யூரி ககாரின்

யூரி அலெக்சியேவிச் ககாரின் (Yuri Alekseyevich Gagarin, உருசியம்: Ю́рий Алексе́евич Гага́рин; 9 மார்ச் 1934 – 27 மார்ச் 1968) உருசிய விண்வெளி வீரர் ஆவார். விண்வெளிக்கு வெற்றிகரமாகப் பயணித்த முதல் விண்வெளி வீரராவார். அத்துடன் பூமியை விண்ணில் வலம் வந்த முதல் மனிதரும் இவரே. ககாரின் 1961 ஏப்ரல் 12 அன்று சோவியத் ஒன்றியத்தின் வசுத்தோக்-1 விண்கலத்தில் பயணித்து சுமார் 108 நிமிடங்கள் விண்ணில் சஞ்சரித்தார்.

யூரி ககாரின்
Yuri Gagarin
Юрий Гагарин
யூரி ககாரின்
விண்வெளி வீரர்
தேசியம் உருசியர்
பிறப்பு (1934-03-09)மார்ச்சு 9, 1934
குளூசினோ,  சோவியத் ஒன்றியம்
இறப்பு மார்ச்சு 27, 1968(1968-03-27) (அகவை 34)
கிர்சாக்,  சோவியத் ஒன்றியம்
வேறு தொழில் விமானி
படிநிலை பல்கோவ்னிக், சோவியத் வான்படை
விண்பயண நேரம் 1 மணி, 48 நிமி
தெரிவு வான்படை குழு 1
பயணங்கள் வஸ்தோக் 1

வாழ்க்கைக் குறிப்பு

தொகு

யூரி ககாரின் உருசியாவின் சிமோலியென்சுக் மாகாணத்தில் கிசாத்ஸ்க் நகரில் (1968 இல் இந்நகரின் பெயர் ககாரின் என மாற்றப்பட்டது) குளூசினோ என்ற ஊரில் பிறந்தார்.[1] பெற்றோர் ஒரு கூட்டுப் பண்ணை ஒன்றில் பணியாற்றியவர்கள்.[2] யூரி சரத்தோவ் உயர் தொழில்நுட்பக் கல்லூரியில் தொழிற்பயிற்சி பெற்று அங்கு மென் விமான ஓட்டுநராக பகுதிநேரங்களில் பயிற்சி பெற்றார்.[3] 1955 இல் ஒரென்பூர்க் விமான ஓட்டுநர் பாடசாலையில் இணைந்து மிக்-15 போர் விமான ஓட்டுநராக பயிற்சி பெற்று வெளியேறினார்.[3] அங்கு வலென்டினா கொர்யசோவா என்பவரை சந்தித்து 1957 இல் திருமணம் புரிந்தார்.[4] அவரது முதல் பணி நோர்வே எல்லையிலுள்ள மூர்மன்ஸ்க் பகுதியில் உள்ள இராணுவ விமானத்தளத்தில் ஆரம்பமானது.[5]

சோவியத் விண்வெளித் திட்டத்தில் இணைவு

தொகு

தேர்வு மற்றும் பயிற்சி

தொகு

1960 இல் மனிதனை விண்ணுக்கு அனுப்பும் சோவியத் விண்வெளித் திட்டத்தில் இணந்துகொண்ட 20 விண்வெளி வீரர்களில் ஒருவரானார் யூரி.[2] இவர்களுக்கு அங்கு உடலியல் ரீதியிலும் உளவியல் ரீதியிலும் மிகவும் கடுமையான பயிற்சி கொடுக்கப்பட்டது. கடும் பயிற்சிக்குப் பின்னர் ககாரின், கெர்மன் டீட்டோவ் ஆகிய இருவரும் விண்வெளிப் பயணத்திற்குத் தெரிவானார்கள். இவர்களில் ககாரின் சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் உயர்பீடத்தால் விண்வெளியில் பயணிக்கும் முதல் மனிதராக அனுப்புவதற்காகத் தெரிவு செய்யப்பட்டார்.[6]

