ஐஸ்வர்யா ராய் (நடிகை)
ஐஸ்வர்யா ராய் (பி. நவம்பர் 1, 1973[1]) பிரபல இந்திய நடிகை. 1994 இல் உலக அழகியாகத் தேர்வு செய்யப்பட்டவர். இந்தி, தமிழ், பெங்காலி, ஆங்கில மொழிப் படங்களில் நடித்து வருகிறார். மணிரத்னத்தின் இருவர் படத்தில் அறிமுகமானார். இவர் 2007 ஆம் ஆண்டு அபிஷேக் பச்சனைத் திருமணம் செய்துக்கொண்டார்.
ஐஸ்வர்யா ராய் பச்சன் | ||||||
---|---|---|---|---|---|---|
2023இல் | ||||||
இயற் பெயர் | ஐஸ்வர்யா ராய் | |||||
பிறப்பு | நவம்பர் 1, 1973 மங்களூர், கர்நாடகா, இந்தியா | |||||
துணைவர் | அபிசேக் பச்சன் (2007 - தற்போதுவரை) | |||||
|
ஆரம்பகால வாழ்க்கை
தொகுஐஸ்வர்யா கர்நாடகவில் உள்ள மங்களூர் நகரில் ஒரு துளு பேசும் பன்ட் குடும்பத்தில் பிறந்தார்.[2] இவரது தந்தை கிருஷ்ணராஜ் மற்றும் தாயார் பிருந்தா. மூத்த சகோதரர் ஆதித்யா ராய் வணிக கடற்படையில் பொறியாளராக உள்ளார்.
ராய் குடும்பம் மும்பைக்கு குடிபெயர்ந்தது அங்கு ஆர்யா வித்யா மந்திர் உயர்நிலை பள்ளியில் பயின்றார்.
சொந்த வாழ்க்கை
தொகுஐஸ்வர்யா 1999ஆம் ஆண்டு முதல் இந்தி நடிகர் சல்மான்கானுடன் "Dating" எனப்படும் மேற்கத்திய கலாசார உறவில் இணைந்திருந்தார். இந்த நிகழ்வு இந்திய செய்தித்தாள்கள் மற்றும் ஊடகங்களில் அதிகம் இடம்பெற்றது பின்னர் இந்த இணை 2001ஆம் ஆண்டு பிரிந்தனர். இந்த இணை பிரிந்த பொழுது ராய் பல்வேறு வகையில் துன்புற்றதாக ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டன பின்னர் சல்மான்கான் இந்த செய்தியை டைம்ஸ் ஆஃப் இந்தியா கட்டுரையில் மறுத்துப் பேசியிருந்தார்.
2007ஆம் ஆண்டு ராய் இந்தி நடிகரும் அமிதாப் பச்சனின் மகனுமான அபிஷேக் பச்சனை மணமுடித்தார் இவர்களது நிச்சயதார்த்த அறிவிப்பு 2007ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 14ஆம் நாள் வெளியிடப்பட்டது. பின்னர் அதே ஆண்டு ஏப்ரல் 20ஆம் தேதி இவர்களது திருமணம் பன்ட் குடும்ப முறைப்படி நடந்தேறியது.
திரைப்பட வாழ்க்கை
தொகுஆரம்பகாலம் (1997-98)
தொகுஇவர் 1997 ம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் இருவர் திரைப்படத்தின் மூலம் திரை உலகிற்கு அறிமுகம் செய்யபட்டார், இப்படத்தில் இவர் மோகன்லால் அவர்களுடன் இணைந்து பணியாற்றினார். ராய் அரசியல் தலைவர் மற்றும் முன்னாள் நடிகை ஜெ. ஜெயலலிதா வேடங்களில் நடித்தார்.
இவர் நடித்துள்ள தமிழ்த் திரைப்படங்கள்
தொகுவருடம் | தலைப்பு | மொழி | கதாபாத்திரம் | Notes |
---|---|---|---|---|
1997 | இருவர் | தமிழ் | புஷ்பா / கல்பனா | தெலுங்கில் இட்டரு |
1997 | அவுர் பியார்ஹோ கயா | இந்தி | ஆஷி கபூர் | |
1998 | ஜீன்ஸ் | தமிழ் | மதுமிதா / வைஷ்ணவி | இந்தியில் அதே தலைப்பில் மொழிமாற்றம் செய்யப்பட்டது. |
1999 | ஆப் லாட் சாலன் | இந்தி | பூஜா | |
1999 | ஹம் தில் தே சுகே சனம் | இந்தி | நந்தினி | பிலிம்ஃபேர் சிறந்த நடிகைக்கான விருது |
1999 | ரவோயி சந்தமாமா | தெலுங்கு | சிறப்பு தோற்றம் | |
1999 | தாள் | இந்தி | மன்சி | பரிந்துரைப்பு-பிலிம்ஃபேர் சிறந்த நடிகைக்கான விருது தமிழில் தாளம் |
2000 | மேளா | இந்தி | சம்பகழி | சிறப்பு தோற்றம் |
2000 | கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் | தமிழ் | மீனாக்ஷி பாலா | தெலுங்கில் ப்ரியுரலு பிளிசிண்டி |
2000 | ஜோஷ் | இந்தி | ஷிர்லி | |
2000 | ஹமாரா தில் ஆப்கே பாஸ் ஹாய் | இந்தி | ப்ரீதி விராத் | பரிந்துரைப்பு-பிலிம்ஃபேர் சிறந்த நடிகைக்கான விருது |
2000 | தாய் அக்ஷார் பிரேம் கே | இந்தி | சாஹிபா கிரேவல் | |
