மன்னர்களின் சமவெளி

மன்னர்களின் சமவெளி (Valley of the Kings) எகிப்து நாட்டில் நைல் ஆற்றின் மேற்கே, திபான் மலை அடிவாரத்தில் உள்ளது. மன்னர்களின் சமவெளிப் பகுதியில் கி மு 16 முதல் 11 –ஆம் நூற்றாண்டு முடிய, இறந்து போன பார்வோன் எனப்படும் எகிப்திய மன்னர்கள் மற்றும் உயர்குடி பிரபுக்களின் சடலங்களை மம்மி முறையில் பதப்படுத்தி பிரமிடு வடிவிலான கட்டிடங்களில் அடக்கம் செய்யப்பட்டது.[1][2][3] மன்னர்களின் சமவெளில் 63 கல்லறைகள் உள்ளது.[4]

எகிப்து நாட்டின் திபான் மலை அடிவாரத்தில், நைல் ஆற்றின் மேற்கே அமைந்த மன்னர்களின் சமவெளி, (சிவப்பு அம்பு குறியிட்ட இடம்)
மன்னர்களின் சமவெளியில் கல்லறை எண் 62-இல் உள்ள துட்டன்காமன் கல்லறையின் உட்புறச் சுவரில் வண்ண ஓவியங்கள்

எகிப்து நாட்டின் தெற்கில் பாயும் நைல் ஆற்றின் மேற்கு கரையில் மன்னர்களின் சமவெளியும், கிழக்கு கரையில் அல்-உக்சுர் நகரம் மற்றும் அல்-உக்சுர் கோயில் அமைந்துள்ளது.[5] மன்னர்களின் பள்ளத்தாக்கின் 63 கல்லறைகளில் இரண்டாம் ராமேசஸ், முதலாம் தூத்மோஸ் மற்றும் துட்டன்காமன் போன்ற மன்னர்களின் கல்லறைகள் புகழ் பெற்றதாகும்.

உலகின் பெரும் புகழ் வாய்ந்த தொல்லியல் களங்களில் மன்னர்களின் சமவெளியும் ஒன்றாகும். 1979-இல் மன்னர்களின் சமவெளியை உலகப் பராம்பரியக் களங்களில் ஒன்றாக யுனெஸ்கோ நிறுவனத்தால் அறிவிக்கப்பட்டது.[6]

புதிய மம்மிகள் கண்டுபிடிப்பு தொகு

  • 2017 - எகிப்தின் தெற்கில் உள்ள அல்-உக்சுர் எனப்படும் லக்சார் நகரத்தின் அருகில் உள்ள பகுதிகளில் தொல்லியல் துறையினர் ஆய்வு செய்ததில், 3,500 ஆண்டுகள் பழமை வாய்ந்த கல்லறை ஒன்றிலிருந்து எட்டு மம்மிகள் ஏப்ரல், 2017-இல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.[7]
  • 2019 - அல்-உக்சுர் பகுதியில் அக்டோபர் 2019-இல் மரத்தில் செய்யப்பட்ட மம்மி வடிவிலான 30 சவப் பெட்டிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இச்சவப்பெட்டிகளில் 23 ஆண்களுக்காகவும், 5 பெண்களுக்காகவும், 2 சிறுவர்களுக்காகவும் உருவாக்கப்பட்டிருந்தன. இந்த மம்மி வடிவிலான சவப்பெட்டிகளில் கைகள் மூடப்பட்ட நிலையில் இருக்கும் மம்மிகள் ஆண்களுக்கானது. கைகள் திறந்த நிலையில் இருக்கும் மம்மிகள் பெண்களுக்கானது. மேலும் சவப்பெட்டிகள் மீது பல வண்ணங்களில் ஓவியங்கள் தீட்டப்பட்டிருந்தன.[8][9][10]
 
மன்னர்களின் சமவெளியின் அகலப்பரப்புக் காட்சி

இதனையும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

வெளி இணைப்புகள் தொகு

மேலும் படிக்க தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=மன்னர்களின்_சமவெளி&oldid=3581609" இருந்து மீள்விக்கப்பட்டது