ஐஸ்வர்யா ராய் (நடிகை)

இந்திய நடிகை

ஐஸ்வர்யா ராய் (பி. நவம்பர் 1, 1973) பிரபல இந்திய நடிகை. 1994 இல் உலக அழகியாகத் தேர்வு செய்யப்பட்டவர். இந்தி, தமிழ், பெங்காலி, ஆங்கில மொழிப் படங்களில் நடித்து வருகிறார். மணிரத்னத்தின் இருவர் படத்தில் அறிமுகமானார். இவர் 2007 ஆம் ஆண்டு அபிஷேக் பச்சனைத் திருமணம் செய்துக்கொண்டார்.

ஐஸ்வர்யா ராய் பச்சன்

லாங்கீன்ஸ் கடிகார வெளியீட்டு விழாவில் (2007)
இயற் பெயர் ஐஸ்வர்யா ராய்
பிறப்பு நவம்பர் 1, 1973 (1973-11-01) (அகவை 50)
மங்களூர், கர்நாடகா, இந்தியா
துணைவர் அபிசேக் பச்சன் (2007 - தற்போதுவரை)

ஆரம்பகால வாழ்க்கை தொகு

ஐஸ்வர்யா கர்நாடகவில் உள்ள மங்களூர் நகரில் ஒரு துளு பேசும் பன்ட் குடும்பத்தில் பிறந்தார். இவரது தந்தை கிருஷ்ணராஜ் மற்றும் தாயார் பிருந்தா. மூத்த சகோதரர் ஆதித்யா ராய் வணிக கடற்படையில் பொறியாளராக உள்ளார்.

ராய் குடும்பம் மும்பைக்கு குடிபெயர்ந்தது அங்கு ஆர்யா வித்யா மந்திர் உயர்நிலை பள்ளியில் பயின்றார்.

சொந்த வாழ்க்கை தொகு

ஐஸ்வர்யா 1999ஆம் ஆண்டு முதல் இந்தி நடிகர் சல்மான்கானுடன் "Dating" எனப்படும் மேற்கத்திய கலாசார உறவில் இணைந்திருந்தார். இந்த நிகழ்வு இந்திய செய்தித்தாள்கள் மற்றும் ஊடகங்களில் அதிகம் இடம்பெற்றது பின்னர் இந்த இணை 2001ஆம் ஆண்டு பிரிந்தனர். இந்த இணை பிரிந்த பொழுது ராய் பல்வேறு வகையில் துன்புற்றதாக ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டன பின்னர் சல்மான்கான் இந்த செய்தியை டைம்ஸ் ஆஃப் இந்தியா கட்டுரையில் மறுத்துப் பேசியிருந்தார்.

2007ஆம் ஆண்டு ராய் இந்தி நடிகரும் அமிதாப் பச்சனின் மகனுமான அபிஷேக் பச்சனை மணமுடித்தார் இவர்களது நிச்சயதார்த்த அறிவிப்பு 2007ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 14ஆம் நாள் வெளியிடப்பட்டது. பின்னர் அதே ஆண்டு ஏப்ரல் 20ஆம் தேதி இவர்களது திருமணம் பன்ட் குடும்ப முறைப்படி நடந்தேறியது.

திரைப்பட வாழ்க்கை தொகு

ஆரம்பகாலம் (1997-98) தொகு

இவர் 1997 ம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் இருவர் திரைப்படத்தின் மூலம் திரை உலகிற்கு அறிமுகம் செய்யபட்டார், இப்படத்தில் இவர் மோகன்லால் அவர்களுடன் இணைந்து பணியாற்றினார். ராய் அரசியல் தலைவர் மற்றும் முன்னாள் நடிகை ஜெ. ஜெயலலிதா வேடங்களில் நடித்தார்.

