சல்மான் கான்
அப்துல் ரசீத் சலீம் சல்மான் கான் (Abdul Rashid Salim Salman Khan) (பிறப்பு: டிசம்பர் 27,1965)[1] இவர் ஒரு இந்திய நடிகரும், திரைப்படத் தயாரிப்பாளரும் மற்றும் தொலைக்காட்சி ஆளுமையும் ஆவார். இவர் பெரும்பாலும் இந்தித் திரைப்படங்களில் பணியாற்றுகிறார். மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக நீடித்த வாழ்க்கையில், கான் ஒரு திரைப்பட தயாரிப்பாளராக இரண்டு தேசிய திரைப்பட விருதுகள் மற்றும் ஒரு நடிகராக இரண்டு பிலிம்பேர் விருதுகள் உட்பட பல விருதுகளைப் பெற்றுள்ளார்.[2] இந்தியத் திரைப்படத் துறையில் வணிக ரீதியாக மிகவும் வெற்றிகரமான நடிகர்களில் ஒருவராக இவர் ஊடகங்களில் குறிப்பிடப்படுகிறார்.[3][4] அமெரிக்க வணிக இதழான போர்ப்ஸ் 2015 மற்றும் 2018 ஆம் ஆண்டுகளில் உலகின் அதிக சம்பளம் வாங்கும் பிரபலங்களின் பட்டியலில் இவரை சேர்த்துள்ளது. பிந்தைய ஆண்டில் இவர் மிக உயர்ந்த தரவரிசை கொண்ட இந்தியராக இருந்தார்.[5][6][7][8] கான் 10 தனிப்பட்ட ஆண்டுகளில் வருடாந்திர அதிக வசூல் செய்த இந்தி படத்தில் நடித்துள்ளார். இது எந்தவொரு நடிகருக்கும் மிக உயர்ந்ததாகும்.[9]
சல்மான் கான் | |
---|---|
2023 இல் சல்மான் கான் | |
தொழில் |
|
பெற்றோர் |
|
உறவினர் |
|
இவர் ஒரு உடற்பயிற்சி ஆர்வலர் என்பதால் தனது பயிற்சியின் மூலம் தனது உடலை பராமரிக்கிறார்.[10][11]
இளமை வாழ்க்கை
தொகுபுகழ்பெற்ற திரைக்கதை எழுத்தாளரான சலீம் கான் மற்றும் அவர் முதல் மனைவி சல்மா கானுக்கு (மணமாவதற்கு முன்னிருந்த பெயர் சுசீலா சரக்) பிறந்த மூத்த மகனாவார். 27 டிசம்பர் 1965 அன்று மூத்த மகனாகப் பிறந்தார்.[12][13] [14] 1981 ஆம் ஆண்டில், சலீம் கான் நடிகை ஹெலனை மணந்தபோது, அவர்களின் தந்தையுடனான குழந்தைகளின் உறவு துண்டிக்கப்பட்டது. பல ஆண்டுகளுக்குப் பிறகுதான் மீண்டது.[15] சல்மான் கானுக்கு, அர்பாஸ் கான் மற்றும் சோஹைல் கான் என்ற இரண்டு சகோதரர்களும், அல்விரா மற்றும் அர்பிதா எனும் இரண்டு சகோதரிகளும் உண்டு.
சல்மான் தனது இளைய சகோதரர்களான அர்பாஸ் மற்றும் சோஹைல் ஆகியோருடன் மும்பையின் பாந்த்ராவில் உள்ள செயின்ட் ஸ்டானிஸ்லாஸ் உயர்நிலைப் பள்ளியில் தனது பள்ளிப்படிப்பை முடித்தார். [16] மும்பையில் உள்ள செயின்ட் சேவியர் கல்லூரியிலும் பயின்றார். ஆனால் பாதியிலேயே வெளியேறினார்.
திரை வாழ்க்கை
தொகுபிவி ஹோ தோ ஐஸி (1988) படத்தில் துணை வேடத்தில் நடித்ததன் மூலம் கான் தனது நடிப்பு வாழ்க்கையைத் தொடங்கினார். அதைத் தொடர்ந்து சூரஜ் பர்ஜாத்தியாவின் காதல் நாடகமான மைனே பியார் கியா (1989) படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்ததன் காரணமாக இவருக்கு சிறந்த ஆண் அறிமுகத்திற்கான பிலிம்பேர் விருது வழங்கப்பட்டது. 1990களில் பர்ஜாத்தியாவின் குடும்ப நாடகங்களான ஹம் ஆப்கே ஹைன் கௌன் (1994) , ஹம் சாத்-சாத் ஹை (1999) அதிரடி திரைப்படமான கரண் அர்ஜுன் (1995) மற்றும் நகைச்சுவைப் படமான பீவி நம்பர் 1 (1999) உட்பட பல வணிக ரீதியாக வெற்றி பெற்ற படங்களுடன் தன்னை நிலைநிறுத்திக் கொண்டார். 2000களில் ஏற்பட்ட ஏற்ற இறக்கங்களுக்குப் பிறகு, கான் வாண்டட் (2009) என்ற அதிரடி திரைப்படத்தில் பெரும் வெற்றியைப் பெற்றார். மேலும் 2010களில் தபாங் (2010) ரெடி (2011) பாடிகார்ட் (2011) தபாங் 2 (2012) கிக் (2014) மற்றும் டைகர் ஜிந்தா ஹை (2017) மற்றும் பஜ்ரங்கி பைஜான் (2015) மற்றும் சுல்தான் (2016) போன்ற அதிக வசூல் செய்த அதிரடி திரைப்படங்களிலும் நடித்தார்.
