துட்டன்காமன்

துட்டன்காமூன் அல்லது தூத்தான்காமூன் (Tutankhamun, கிமு 1341 – கிமு 1323) என்பவன் புது எகிப்திய இராச்சியத்தின் பதினெட்டாவது வம்சத்தின் 13-வது மன்னன் ஆவான். இவன் கிமு 1333 முதல் கிமு 1324 வரை புது எகிப்திய இராச்சியத்தை ஆண்டான். துட்டன்காமன் தனது எட்டாவது அல்லது ஒன்பதாவது வயதிலேயே பாரோ ஆனான்.[5] பதவியேற்று கிட்டத்தட்ட 9 ஆண்டுகள் மட்டுமே உயிரோடு இருந்தான். இவனது இயற்பெயர் துட்டன்காட்டன் என்பதாகும். துட்டன்காமூன் என்பதன் பொருள் "அமூன் கடவுளின் உயிருள்ள படிமம்" என்பதாகும்[6]. இவனது பெயர் எகிப்திய மொழியில் தூத்து-அன்கு-ஆமூன் என்பது ஆகும். 1922 ஆம் ஆண்டு நவம்பர் 26ஆம் நாள் ஹவார்ட் கார்ட்டர் என்னும் தொல்லியலாளர் துட்டன்காமனின் கல்லறையைக் கண்டுபிடித்தார். கோப்திய (Coptic) மொழியில், அக்கால எகிப்தியப் பெரிய கடவுளின் பெயர் அமூன் என்பதாகும். அதுவே இவனது பெயரிலும் சேர்ந்திருக்கிறது. 1925=ஆம் ஆண்டில் மன்னர்களின் சமவெளியில் கல்லறை எண் 62=இல் துட்டன்காமன் முகமூடி கண்டிபிடிக்கப்பட்டது.

துட்டன்காமன்
துட்டன்காமென், துட்டன்காதென் [1]
எகிப்தின் பாரோ
ஆட்சிக்காலம்கிமு 1332 – 1323, புது எகிப்து இராச்சியம், எகிப்தின் பதினெட்டாம் வம்சம்
முன்னவர்நெபர்நெபெருதென்
பின்னவர்ஆய்
துணைவி(யர்)அன்கேசெனமூன் (சகோதரி)
பிள்ளைகள்2
தந்தைஅக்கெனதென்
பிறப்புகிமு 1341
இறப்புகிமு 1323 (வயது 18–19)
அடக்கம்KV62

பண்டைய எகிப்தை ஆண்ட துட்டன்காமூன் விண்கல்லால் ஆன கத்தியைப் பயன்படுத்தியதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.[7][8]

பார்வோன் துட்டன்காமனின் சிற்பம், லாஸ் ஏஞ்சலீஸ் அருங்காட்சியகம்
பார்வோன் துட்டன்காமனின் கல்லறைச் சுவர் சித்திரங்கள்

மரணத்தின் காரணம்தொகு

துட்டன்காமனின் மம்மியை 2005-ஆம் ஆண்டில் செய்யப்பட்ட ஸ்கேன் பரிசோதனைகளின் மூலம் துட்டன்காமனின் காலில் மிக மோசமான எலும்பு முறிவு ஏற்பட்டிருந்தது தெரிய வந்தது. அக்காயம் தேரோட்டம் அல்லது குதிரையோற்றம் போன்ற நிகழ்வுகளின் போது ஏற்பட்ட விபத்தாயிருக்கலாம் என்று கருதப்பட்டது. 2010 ஆண்டு நிகழ்த்தப்பட்ட பரிசோதனைகளில் துட்டன்காமன் மரணமடையும் போது மிக ஆபத்தான மலேரியாவால் பாதிக்கப்பட்டு இருந்ததும் தெரிய வந்தது.

துட்டன்காமன் முகமூடிதொகு

 
துட்டன்காமன் முகமூடியின் பின்பக்கத்தில் எகிப்திய மொழியில் பட எழுத்துக்களில் குறிப்புகள் பொறிக்கப்பட்டுள்ளது

பண்டைய எகிப்தியர்களின் இறுதிச் சடங்குகளின் போது துட்டன்காமன் மம்மிக்கு அணிவித்த மரண முகமூடியானது தங்கம் மற்றும் பல வண்ண நிற நவரத்தினக் கற்கள் வேலைப்பாடுகளுடன் கூடியது. [9][10]துட்டன்காமனின் இந்த மரண முகமூடி 54 செ.மீ உயரம், 39.3 செ மீ அகலம், 49 செ மீ ஆழம் மற்றும் 10.23 கிலோ எடையும் கொண்டது.[11]துட்டன்காமன் மரண முகமூடியின் பின்புறத்திலும் மற்றும் தோள் பகுதியிலும் பத்து செங்குத்து மற்றும் இரண்டு கிடைமட்ட கோடுகளில் எகிப்திய மொழியில் பட எழுத்துக்களில் குறிப்புகள் பொறிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானிய தொல்லியல் அறிஞர் ஹோவர்டு கார்ட்டர், தீபை நகரத்தின் மன்னர்களின் சமவெளியில் கல்லறை எண் 62ஐ 1923-இல் அகழாய்வு செய்த போது துட்டன்காமனின் பிணமனைக் கோயில் கண்டிபிடித்தார். 1925-இல் துட்டன்காமனின் சவப்பெட்டி கண்டிபிடித்த போது, துட்டன்காமன் முகமூடியும் கண்டிபிடிக்கப்பட்டது. துட்டன்காமனின் மரண முகமூடி பண்டைய எகிப்தியர்களின் நாகரீகத்திற்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டாகும்.[12][9].

இதனையும் காண்கதொகு

மேற்கோள்கள்தொகு

வெளி இணைப்புகள்தொகு


"https://ta.wikipedia.org/w/index.php?title=துட்டன்காமன்&oldid=3324560" இருந்து மீள்விக்கப்பட்டது