அபிசேக் பச்சன்

இந்திய நடிகர்
(அபிஷேக் பச்சன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

அபிசேக் பச்சன் (Abhishek Bachchan) (பிறப்பு 5 பிப்ரவரி 1976) ஓர் பாலிவுட் நடிகரும் திரைப்பட தயாரிப்பாளரும் ஆவார். பச்சன் குடும்பத்தின் ஒரு பகுதியான இவர் நடிகர்கள் அமிதாப் பச்சன் மற்றும் செய பாதுரி பச்சன் ஆகியோரின் மகனும் கவிஞர் ஹரிவன்சராய் பச்சன் மற்றும் சமூக ஆர்வலர் தேஜி பச்சனின் பேரனும் ஆவார்.[1]

அபிசேக் பச்சன்
2016 இல் அபிசேக் பச்சன்
பிறப்பு5 பெப்ரவரி 1976 (1976-02-05) (அகவை 47)
மும்பை, மகாராட்டிரம், இந்தியா
பணி
  • நடிகர்
  • திரைப்படத் தயாரிப்பாளர்
செயற்பாட்டுக்
காலம்
2000– தற்போது வரை
வாழ்க்கைத்
துணை
பிள்ளைகள்1
கையொப்பம்

நடிப்பு தொகு

அபிசேக் பச்சன் ரெஃப்யூஜி (2000) என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். அதைத் தொடர்ந்து பல படங்களில் நடித்தாலும் அவை அனைத்தும் தோல்வியில் முடிந்தது. பின்னர், 2004 இல் தூம் என்ற அதிரடித் திரைப்படத்துடன் இவரது தொழில் வாழ்க்கை மாறியது. மேலும் யுவா (2004)[2] , சர்கார் (2005), மற்றும் கபி அல்விதா நா கெஹ்னா (2006) ஆகிய படங்களில் நடித்ததற்காக விமர்சன ரீதியான பாராட்டுகளைப் பெற்றார். சிறந்த துணை நடிகருக்கான மூன்று தொடர்ச்சியான பிலிம்பேர் விருதுகளை வென்றார். பன்டி அவுர் பாப்லி (2005) மற்றும் குரு (2007) ஆகிய படங்களின் மூலம் கதாநாயகனாக இவருக்கு மிகப்பெரிய வெற்றிகள் கிடைத்தன.

பச்சனின் மற்ற வணிகரீதியாக வெற்றிபெற்ற படங்களில் தஸ் (2005), தூம் 2 (2006) மற்றும் தூம் 3 (2013) ஆகிய அதிரடித் திரைப்படங்களும், நகைச்சுவைப் படங்களான பிளப்மாஸ்டர்! (2005), தோஸ்தானா (2008), போல் பச்சன் (2012), ஹாப்பி நியூ இயர் (2014) மற்றும் ஹவுஸ்ஃபுல் 3 (2016) ஆகியவை அடங்கும். [3] இவர் ப்ரீத்: இன்டூ த ஷேடோஸ் (2020), லுடோ (2020) மற்றும் தாஸ்வி (2022) போன்ற முயற்சிகளில் நடித்துள்ளார்.

விருதுகள் தொகு

பச்சன் மூன்று பிலிம்பேர் விருதுகளுக்கு மேலதிகமாக, பா (2009) என்ற நகைச்சுவை நாடகத்தை தயாரித்ததற்காக இந்தியில் சிறந்த திரைப்படத்திற்கான தேசிய திரைப்பட விருதை வென்றார்.

திருமணம் தொகு

2007 இல் நடிகை ஐஸ்வர்யா ராயை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். [4] [5]

சான்றுகள் தொகு

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=அபிசேக்_பச்சன்&oldid=3807164" இருந்து மீள்விக்கப்பட்டது