நவம்பர் 4
நாள்
<< | நவம்பர் 2024 | >> | ||||
ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
1 | 2 | |||||
3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 |
10 | 11 | 12 | 13 | 14 | 15 | 16 |
17 | 18 | 19 | 20 | 21 | 22 | 23 |
24 | 25 | 26 | 27 | 28 | 29 | 30 |
MMXXIV |
நவம்பர் 4 (November 4) கிரிகோரியன் ஆண்டின் 308 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 309 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 57 நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
- 1576 – எண்பதாண்டுப் போர்: பிளாண்டர்சில் எசுப்பானியப் படையினர் பெல்ஜியத்தின் ஆண்ட்வெர்ப் நகரை கைப்பற்றினர். மூன்று நாட்களில் இந்நகரம் பெரும் சேதத்துக்குள்ளானது.
- 1677 – பின்னாளைய இங்கிலாந்தின் இரண்டாம் மேரி ஆரஞ்சு இளவரசர் வில்லியத்தைத் திருமணம் புரிந்தார். இவர்கள் பின்னர் இணைந்து முடிசூடினர்.
- 1847 – குளோரோஃபோர்மின் மயக்கநிலை இயல்புகளை இசுக்கொட்டிய மருத்துவர் யேம்சு சிம்ப்சன் கண்டுபிடித்தார்.
- 1864 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: கூட்டமைப்புப் படைகள் அமெரிக்கப் படையினரின் களஞ்சியச் சாலை ஒன்றை குண்டு வைத்துத் தகர்த்தன.
- 1869 – அறிவியல் இதழ் நேச்சர் முதற்தடவையாக வெளியிடப்பட்டது.
- 1890 – இலண்டனின் முதலாவது பாதாளத் தொடருந்து வழி அமைக்கப்பட்டது.
- 1918 – முதலாம் உலகப் போர்: இத்தாலியிடம் ஆத்திரியா-அங்கேரி சரணடைந்தது.
- 1921 – சப்பானியப் பிரதமர் அரா தக்காசி டோக்கியோவில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
- 1922 – எகிப்தில், பிரித்தானியத் தொல்லியலாளர் ஆவர்டு கார்ட்டர் மன்னர்களின் சமவெளியில் துட்டன்காமனின் கல்லறைக்கான வழியைக் கண்டுபிடித்தார்.
- 1942 – இரண்டாம் உலகப் போர்: இட்லரின் ஆணையைக் கருத்தில் எடுக்காமல், மார்சல் இர்வின் ரோமெல் இரண்டாம் அல்-அலமைன் சண்டையில் பெரும் தோல்வியடைந்த தனது படைகளை விலக்க முடிவு செய்தார்.
- 1952 – அமெரிக்க அரசு தேசிய பாதுகாப்பு முகவர் அமைப்பை நிறுவியது.
- 1956 – அக்டோபர் 23 இல் ஆரம்பமான அங்கேரியப் புரட்சியை முறியடிக்க சோவியத் படைகள் அங்கேரியை முற்றுகையிட்டன. ஆயிரக்கணக்கான அங்கேரியர்கள் கொல்லப்பட்டு இலட்சக்கணக்கானோர் நாட்டை விட்டு வெளியேறினர்.
- 1966 – இத்தாலி, புளோரன்சு நகரில் ஆர்னோ ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதில், பல்லாயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்தனர். பல பெறுமதியான ஓவியங்களும் நூல்களும் அழிந்தன. வெனிசு நகரம் மூழ்கியது.
- 1967 – எம்.ஜி.ஆர். கொலை முயற்சி வழக்கு: நடிகர் எம். ஜி. ராமச்சந்திரன் கொலை முயற்சி வழக்கில் நடிகர் எம். ஆர். ராதாவுக்கு ஏழு ஆண்டுக் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது.
- 1970 – இலத்தீன் அமெரிக்காவின் முதலாவது மார்க்சியத் தலைவராக சால்வடோர் அயேந்தே சிலியின் அரசுத்தலைவராக பதவியேற்றார்.
- 1979 – ஈரானியத் தீவிரவாதிகள் தெகுரானில் அமெரிக்கத் தூதராலயத்தை முற்றுகையிட்டு 53 அமெரிக்கர்கள் உட்பட 90 பேரைப் பணயக்கைதிகளாகப் பிடித்தனர்.
- 1980 – ரானல்ட் ரேகன் அமெரிக்காவின் 40-வது அரசுத்தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
- 1984 – நிக்கராகுவாவில் இடம்பெற்ற தேர்தல்களில் சண்டினீஸ்டா முன்னணி வெற்றி பெற்றது.
- 1995 – இசுரேல்-பாலத்தீனப் பிணக்கு: இசுரேலியப் பிரதமர் இட்சாக் ரபீன் தீவிரவாத வலதுசாரி இசுரேலியன் ஒருவனால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
- 2004 – ஐவரி கோஸ்டில் இடம்பெற்ற உள்நாட்டுப் போரில் 12 பிரான்சியப் படையினர் மற்றும் 3 ஐநா கண்காணிப்புக் குழு உறுப்பினர்கள் உட்பட நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டனர்.