தொலைக்காட்சி
தொகுதனது நடிப்பு வாழ்க்கையைத் தவிர, கான் ஒரு தொலைக்காட்சித் தொகுப்பாளராகவும் உள்ளார். மேலும் தனது தொண்டு நிறுவனமான பீயிங் ஹ்யூமன் ஃபவுண்டேஷன் மூலம் மனிதாபிமானப் பணிகளையும் செய்து வருகிறார்.[17] 2010 முதல் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.[18]
சர்ச்சைகள்
தொகுகானின் வாழ்க்கை சர்ச்சைகள் மற்றும் சட்ட சிக்கல்களால் நிறைந்தது. 2002 ஆம் ஆண்டு மும்பையில் சாலையோரம் படுத்திருந்தவர்கள் மீது வாகனத்தை மோதி விபத்து ஏற்படுத்தியதால் 5 ஆண்டுகள் சிறைதண்டனை விதிக்கப்பட்டது. [19] 2015 ஆம் ஆண்டில், கவனக்குறைவாக வாகனம் ஓட்டிய வழக்கில் இவர் ஒருவரை கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டார். ஆனால் இவரது தண்டனை மேல்முறையீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டது.[20][21][22][23] ஏப்ரல் 5,2018 அன்று, கான் புல்வாய் வேட்டையாடிய வழக்கில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டார்.[24][25] இவ்வழக்கில் இவர் பிணையில் வெளியே வந்துள்ளார். அதே நேரத்தில் ஒரு மேல்முறையீடும் செய்துள்ளார். வழக்கு நிலுவையிலுள்ளது.[26]
நடிகைகளுடனான தொடர்பு
தொகுசல்மான் கான் ஒருபோதும் திருமணம் செய்து கொள்ளவில்லை. 1999 ஆம் ஆண்டில், பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராயுடன் நட்புடன் இருந்தார். இவர்களின் உறவு 2001 இல் பிரிந்து செல்லும் வரை ஊடகங்களில் அடிக்கடி விவாதிக்கப்பட்டது. கான் நடிகை கத்ரீனா கைஃப்புடனும் தொடர்பிலிருந்தார். பல வருட ஊகங்களுக்குப் பிறகு, இதுவும் அது 2010 இல் முடிந்தது.[27] சங்கீதா பிஜ்லானி மற்றும் சோமி அலி ஆகியோரும் கானுடன் தீவிர உறவில் இருந்தனர்.[28]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Bollywood wishes Salman Khan on his 46th birthday". டெய்லி நியூஸ் அண்ட் அனாலிசிஸ். Press Trust of India (New Delhi). 27 December 2011. http://www.dnaindia.com/entertainment/report_bollywood-wishes-salman-khan-on-his-46th-birthday_1630590.
- ↑ "Salman Khan on dancing in awards shows". The Indian Express. 17 July 2017.
- ↑ Respers France, Lisa (6 May 2015). "Who is Salman Khan? Only one of the world's biggest stars" (in en). CNN. http://edition.cnn.com/2015/05/06/entertainment/salman-khan-feat/.
- ↑ "SALMAN KHAN: Hail Bollywood's new king". Hindustan Times. 28 August 2012. Archived from the original on 26 August 2013. பார்க்கப்பட்ட நாள் 17 January 2013.
- ↑ Robehmed, Natalie. "Salman Khan's Earnings: $33.5 Million In 2015". Forbes. பார்க்கப்பட்ட நாள் 14 May 2019.
- ↑ "Salman Khan Makes it to Forbes Rich List, Shah Rukh Khan Doesn't". PTI. என்டிடிவி. 30 June 2015. https://www.ndtv.com/entertainment/salman-khan-amitabh-bachchan-on-forbes-rich-list-no-shah-rukh-khan-776645.
- ↑ "Top 100 Highest Paid Celebrity Entertainers of World 2018". போர்ப்ஸ். பார்க்கப்பட்ட நாள் 1 November 2018.
- ↑ FPJ Web Desk. "Despite flops, Salman Khan is the richest celeb of 2018 with net worth of Rs 253 crore". The Free Press Journal. https://www.freepressjournal.in/entertainment/despite-flops-salman-khan-is-the-richest-celeb-of-2018-with-net-worth-of-rs-253-crore.
- ↑ "Box Office Special Features – Highest Grosser of The Year". 29 December 2020. https://www.bollywoodhungama.com/news/box-office-special-features/highest-grosser-year-1990-2020-salman-khan-aamir-khan-shah-rukh-khan-dominate-hrithik-roshan-climbs-ladder/.