ஆகஸ்ட் 1960 ல், ககாரின் 20 விண்வெளி வீரர்களில் ஒருவராக இருந்தபோது, ஒரு சோவியத் விமானப்படை மருத்துவர் பின்வருமாறு ககாரின் ஆளுமையை மதிப்பீடு செய்தார்:

எளிமையானவர்; நகைச்சுவை உணர்வு அதிகமாகும் போது சங்கடத்துக்குள்ளாவார்; மிக உயரிய மதிநுட்பம் வளர்ந்தவராக யூரி உள்ளார்; நல்ல நினைவாற்றால்; அவரது சக பணியாளர்களிடமிருந்து சுற்றியுள்ளவற்றை தனது கூர்மையான மற்றும் மிக சிறந்த உணர்வு மூலம் வேறுபடுத்திப் பார்க்கக்கூடியவர்; நன்கு கற்பனை ஆழம் மிக்கவர்; விரைவான எதிர்வினைகள்; விடாமுயற்சியும், அவரது பணிக்காகவும் மற்றும் பயிற்சிகளுக்கும் சிரமங்களைத் தயார்செய்துகொள்பவர், வளிமண்டல இயக்கவியல் மற்றும் கணித சூத்திரங்களை எளிதாக கையாளுகிறார்; தனக்கு சரியென்று பட்டதை வெளிப்படுத்துபவர்; தனது நண்பர்களை விட வாழ்க்கையை நன்கு புறிந்து கொண்டவர்.[7]

ககாரின் தனது சகாக்களுக்குள் அனைவறாலும் பொதுவாக விரும்பப்பட்டவராக இருந்தார். அப்போது 20 விண்வெளி வீரர்களிடமும் ஒரு கேள்வி கேட்கப்பட்டது. அதாவது அவர்களுல் யார் ஒருவர் முதன் முதலில் விண்வெளியில் பறக்கப்போவது? என்ற கேள்விக்கு, அனைவருள் மூவர் ககாரின்னை தேர்வு செய்தனர். அந்த வீரர்களில் ஒருவரான யேஜெனி க்ருநோவ், ககாரின் மிகக் கவனம்முள்ளவராகவும் மற்றும் தனது தேவைகளையும் மற்றவர்களின் தேவைகளையும் பூர்த்தி செய்யக்கூடியவராக உள்ளார் என்று நம்பினார்.[8]

ககாரின் தனது வாழ்நாள் முழுவதிலும் உடல் நலனைப்பேனிக்காத்தவர், மேலும் ஒரு சிறந்த விளையாட்டு வீரராகவும் இருந்தார். விண்வெளி வீரர் வலேரி பைகோவ்ஸ்கி இவ்வாறு எழுதினார்:

விமானப்படை சேவை எங்களுக்கு உடல் ரீதியிலும் ஒழுக்க ரீதியிலும் வலுவாக இருந்தது. நாங்கள் அனைவரும் விண்வெளி வீரர்களாக இருந்தபோது விளையாட்டையும் , உடற்பயிற்சியையும் அதிதீவிரமாக எடுத்துச் சென்றோம். யூரி ககாரின் அவர்களுக்கு பனிச்சறுக்கு ஹாக்கி பிடிக்கும் என்று எனக்குத் தெரியும். கோல்கீப்பர்ராக விளையாடுவதற்கு அவர் விருப்பம் தெரிவித்தார் ... விளையாட்டுக்கள் விண்வெளி வீரர்களின் வாழ்வில் ஒரு அங்கமாகிவிட்டன என்று நான் சொன்னது தவறு இல்லை என்று நான் நினைக்கிறேன்.[9]

