்.

தனது 47வது வயதில் ஷெப்பர்ட் தனது இரண்டாவது விண்வெளிப் பயணத்தை அப்பல்லோ 14 இல் ஜனவரி 31பெப்ரவரி 9, 1971 இல் சென்றார். இதுவே வெற்றிகரமாக சந்திரனில் தரையிறங்கிய மூன்றாவது அமெரிக்கத் திட்டமாகும். சந்திரனில் இவர் தங்கியிருந்த போது குழிப்பந்து விளையாடியது குறிப்பிடத்தக்கது[2].

ஆகஸ்ட் 1, 1974 இல் இவர் நாசாவில் இருந்தும் கடற்படையில் இருந்தும் ஓய்வு பெற்றார்.

மேற்கோள்கள் தொகு

  1. Lua error in Module:Citation/CS1 at line 4419: attempt to call field 'set_message' (a nil value).
  2. "EVA-2 Closeout and the Golf Shots". நாசா. http://history.nasa.gov/alsj/a14/a14.clsout2.html. பார்த்த நாள்: May 29, 2007. 

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=அலன்_ஷெப்பர்ட்&oldid=3671661" இருந்து மீள்விக்கப்பட்டது