இவர் நடித்துள்ள தமிழ்த் திரைப்படங்கள் தொகு

வருடம் தலைப்பு மொழி கதாபாத்திரம் Notes
1997 இருவர் தமிழ் புஷ்பா / கல்பனா தெலுங்கில் இட்டரு
1997 அவுர் பியார்ஹோ கயா இந்தி ஆஷி கபூர்
1998 ஜீன்ஸ் தமிழ் மதுமிதா / வைஷ்ணவி இந்தியில் அதே தலைப்பில் மொழிமாற்றம் செய்யப்பட்டது.
1999 ஆப் லாட் சாலன் இந்தி பூஜா
1999 ஹம் தில் தே சுகே சனம் இந்தி நந்தினி பிலிம்ஃபேர் சிறந்த நடிகைக்கான விருது
1999 ரவோயி சந்தமாமா தெலுங்கு சிறப்பு தோற்றம்
1999 தாள் இந்தி மன்சி பரிந்துரைப்பு-பிலிம்ஃபேர் சிறந்த நடிகைக்கான விருது
தமிழில் தாளம்
2000 மேளா இந்தி சம்பகழி சிறப்பு தோற்றம்
2000 கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் தமிழ் மீனாக்ஷி பாலா தெலுங்கில் ப்ரியுரலு பிளிசிண்டி
2000 ஜோஷ் இந்தி ஷிர்லி
2000 ஹமாரா தில் ஆப்கே பாஸ் ஹாய் இந்தி ப்ரீதி விராத் பரிந்துரைப்பு-பிலிம்ஃபேர் சிறந்த நடிகைக்கான விருது
2000 தாய் அக்ஷார் பிரேம் கே இந்தி சாஹிபா கிரேவல்
2000 முஹபத்தீன் இந்தி மேகா பரிந்துரைப்பு-பிலிம்ஃபேர் சிறந்த நடிகைக்கான விருது
2001 அல்பேலா இந்தி சோனியா
2002 ஹம் துமாரே ஹெய்ன் சனம் இந்தி சுமன் சிறப்பு தோற்றம்
2002 ஹம் கிசிசே கும் நஹி இந்தி கோமல் ரஸ்தோகி
2002 23 மார்ச் 1931:ஷாஹீத் இந்தி சிறப்பு தோற்றம்
2002 தேவ்தாஸ் இந்தி பார்வதி (பாரு) பிலிம்ஃபேர் சிறந்த நடிகைக்கான விருது
2002 சக்தி இந்தி ஐஸ்வர்யா ராய் சிறப்பு தோற்றம்
2003 சோகர் பலி வங்காளம் பிநோதினி
2003 தில் க ரிஷ்தா இந்தி தியா ஷர்மா
2003 குச் நா கஹோ இந்தி நம்ரதா ஸ்ரீவத்சவ்
2004 ப்ரைட் & ப்ரேசுடீஸ் ஆங்கிலம் லலிதா பக்ஷி இந்தியில் பல்லே பல்லே அம்ரிட்சர் டூ எல்.ஏ
2004 காக்கி இந்தி மகாலட்சுமி
2004 க்யூன்..! ஹோகயா நா இந்தி தியா மல்ஹோத்ரா
2004 ரெயின்கோட் இந்தி நீரஜா பரிந்துரைப்பு-பிலிம்ஃபேர் சிறந்த நடிகைக்கான விருது
2005 சப்த் இந்தி அந்தரா வஷிஸ்ட்/தமன்னா
2005 பியூட்டி அவுர் பப்ளீ இந்தி சிறப்பு தோற்றம்
2005 தி மிஸ்ட்ரஸ் ஆஃப் ஸ்பீசிஸ் ஆங்கிலம் திலோ
2006 உம்ராவ் ஜான் இந்தி உம்ராவ் ஜான்
2006 தூம் 2 இந்தி சுநேஹ்ரி பரிந்துரைப்பு-பிலிம்ஃபேர் சிறந்த நடிகைக்கான விருது
2007 குரு இந்தி சுஜாதா பரிந்துரைப்பு-பிலிம்ஃபேர் சிறந்த நடிகைக்கான விருது
தமிழில் குரு மற்றும் தெலுங்கில் குரு காந்த்
2007 ப்ரவோக்ட் ஆங்கிலம் கிரண்ஜித் அலுவாலியா இந்தியில் ப்ரவோக்ட்
2007 தி லாஸ்ட் லிஜின் ஆங்கிலம் மீரா
2008 ஜோதா அக்பர் இந்தி ஜோதா பாய் பரிந்துரைப்பு-பிலிம்ஃபேர் சிறந்த நடிகைக்கான விருது
தமிழ் மற்றும் தெலுங்கில் அதே தலைப்பில் வெளிவந்தது
2008 சர்கார் ராஜ் இந்தி அனிதா ராஜன்
2009 தி பிங்க் பாந்தர் 2 ஆங்கிலம் சோனியா சொலன்ட்ராஸ் பிரெஞ்ச் மொழியில் La Pantera Rosa 2
2010 ராவண் இந்தி ராகினி ஷர்மா
2010 ராவணன் தமிழ் ராகினி சுப்ரமணியம் தெலுங்கில் வில்லன்
2010 எந்திரன் தமிழ் சனா தெலுங்கில் ரோபோ இந்தியில் ரோபோட்
2010 ஆக்சன் ரீப்ளே இந்தி மாலா
2010 குஜாரிஷ் இந்தி சோபியா டிசௌஸா பரிந்துரைப்பு-பிலிம்ஃபேர் சிறந்த நடிகைக்கான விருது
2012 லேடீஸ் அண்ட் ஜென்டில்மேன் இந்தி
2012 ஹீரோயின் இந்தி மகி கண்ணா

மேற்கோள்கள் தொகு

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஐஸ்வர்யா_ராய்_(நடிகை)&oldid=3916557" இலிருந்து மீள்விக்கப்பட்டது