வஸ்தோக் 1 விண்வெளிப் பயணம்

தொகு

ககாரின் 1961 ஏப்ரல் 12 இல் வஸ்தோக் 3KA-2 (வஸ்தோக் 1) விண்கலத்தில் பயணித்து விண்வெளிக்கு சென்ற முதல் மனிதன் என்ற பெயரைப் பெற்றுக் கொண்டார்.[10] விண்கலத்தில் முதன் முதல் பூமியை ஒரு முறை வலம் வந்தார்.[10] அவரது விண்கலம் 1:48 மணி நேரம் பறந்து, பூமியைக் குவிமையப்படுத்தி நீள்வட்ட வீதியில் [Elliptical Orbit], நெடுஆரம் [Apogee] 203 மைல், குறுஆரம் [Perigee] 112 மைல் உச்சியில் சுற்றி வந்தது.

சோவியத் விண்வெளி திட்டத்திற்குப் பிறகு

தொகு
 
எகிப்து, 1962

ககாரின் விண்வெளிப் பயணம் சோவியத் விண்வெளித் திட்டத்திற்கான ஒரு வெற்றியாக இருந்தது. யூரி லெவிடன் என்பவரால் சோவியத் வானொலியில் அறிவிக்கப்பட்டது, அதே அறிவிப்பாளர் தான் (Patriotic War) தேசபக்தி போரில் அனைத்து முக்கிய நிகழ்வுகளையும் அறிவித்தார். உலகெங்கிலும் உள்ள பத்திரிகைகளில் அவரது சுயசரிதையும் மற்றும் அவரது விண்வெளிப் பயண விபரங்களும் வெளியிடப்பட்டன. சோவியத் ஒன்றியத்தில் உள்ள மாஸ்கோ மற்றம் பிற நகரங்களில் வாழும் வெகுஜன மக்கள் கொண்டாட்ட ஊர்வலங்களை நடத்தினர், இது இரண்டாம் உலகப் போரில் வெற்றிபெற்றக் கொண்டாட்டங்களுக்குப் பிறகு இதுவே மிகப்பெரிய கொண்டாட்டமாகும்.

ககாரின் பலத்த பாதுகாப்புடன் மாஸ்கோ நகரத் தெருக்கள் வழியாக கிரம்ளின் சதுக்கத்தில் நடைபெற்ற மிக்ப்பெரிய விழாவில் அழைத்து வரப்பட்டு, சோவியத் ஒன்றியத்தின் நாயகன் என்ற் பட்டம் நிகிதா குரோசேவ் அவர்களால் கொடுக்கப்பட்டு கெளவரவிக்கப்பட்டார்.

பின்னர், ககாரின் பல நாடுகளுக்கு விஜயம் செய்தார். சோவியத் ஒன்றியத்தின் முதல் மனிதன் விண்வெளிக்கு வெற்றிகறமாக அனுப்பியதை ஊக்குவிக்கும் விதமாக இத்தாலி, ஜெர்மனி, கனடா, பிரேசில், ஜப்பான், எகிப்து மற்றும் பின்லாந்து ஆகிய நாடுகளுக்கு விஜயம் செய்தார். வஸ்தோக் 1 விண்வெளிப் பயணத்திற்குப் பிறகு லண்டன் மற்றும் மான்செஸ்டரிற்கு சென்றார் அதற்கு அடுத்த மூன்று மாதங்களுக்குப் பிறகு அவர் ஐக்கிய இராச்சியத்திற்கு விஜயம் செய்தார்.

மரணம்

தொகு

27 மார்ச் 1968 அன்று, சக்கலோவ்ஸ்கி விமானத்தளத்தில் இருந்து ஒரு வழக்கமான பயிற்சியின் போது, ககாரின் மற்றும் விமான பயிற்றுவிப்பாளர் விளாடிமிர் சீரியோகின் Kirghach நகருக்கு அருகில் ஒரு MiG-15UTI விமானத்தில் பயணம் செய்யும் போது விபத்தில் இறந்தார்கள். ககாரின் மற்றும் சீரியோகின் உடல்கள் தகனம் செய்யப்பட்டு, அவர்களது சாம்பல் கிரெம்லின் சிகப்புச் சதுக்கத்தில் உள்ள சுவர்களில் புதைக்கப்பட்டது.

