இருவர் (திரைப்படம்)

மணிரத்னம் இயக்கத்தில் 1997 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்
(இருவர் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

இருவர் (Iruvar) திரைப்படம் 1997 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் மோகன்லால், பிரகாஷ் ராஜ், நாசர் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[2]

இருவர்
இயக்கம்மணிரத்னம்
தயாரிப்புமணிரத்னம்
சுகாசினி
கதைமணிரத்னம்,
சுகாசினி
இசைஏ.ஆர்.ரஹ்மான்
நடிப்புமோகன்லால்
தபு
பிரகாஷ் ராஜ்
கௌதமி[1]
ஐஸ்வர்யா ராய்
நாசர்
படத்தொகுப்புசுரேஷ் அர்ஸ்
விநியோகம்மெட்ராஸ் டாக்கீஸ்
வெளியீடுஜனவரி 14, 1997
ஓட்டம்140 நிமிடங்கள்
நாடு இந்தியா
மொழிதமிழ்

கலைப்படம் / நாடகப்படம் / உண்மைப்படம்

கதைச்சுருக்க எச்சரிக்கை: கதைச்சுருக்கம் மற்றும்/அல்லது கதை முடிவு விவரங்கள், கீழே தரப்பட்டுள்ளன.

திரைப்பட நடிகராக வேண்டுமென்ற கனவுகளோடு வாழ்பவர் ஆனந்தன் (மோகன்லால்). இவருடைய கனவுகளை நிறைவேற்றும் வகையில் இவருடைய நண்பராகத் திகழ்கின்றார் கவிஞரான தமிழ்ச்செல்வம் (பிரகாஷ் ராஜ்). இருவரும் சமுதாயத்தில் மாற்றங்கள் ஏற்பட தங்களின் பழக்கப்பட்ட ஊடகங்களான கவிதை ஆற்றலின் மூலமும், நடிப்பாற்றலின் மூலமும் தெரிவித்து மக்களின் மனங்களைக் கவருகின்றனர். எழுத்தாளரான தமிழ்ச்செல்வன் அரசியலில் தன்னை ஈடுபடுத்திக்கொள்கின்றார். தொடர்ந்து நடிகர் ஆனந்தனும் தமிழ்ச்செல்வன் உள்ள கட்சியில் சேர்ந்துகொள்கின்றார். இவர்கள் கட்சித் தலைவராகவிருந்த வேலுத்தம்பி (நாசர்) மரணத்திற்குப் பின்னர் இருவரிடையே பதவி ஆசை குடிகொள்ளத்தொடங்கியது. முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ்ச்செல்வனின் கட்சியில் உள்ளவர்களின் சொத்துக்களின் விபரங்களை மக்களுக்குத் தெரிவிக்கவேண்டுமென்று ஆனந்தன் எடுத்துரைக்கும்பொழுதிலிருந்து தமிழ்ச்செல்வனும், ஆனந்தும் பகைவர்களாகின்றனர். இதன்பின்னர் மத்திய அரசுடன் கூட்டு சேர்ந்து தனக்கென புதிய கட்சியொன்றினை ஆரம்பிக்கின்றார் ஆனந்தன். அவர் தனது கட்சி சார்பான கருத்துக்களை தனக்குச் சாதகமான ஊடகமான திரைப்படங்கள் மூலம் மக்களுக்கு விளம்பரம் செய்கின்றார். மக்கள் அவர் திரைப்படங்கள் மீதும் அவர் மீதும் கொண்டிருந்த பற்றுதல்கள் காரணமாக தேர்தலில் வெற்றிபெற்று முதல்வர் பதவியை ஏற்கின்றார். இதன் பின்னர் தன் அதிகாரத்தினைப்பயன்படுத்தி தமிழ்ச்செல்வனை சிறையில் அடைக்கவும் செய்கின்றார். இறுதியில் அவர் இறக்கும் சமயம் அவரின் பூதவுடலைப் பார்க்க வரும் தமிழ்ச்செல்வன் தன் நண்பனின் உடலைக்கூடப் பார்க்கமுடியாது போகவே மனம் நொந்து தன் நண்பனைத் தன் கவியினால் அரவணைத்துக்கொள்கின்றார்.

விருதுகள்

தொகு

1998 தேசிய திரைப்பட விருது (இந்தியா)

மேற்கோள்கள்

தொகு

நூல் பட்டியல்

தொகு
  • Dhananjayan, G. (2014). Pride of Tamil Cinema: 1931–2013. Blue Ocean Publishers. இணையக் கணினி நூலக மைய எண் 898765509.
  • Rangan, Baradwaj (2012). Conversations with Mani Ratnam. India: Penguin Books. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-670-08520-0.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=இருவர்_(திரைப்படம்)&oldid=4008178" இலிருந்து மீள்விக்கப்பட்டது