- ↑ "Salman Khan on Bodyguard's success: 'It's no big deal. You can't go mad about these things.'". India Today. 9 September 2011. பார்க்கப்பட்ட நாள் 27 July 2012.
- ↑ "Age defying fitness secrets!" (in en). The Times of India. 27 December 2019. https://timesofindia.indiatimes.com/life-style/health-fitness/fitness/salman-khans-gym-regime-at-54-is-tougher-than-a-20-year-olds-heres-why/photostory/72995209.cms.
- ↑ "Happy Birthday, Salman Khan: Forever Dabangg @54". 26 December 2019. https://www.ndtv.com/photos/entertainment/happy-birthday-salman-khan-forever-dabangg-54-98505.
- ↑ "Salman Khan: My dad didn't help me when I was starting out". ஹிந்துஸ்தான் டைம்ஸ். 16 December 2016. https://www.hindustantimes.com/bollywood/salman-khan-my-dad-didn-t-help-me-when-i-was-starting-out/story-YBIXPHPUYxJyGNs3ILTAYK.html.
- ↑ "I'm Hindu and Muslim both: Salman Khan tells court". The Financial Express. 28 January 2017. https://www.financialexpress.com/india-news/im-hindu-and-muslim-both-salman-khan-tells-court/525446/.
- ↑ "Happy birthday Helen: The dancing diva of the 50s and 60s fell in love with Salim Khan for this reason". Hindustan Times. 21 November 2020. https://www.hindustantimes.com/bollywood/happy-birthday-helen-the-dancing-diva-of-the-50s-and-60s-fell-in-love-with-salim-khan-for-this-reason/story-zKCHlN5BDN27KpAOecaQXN.html.
- ↑ Salman Khan: From By-Lines to Bhai-Lines.
- ↑ "Salman Khan does it again". The Times of India. 7 January 2014. https://timesofindia.indiatimes.com/entertainment/hindi/bollywood/news/Salmans-Being-Human-Salman-Khan-in-Jai-Ho-Salman-Khan-does-it-again/articleshow/28500553.cms.
- ↑ "Fourth season of Bigg Boss". Emirates 24/7. 1 September 2014. http://www.emirates247.com/entertainment/most-popular-bigg-boss-winner-shweta-tiwari-juhi-parmar-gauahar-2014-09-01-1.561401.
- ↑ http://tamil.thehindu.com/bbc-tamil/%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/article7184963.ece
- ↑ "Salman Khan: Bollywood star jailed for five years in hit-and-run case". BBC News. 6 May 2015. https://www.bbc.com/news/world-asia-india-32603596.
- ↑ "Salman Khan hit-and-run case: Other high-profile hit-and-run cases". India Today. 6 May 2015. பார்க்கப்பட்ட நாள் 6 May 2015.
- ↑ "As it happened: Salman Khan sentenced to 5 years in jail in hit-and-run case". The Hindu. 6 May 2015. http://www.thehindu.com/news/cities/mumbai/live-salman-case-verdict/article7175880.ece.
- ↑ "Hit-and-run: Salman walks free after lower court order quashed". The Indian Express. 11 December 2015.
- ↑ "Blackbuck poaching case: Salman Khan gets 5-year jail term". The Economic Times. 5 April 2018. https://economictimes.indiatimes.com/magazines/panache/20-yrs-on-blackbuck-killing-verdict-live-updates/articleshow/63621241.cms.
- ↑ "Bollywood star Khan jailed for five years". 5 April 2018. https://www.bbc.com/news/world-asia-india-43652304.
- ↑ "1998–2018: A timeline of the blackbuck poaching case". The Economic Times. 7 May 2018. https://economictimes.indiatimes.com/magazines/panache/1998-2016-a-timeline-of-the-blackbuck-killing-case/articleshow/53377957.cms.
- ↑ "Salman was my first serious relationship:Katrina Kaif". 7 December 2011 இம் மூலத்தில் இருந்து 7 July 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150707215529/http://www.hindustantimes.com/Entertainment/Tabloid/Salman-was-my-first-serious-relationship-Katrina-Kaif/Article1-778948.aspx.
- ↑ "5 times Salman Khan almost got married!" இம் மூலத்தில் இருந்து 19 July 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140719031726/http://timesofindia.indiatimes.com/entertainment/hindi/bollywood/5-times-Salman-Khan-almost-got-married/photostory/38422908.cms.
மேலும் வாசிக்க
தொகு- Jasim Khan (27 December 2015), Being Salman, Penguin UK, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-8-18-475094-2
- Ghosh, Biswadeep (2004). Hall of Fame: Salman Khan. Mumbai: Magna Books. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7809-249-2.
- Sanyal, Devapriya (2022). Salman Khan: The Man, The Actor, The Legend (in ஆங்கிலம்). Bloomsbury Publishing. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-93-88414-71-5.
வெளி இணைப்புகள்
தொகு- ஐ.எம்.டி.பி இணையத்தளத்தில் சல்மான் கான்
- முகநூலில் சல்மான் கான்
- பாலிவுட் கங்காமா இணையதளத்தில் சல்மான் கான்
- சல்மான் கான் அழுகிய தக்காளிகள் தளத்தில்