- 2008 – அமெரிக்க அரசுத்தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலாவது ஆப்பிரிக்க அமெரிக்க வம்சாவழியினர் என்ற பெருமையை பராக் ஒபாமா பெற்றார்.
- 2010 – கியூபாவில் ஏரோ கரிபியன் வானூர்தி ஒன்று வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த அனைத்து 68 பேரும் உயிரிழந்தனர்.
- 2015 – பாக்கித்தான் லாகூர் நகரில் கட்டடம் ஒன்று இடிந்து வீழ்ந்ததில் 45 பேர் உயிரிழந்தனர்.
- 2015 – தெற்கு சூடானில் யூபா நகரில் சரக்கு வானூர்தி ஒன்று தரையில் மோதியதில் 37 பேர் உயிரிழந்தனர்.
பிறப்புகள்
- 1650 – இங்கிலாந்தின் மூன்றாம் வில்லியம் (இ. 1702)
- 1845 – வாசுதேவ் பல்வந்த் பட்கே, இந்தியப் புரட்சியாளர் (இ. 1883)
- 1884 – ஜம்னாலால் பஜாஜ், இந்தியத் தொழிலதிபர் (இ. 1942)
- 1897 – ஜானகி அம்மாள், இந்தியத் தாவரவியலாளர் (இ. 1984)
- 1906 – ழான் ஃபில்லியொசா, பிரான்சியத் தமிழறிஞர் (இ. 1982)
- 1915 – வீ கிம் வீ, சிங்கப்பூரின் 4வது குடியரசுத் தலைவர் (இ. 2005)
- 1929 – சகுந்தலா தேவி, இந்தியக் கணிதவியலாளர், வானியலாளர் (இ. 2013)
- 1933 – சார்லசு காவோ, நோபல் பரிசு பெற்ற சீன இயற்பியலாளர்
- 1947 – ரோட் மார்ஷ், ஆத்திரேலியத் துடுப்பாட்ட வீரர் (இ. 2022)
- 1957 – டோனி அபோட், ஆத்திரேலியாவின் 28வது பிரதமர்
- 1969 – மேத்திவ் மெக்கானாகே, அமெரிக்க நடிகை
- 1972 – தபூ, இந்திய நடிகை
- 1983 – அந்தோன் செர்கெயேவிச் புசுலோவ், உருசிய வானியற்பியலாளர் (இ. 2014)
- 1991 – வித்யுலேகா ராமன், தென்னிந்தியத் திரைப்பட நடிகை
இறப்புகள்
- 1918 – வில்ஃபிரட் ஓவன், ஆங்கிலேயக் கவிஞர் (பி. 1893)
- 1920 – உலூத்விக் சுத்ரூவ, உருசிய வானியலாளர் (பி. 1858)
- 1981 – திருமெய்ஞானம் நடராஜசுந்தரம் பிள்ளை, தமிழக நாதசுவரக் கலைஞர் (பி. 1926)
- 1985 – தி. க. இராமானுசக் கவிராயர், தமிழறிஞர், புலவர் (பி. 1905)
- 1988 – கி. வா. ஜகந்நாதன், தமிழக இதழாளர், எழுத்தாளர், சொற்பொழிவாளர் (பி. 1906)
- 1988 – ஜேம்ஸ் இரத்தினம், ஈழத்து எழுத்தாளர். (பி. 1905)
- 1991 – மொகிதீன் பேக், இலங்கை திரைப்படப் பின்னணிப் பாடகர் (பி. 1919)
- 1994 – கு. மா. பாலசுப்பிரமணியம், திரைப்பட பாடலாசிரியர் (பி. 1920)
- 1995 – இட்சாக் ரபீன், இசுரேலின் 5வது பிரதமர், அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவர் (பி. 1922)
- 1998 – மரியோன் தொனோவன், அமெரிக்கப் புதுமைப்புனைவாளர், தொழிலதிபர் (பி. 1917)
- 1999 – அப்துல் சமது, தமிழக அரசியல்வாதி (பி. 1926)
- 2008 – மைக்கேல் கிரைட்டன், அமெரிக்க மருத்துவர், இயக்குநர் (பி. 1942)
- 2012 – ஜேக்கப் சகாயகுமார் அருணி, தமிழக சமையல் கலை நிபுணர் (பி. 1974)
- 2022 – க. நெடுஞ்செழியன், தமிழறிஞர், பேராசிரியர் (பி. 1944)
சிறப்பு நாள்
- ஒற்றுமை நாள் (உருசியா)
வெளி இணைப்புகள்
- "இன்றைய நாளில்". பிபிசி.
- "நவம்பர் 4 வரலாற்று நிகழ்வுகள்". OnThisDay.com.
- நியூயார்க் டைம்சு: இன்றைய நாளில்