கெளவரவங்கள்

தொகு
 
2001 இல் வெளியிடப்பட்ட ககாரின்னை நினைவுகூரும் ரஷ்யன் ரூபிள்
 
யூரி ககாரின் சிலை இலண்டன், அட்மிரால்டி வளைவு அருகில் (இப்போது கிரீன்விச்சு)

ககாரின் விண்வெளிப் பயணம் செய்த 12 ஏப்ரல் தேதி, ஒரு சிறப்பு தேதியாக நினைவுகூரப்படுகிறது. 1962 ஆம் ஆண்டு முதல் இந்தத் நாள் சோவியத் ஒன்றியத்திலும் பின்னர் ரஷ்யாவிலும் மற்றும் பிற சோவியத் ஒன்றியத்தில்லிருந்து பிரிந்து சென்ற சில நாடுகளிலும் கொண்டாடப்படுகிறது.

2011 ஆம் ஆண்டில் இந்த நாள் ஐக்கிய நாடுகள் சபையின் மனிதன் விண்வெளி விமானத்தில் பயணம் செயத சர்வதேச தினமாக அறிவிக்கப்பட்டது.

2001 ஆம் ஆண்டு முதல், யூரி இரவு என்று ஒரு சர்வதேச தினம் கொண்டாடப்படுகிறது, ஒவ்வொரு ஏப்ரல் 12 ம் தேதி விண்வெளி ஆராய்ச்சியில் ஒரு மைல் கல் கடந்த நாளாக நினைவுகூரப்படுகிறது.

பூமியில் பல கட்டிடங்கள் மற்றும் இதர தளங்கள் ககாரின் பெயரில் பெயரிடப்பட்டுள்ளன. 1969 ஆம் ஆண்டில் நட்சத்திர நகரத்தில் உள்ள விண்வெளி வீரர்களின் பயிற்சி மையம் ககாரின் பெயரால் பெயரிடப்பட்டது. பைக்கானூர் விண்கலம் ஏவுதளம் ககாரின் பெயரால் ககாரின் துவக்கம் என்று அழைக்கப்படுகிறது. சோவியத் ஒன்றியத்தின் காலத்தில் உக்ரைன்னில் உள்ள செவஸ்டோபல் நகரத்தின் பெயர் ககாரின் ஞாபகமாக பெயரிடப்பட்டது. விமானப்படை அகாடமி (கழகம்) 1968 ஆம் ஆண்டில் ககாரின் விமானப்படை அகாடமி என மறுபெயரிடப்பட்டது.

ககாரின்னை போற்றும் விதமாக விண்வெளி வீரர்களாலும், வானியலாளர்களாலும் அவரது பெயர் நிலவில் உள்ள ஒரு பள்ளத்தாக்கிற்கு வைக்கப்பட்டுள்ளது. 1969 ஆம் ஆண்டில் அமெரிக்க விண்வெளித் திட்டத்தின் அப்பல்லோ 11 விண்கலம் மூலம் நிலவிற்குப் பயண்ம் செயத விண்வெளி வீரர்களான நீல் ஆம்ஸ்ட்ராங் மற்றும் பஸ் ஆல்டிரின் ஆகியோரும் மற்றும் சக விண்வெளி வீரர்ரான விளாடிமிர் கொமரொவ் ககாரினின் நினைவாக பதக்கங்களை கொண்ட ஒரு நினைவு பையை நிலவின் மேற்பரப்பில் விட்டு சென்றுள்ளனர்.

