மேர்க்குரித் திட்டம்

மாக்டொன்னெல் மேர்க்குரி
விவரம்
திட்டம்: பூமியைச் சுற்றிவரும் விண்வெளிப்பயணம்
Crew: one, pilot
பரிமாணங்கள்
உயரம்: 11.5 அடி 3.51 மீ
விட்டம்: 6.2 அடி 1.89 மீ
கனவளவு: 60 அடி³ 1.7 மீ³
எடைகள் (MA-6)
Launch: 4,265 lb 1,935 kg
Orbit: 2,986 lb 1,354 kg
Post Retro: 2,815 lb 1,277 kg
Reentry: 2,698 lb 1,224 kg
Landing: 2,421 lb 1,098 kg
Rocket engines
Retros (solid fuel) x 3: 1,000 lbf ea 4.5 kN
Posigrade (solid fuel) x 3: 400 lbf ea 1.8 kN
RCS high (H2O2) x 6: 25 lbf ea 108 N
RCS low (H2O2) x 6: 12 lbf ea 49 N
Performance
Endurance: 34 hours 22 orbits
Apogee: 175 miles 282 km
Perigee: 100 miles 160 km
Retro delta v: 300 mph 483 km/h
Mercury capsule diagram

Mercury capsule Diagram (NASA)
McDonnell Mercury capsule

மேர்க்குரித் திட்டம் (Project Mercury) என்பது மனிதனை விண்வெளிக்கு அனுப்பும் ஐக்கிய அமெரிக்காவின் முதலாவது விண்வெளித் திட்டமாகும். இத்திட்டம் 1959 இல் ஆரம்பித்து 1963 வரை தொடர்ந்தது. மேர்க்குரி-அட்லஸ் 6 என்ற விண்கலம் பெப்ரவரி 20, 1962 இல் விண்ணுக்கு முதன் முதலில் அமெரிக்காவின் மனிதனைக் கொண்டு சென்றது.

மேர்க்குரித் திட்டத்தின் மொத்தச் செலவு $1.5 பில்லியன் ஆகும்.

மனிதரற்ற பயணங்கள்

தொகு

இத்திட்டம் மொத்தம் 20 தானியங்கிகளைக் கொண்டு சென்றது. இவற்றில் சிலவே வெற்றிகரமானதாக இருந்தன. இவற்றில் பின்வரும் 4 பயணங்களில் மனிதரல்லாத விலங்குகள் கொண்டு செல்லப்பட்டன.

  • லிட்டில் ஜோ 2 (சாம் என்ற குரங்கு டிசம்பர் 4, 1959 இல் 85 கிமீ உயரம் கொண்டு செல்லப்பட்டது)
  • லிட்டில் ஜோ 1B (மிஸ் சாம் என்ற குரங்கு ஜனவரி 21, 1960 15 கிமீ உயரம் சென்றது).
  • மேர்க்குரி-ரெட்ஸ்டோன் 2 (ஹாம் என்ற சிம்பன்சி ஜனவரி 31, 1961 இல் கொண்டு செல்லப்பட்டது).
  • மேர்க்குரி-அட்லஸ் 5 (ஏனொஸ் என்ற சிம்பன்சி நவம்பர் 29, 1961 இல் பூமியை 2 தடவைகள் சுற்றி வர அனுப்பப்பட்டது).

மனிதப் பயணங்கள்

தொகு
  • மேர்க்குரி-ரெட்ஸ்டோன் 3 - அலன் ஷெப்பர்ட், மே 5, 1961 இல் மொத்தம் 15 நிமி 28 செக் நேரம் விண்வெளியில் இருந்தார்.
  • மேர்க்குரி-அட்லஸ் 6 - ஜோன் கிளென், பெப்ரவரி 20, 1962 இல் 4 மணி 55 நிமி 23 செக் நேரம் பூமியைச் சுற்றிய முதல் மனிதர் ((3 தடவை சுற்றினார்).
  • மேர்க்குரி-அட்லஸ் 7 - ஸ்கொட் கார்பென்ரர், மே 24, 1962 இல் 4 மணி 56 நிமி 15 செக் நேரம் 3 தடவை பூமியைச் சுற்றினார்.
  • மேர்க்குரி-அட்லஸ் 8 - வொல்லி ஷீர்ரா, அக்டோபர் 3, 1962 இல் 9 மணி 13 நிமி 11 செக் நேரம் 6 தடவை பூமியைச் சுற்றினார்.
  • மேர்க்குரி-அட்லஸ் 9 - கோர்டன் கூப்பர், மே 15, 1963 இல் 1 நாள் 10 மணி 19 நிமி 49 செக் நேரம் 22 தடவை பூமியைச் சுற்றினார்.

வெளி இணைப்புகள்

தொகு
 
மேர்க்குரித் திட்ட விண்வெளிவீரர்கள்
"https://ta.wikipedia.org/w/index.php?title=மேர்க்குரித்_திட்டம்&oldid=3225763" இலிருந்து மீள்விக்கப்பட்டது