தேவ்தாஸ் (2002 திரைப்படம்)

தேவ்தாஸ் திரைப்படம் 2002 ஆம் ஆண்டில் 10.9 மில்லியன் அமெரிக்க டாலர்கள் கொண்டு தயாரிக்கப்பட்ட மேலும் இந்தியாவில் 2002 வரை அதிக பணம் கொண்டு தயாரிக்கப்பட்ட ஹிந்தித் திரைப்படமும் ஆகும்.

தேவ்தாஸ்
இயக்கம்சஞ்சேய் லீலா பன்சாலி
தயாரிப்புபரத் சா
கதைசரத் சந்திர சட்டோபத்யேய் (நொவெல்லா)
சஞ்சேய் லீலா பன்சாலி (திரைக்கதை)
இசைஇஷ்மாயில் தர்பார்
நடிப்புஷா ருக் கான்
மாதூரி தீக்சீத்
ஜஸ்வர்யா ராய்
ஒளிப்பதிவுபினோத் பிரதன்
படத்தொகுப்புபெல்லா சேகல்
விநியோகம்Eros International Ltd. (பிரித்தானியா)
வெளியீடு23 வைகாசி 2002 (கேன்ஸ்)
12 ஆவடி 2002 (இந்தியா)
ஓட்டம்182 நிமிடங்கள்.
மொழிஹிந்தி/உருது
ஆக்கச்செலவுரூபா 1,000,000,000

வகை தொகு

நாடகப்படம் / காதல்படம்

கதை தொகு

கதைச்சுருக்க எச்சரிக்கை: கதைச்சுருக்கம் மற்றும்/அல்லது கதை முடிவு விவரங்கள், கீழே தரப்பட்டுள்ளன.

லண்டனிலிருந்து இந்தியாவிற்கு புறப்படும் தேவ்தாஸ் (ஷா ருக் கான்) அங்கு சிறுவயது தோழியான அண்டை வீட்டுத் தோழியான பார்வதியைச் (ஜஸ்வர்யா ராய்) சந்தித்துக்கொள்கின்றார்.இவரை வரவேற்கும் பார்வதியின் பெற்றோர் பார்வதிக்கே தேவ்தாஸைத் திருமணம் செய்து வைப்பதென ஏற்பாடு செய்கின்றனர்.ஆனால் தேவ்தாஸின் சகோதரியோ பார்வதியின் தாயார் ஒரு கூத்தாட்டக்காரி என்றும் மேலும் பார்வதியத் திருமணம் செய்து கொண்டால் கௌரவம் குறைந்துவிடும் எனவும் கூறுகின்றார்.இதனைக் கேட்டு கோபம் கொள்ளும் பார்வதியின் தாயும் பார்வதிக்கு வேறு மாப்பிள்ளையைப் பார்க்கின்றனர்.தேவ்தாஸும் தனது இறுதி மூச்சுவரை பார்வதியை நினைத்து மது அருந்தியே தன் உயிரை மாய்த்துக் கொள்கின்றார்.