1840
1840 (MDCCCXL) ஒரு புதன்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் நெட்டாண்டு ஆகும். பழைய ஜூலியன் நாட்காட்டியில் திங்கட்கிழமையில் ஆரம்பமான ஒரு நெட்டாண்டு ஆகும்.[1][2][3]
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1840 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1840 MDCCCXL |
திருவள்ளுவர் ஆண்டு | 1871 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2593 |
அர்மீனிய நாட்காட்டி | 1289 ԹՎ ՌՄՁԹ |
சீன நாட்காட்டி | 4536-4537 |
எபிரேய நாட்காட்டி | 5599-5600 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1895-1896 1762-1763 4941-4942 |
இரானிய நாட்காட்டி | 1218-1219 |
இசுலாமிய நாட்காட்டி | 1255 – 1256 |
சப்பானிய நாட்காட்டி | Tenpō 11 (天保11年) |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 2090 |
யூலியன் நாட்காட்டி | கிரகோரியன் நாட்காட்டி 12 நாட்கள் குறைக்கப்பட்டு |
கொரிய நாட்காட்டி | 4173 |
நிகழ்வுகள்
தொகு- ஜனவரி 10 - ஐக்கிய இராச்சியத்தில் முன்கட்டணம் செலுத்தப்படக்கூடிய கடித உறையுடன், சீரான பென்னி தபால் சேவை ஆரம்பித்துவைக்கப்பட்டது.
- ஜனவரி 13 - லெக்சிங்டன் கப்பல் லோங் தீவின் கடலில் மூழ்கியதில் 139 பேர் கொல்லப்பட்டனர். 4 பேர் உயிர் தப்பினர்.
- ஜனவரி 22 - பிரித்தானியக் குடியேறிகள் நியூசிலாந்தை அடைந்தனர்.
- ஏப்ரல் 27 - லண்டனில் புதிய வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மனையின் அடிக்கல் நாட்டப்பட்டது.
- மே 1 - உலகின் முதலாவது அதிகாரபூர்வ ஒட்டக்கூடிய தபால்தலை, பென்னி பிளாக் ஐக்கிய இராச்சியத்தில் வெளியிடப்பட்டது.
- மே 7 - மிசிசிப்பியில் பெரும் சூறாவளி தாக்கியதில் 317 பேர் கொல்லப்பட்டனர்.
- மே 22 - நியூ சவுத் வேல்சுக்கு பிரித்தானிய சிறைக்கைதிகளை நாடுகடத்துதல் நிறுத்தப்பட்டது.
- ஜூலை 15 - ஆஸ்திரியா, பிரித்தானியா, புருசியா, மற்றும் ரஷ்யா ஆகியன ஓட்டோமான் பேரரசுடன் லண்டனில் அமைதி ஒப்பந்தத்தை ஏற்படுத்தின.
- செப்டம்பர் 10 - ஓட்டோமான், மற்றும் பிரித்தானியப் படைகள் பெய்ரூட் நகர் மீது தாக்குதலைத் தொடுத்தனர்.
- செப்டம்பர் 30 - நெப்போலியன் பொனபார்ட்டின் எஞ்சிய உடல் பகுதி பிரான்சுக்கு எடுத்து வரப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.
நாள் அறியப்படாதவை
தொகுபிறப்புக்கள்
தொகு- நவம்பர் 14 - குளோட் மொனே, பிரெஞ்சு ஓவியர் (இ. 1926)
இறப்புக்கள்
தொகு1840 நாட்காட்டி
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Antarctic Exploration — Chronology". Quark Expeditions. 2004. Archived from the original on 2006-09-08. பார்க்கப்பட்ட நாள் 2006-10-20.
- ↑ Guillon, Jacques (1986). Dumont d'Urville. Paris: France-Empire. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 2-7048-0472-9.
- ↑ "Railroad — Wilmington & Raleigh (later Weldon)". North Carolina Business History. 2006. பார்க்கப்பட்ட நாள் 2011-12-02.