2000 | முஹபத்தீன் | இந்தி | மேகா | பரிந்துரைப்பு-பிலிம்ஃபேர் சிறந்த நடிகைக்கான விருது |
2001 | அல்பேலா | இந்தி | சோனியா | |
2002 | ஹம் துமாரே ஹெய்ன் சனம் | இந்தி | சுமன் | சிறப்பு தோற்றம் |
2002 | ஹம் கிசிசே கும் நஹி | இந்தி | கோமல் ரஸ்தோகி | |
2002 | 23 மார்ச் 1931:ஷாஹீத் | இந்தி | சிறப்பு தோற்றம் | |
2002 | தேவ்தாஸ் | இந்தி | பார்வதி (பாரு) | பிலிம்ஃபேர் சிறந்த நடிகைக்கான விருது |
2002 | சக்தி | இந்தி | ஐஸ்வர்யா ராய் | சிறப்பு தோற்றம் |
2003 | சோகர் பலி | வங்காளம் | பிநோதினி | |
2003 | தில் க ரிஷ்தா | இந்தி | தியா ஷர்மா | |
2003 | குச் நா கஹோ | இந்தி | நம்ரதா ஸ்ரீவத்சவ் | |
2004 | ப்ரைட் & ப்ரேசுடீஸ் | ஆங்கிலம் | லலிதா பக்ஷி | இந்தியில் பல்லே பல்லே அம்ரிட்சர் டூ எல்.ஏ |
2004 | காக்கி | இந்தி | மகாலட்சுமி | |
2004 | க்யூன்..! ஹோகயா நா | இந்தி | தியா மல்ஹோத்ரா | |
2004 | ரெயின்கோட் | இந்தி | நீரஜா | பரிந்துரைப்பு-பிலிம்ஃபேர் சிறந்த நடிகைக்கான விருது |
2005 | சப்த் | இந்தி | அந்தரா வஷிஸ்ட்/தமன்னா | |
2005 | பியூட்டி அவுர் பப்ளீ | இந்தி | சிறப்பு தோற்றம் | |
2005 | தி மிஸ்ட்ரஸ் ஆஃப் ஸ்பீசிஸ் | ஆங்கிலம் | திலோ | |
2006 | உம்ராவ் ஜான் | இந்தி | உம்ராவ் ஜான் | |
2006 | தூம் 2 | இந்தி | சுநேஹ்ரி | பரிந்துரைப்பு-பிலிம்ஃபேர் சிறந்த நடிகைக்கான விருது |
2007 | குரு | இந்தி | சுஜாதா | பரிந்துரைப்பு-பிலிம்ஃபேர் சிறந்த நடிகைக்கான விருது தமிழில் குரு மற்றும் தெலுங்கில் குரு காந்த் |
2007 | ப்ரவோக்ட் | ஆங்கிலம் | கிரண்ஜித் அலுவாலியா | இந்தியில் ப்ரவோக்ட் |
2007 | தி லாஸ்ட் லிஜின் | ஆங்கிலம் | மீரா | |
2008 | ஜோதா அக்பர் | இந்தி | ஜோதா பாய் | பரிந்துரைப்பு-பிலிம்ஃபேர் சிறந்த நடிகைக்கான விருது தமிழ் மற்றும் தெலுங்கில் அதே தலைப்பில் வெளிவந்தது |
2008 | சர்கார் ராஜ் | இந்தி | அனிதா ராஜன் | |
2009 | தி பிங்க் பாந்தர் 2 | ஆங்கிலம் | சோனியா சொலன்ட்ராஸ் | பிரெஞ்ச் மொழியில் La Pantera Rosa 2 |
2010 | ராவண் | இந்தி | ராகினி ஷர்மா | |
2010 | ராவணன் | தமிழ் | ராகினி சுப்ரமணியம் | தெலுங்கில் வில்லன் |
2010 | எந்திரன் | தமிழ் | சனா | தெலுங்கில் ரோபோ இந்தியில் ரோபோட் |
2010 | ஆக்சன் ரீப்ளே | இந்தி | மாலா | |
2010 | குஜாரிஷ் | இந்தி | சோபியா டிசௌஸா | பரிந்துரைப்பு-பிலிம்ஃபேர் சிறந்த நடிகைக்கான விருது |
2012 | லேடீஸ் அண்ட் ஜென்டில்மேன் | இந்தி | ||
2012 | ஹீரோயின் | இந்தி | மகி கண்ணா |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Aishwarya Rai Bachchcan to celebrate 42nd birthday with husband Abhishek and daughter Aaradhya". The Indian Express. 1 November 2015 இம் மூலத்தில் இருந்து 4 November 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20151104011114/http://indianexpress.com/article/entertainment/bollywood/aishwarya-rai-bachchcan-42nd-birthday-husband-abhishek-daughter-aaradhya/.
- ↑ ANI (27 December 2010). "Aishwarya Rai, Abhishek Bachchan participate in event organised by Bunt community". Daily News and Analysis இம் மூலத்தில் இருந்து 7 August 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120807150345/http://www.dnaindia.com/entertainment/report_aishwarya-rai-abhishek-bachchan-participate-in-event-organised-by-bunt-community_1486838.
வெளி இணைப்புகள்
தொகு- ஐஸ்வர்யா ராய் வாழ்க்கை வரலாறு பரணிடப்பட்டது 2015-04-18 at the வந்தவழி இயந்திரம்