1971 ஆம் ஆண்டில், அப்போலோ 15 விண்கல விண்வெளி வீரர்கள் டேவிட் ஸ்காட் மற்றும் ஜேம்ஸ் இர்வின் மறைந்த விண்வெளி வீரர்களின் பட்டியலை தாங்கள் தரையிறங்கும் இடத்தில் விட்டுச் சென்றனர். இந்தப் பட்டியலில் அனைத்து அமெரிக்க விண்வெளி வீரர்கள் மற்றும் சோவியத் விண்வெளி வீரர்கள் விண்வெளி பந்தயத்தில் இறந்தவர்களின் பெயர்கள் உள்ளது. இதில் யூரி ககாரின் 14வது நபராக பட்டியலிடப்பட்டார்.

ககாரின்னை போற்றும் விதமாக அவரது உருவச் சிலைகள் பல இடங்களில் வைக்கப்பட்டுள்ளது. அதில் ஒன்று 2011 ஆம் ஆண்டில் இலண்டனில் உள்ள அட்மிரால்டி வளைவு அருகில் (இப்போது கிரீன்விச்சு), இலண்டன் வர்த்தக மையத்தில் இறுதியில் யூரி ககாரின் சிலை நிறுவப்பட்டுள்ளது.

2012 இல், அமெரிக்காவில் உள்ள ஹூஸ்டன் இல் உள்ள தெற்கு வேய்சைட் டிரைவில் நாசாவின் அசல் விண்வெளி தலைமையகத்தின் தளத்தில் ஒரு சிலை திறக்கப்பட்டது. 2011 ஆம் ஆண்டில் கலைஞர் மற்றும் விண்வெளி வீரர்ரான அலெக்ஸ்சி லியோனோவ் ஆல் செய்யப்பட்ட சிற்பம் ஹூஸ்டனுக்கு பல்வேறு ரஷ்ய அமைப்புகளால் வழங்கப்பட்டது. இந்த சிலை திறப்பு விழாவில் ஹூஸ்டன் மேயர் அன்னிசி பார்கர் , நாசா நிர்வாகி சார்லஸ் போல்ன் மற்றும் ரஷ்ய தூதர் செர்ஜி சியோக் ஆகியோர் கலந்து கொண்டனர்.[10]

மேற்கோள்கள்

தொகு
  1. Hanbury-Tenison, Robin, ed. (2010). The Great Explorers. London: Thames & Hudson. p. 270. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-500-25169-0.
  2. 2.0 2.1 Tito, Dennis (13 November 2006). "Yuri Gagarin". Time Europe via Time.com இம் மூலத்தில் இருந்து 26 March 2008 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20080326180036/http://www.time.com/time/europe/hero2006/gagarin.html. 
  3. 3.0 3.1 Rodgers, Paul (3 April 2011). "Yuri Gagarin: The man who fell to Earth". The Independent இம் மூலத்தில் இருந்து 4 April 2011 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110404093839/http://www.independent.co.uk/news/science/yuri-gagarin-the-man-who-fell-to-earth-2257505.html. 
  4. Rosenberg, Jennifer. "Yuri Gagarin: The First Man in Space". About.com. பார்க்கப்பட்ட நாள் 26 March 2013.
  5. "Юрий Алексеевич Гагарин". Astronaut.ru (in ரஷியன்). 11 July 2007. பார்க்கப்பட்ட நாள் 30 March 2008.
  6. Siddiqi 2000, p. 262.
  7. Quoted in Siddiqi 2000, p. 262.
  8. Siddiqi 2000, p. 261.
  9. Bykovsky quoted in Gavrilin 1973, p. 26-27.
  10. "Houston Mayor, NASA Administrator & Russian Ambassador Dedicate Gifts of Artworks Honoring Russian and US Space Pioneers". City of Houston. 15 October 2012 இம் மூலத்தில் இருந்து 13 August 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140813080100/http://www.houstontx.gov/municipalart/glenngagarin.html. பார்த்த நாள்: 6 February 2015. 

வெளி இணைப்புகள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Yuri Gagarin
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=யூரி_ககாரின்&oldid=3684374" இலிருந்து மீள்விக்கப்பட்டது