துட்டன்காமன் முகமூடி

துட்டன்காமன் முகமூடி (mask of Tutankhamun) பண்டைய எகிப்தின் புது எகிப்து இராச்சியத்தை ஆண்ட 18-ஆம் வம்சத்தின் இறந்த 13-வது பார்வோன் துட்டன்காமன் (ஆட்சிக் காலம்: கிமு 1334 - 1325) மம்மியின் முகத்திற்கு மேல் அணிவிக்கப்பட்ட மரண முகமூடியாகும். பண்டைய எகிப்தியர்களின் இறுதிச் சடங்குகளின் போது துட்டன்காமன் மம்மிக்கு அணிவித்த மரண முகமூடியானது தங்கம் மற்றும் பல வண்ண நிற நவரத்தினக் கற்கள் வேலைப்பாடுகளுடன் கூடியது. [4][5]

துட்டன்காமன் முகமூடி
செய்பொருள்தங்கம், அடர் நீல படிகக்கல், செம்பவளம், பளிங்குக் கல், பச்சைக்கல் மற்றும் கண்ணாடிப் பசை[1]
அளவு54 × 39.3 × 49 செமீ
எழுத்துபண்டைய எகிப்திய மொழி பட எழுத்துக்களில்
உருவாக்கம்ஏறத்தாழ கிமு 1323
கண்டுபிடிப்பு28 அக்டோபர் 1925[2]
தற்போதைய இடம்எகிப்திய அருங்காட்சியகம், கெய்ரோ
அடையாளம்Carter no. 256a; Journal d'Entrée no. 60672; Exhibition no. 220[3]

துட்டன்காமன் முகமூடி 54 cm (21 அங்) உயரத்துடன், 39.3 cm (15.5 அங்) அகலத்துடன் மற்றும் 49 cm (19 அங்) ஆழத்துடன்,10.23 kg (22.6 lb) எடையுடன் கூடியது. [6]துட்டன்காமன் மரண முகமூடியின் பின்புறத்திலும் மற்றும் தோள் பகுதியிலும் பத்து செங்குத்து மற்றும் இரண்டு கிடைமட்ட கோடுகளில் எகிப்திய மொழியில் பட எழுத்துக்களில் குறிப்புகள் பொறிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானிய தொல்லியல் அறிஞர் ஓவர்டு கார்ட்டர், தீபை நகரத்தின் மன்னர்களின் சமவெளியில் கல்லறை எண் 62ஐ 1923-இல் அகழாய்வு செய்த போது துட்டன்காமனின் பிணமனைக் கோயில் கண்டிபிடித்தார். 1925-இல் துட்டன்காமனின் சவப்பெட்டி கண்டிபிடித்த போது, துட்டன்காமன் முகமூடியும் கண்டிபிடிக்கப்பட்டது. துட்டன்காமனின் மரண முகமூடி பண்டைய எகிப்தியர்களின் நாகரீகத்திற்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டாகும்.[7][4].

எகிப்தியவியல் அறிஞர் நிக்கோலசு ரிவீசின் கூற்றுப்படி, துட்டன்காமன் மரண முகமூடியானது, பண்டைய எகிப்தின் மிகவும் பிரபலமான தொல்பொருள் ஆகும்.

துட்டன்காமன் மரண முகமூடியின் பின்பக்கத்தில் எகிப்திய மொழியில் பட எழுத்துக்களில் குறிப்புகள் பொறிக்கப்பட்டுள்ளது

படக்காட்சிகள்

தொகு

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Gâdiuță, Corina (2005). Egyptian Museum Cairo. Editura Adevărul holding. p. 106. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-606-539-203-8.
  2. Christiane Desroches-Noblecourt (1965). Tutankhamen: Life and Death of a Pharaoh. Doubleday. p. 55. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-1400-2351-0.
  3. "Tutankhamun: Anatomy of an excavation, the Howard Carter archives". The Griffith Institute. University of Oxford. பார்க்கப்பட்ட நாள் 28 November 2015.
  4. 4.0 4.1 Marianne Eaton-Krauss (2015). The Unknown Tutankhamun. Bloomsbury Academic. p. 111. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4725-7561-6.
  5. "Howard Carter's excavation diaries (transcripts and scans)". The Griffith Institute. University of Oxford. பார்க்கப்பட்ட நாள் 10 April 2016.
  6. The Gold Mask of Tutankhamun
  7. Reeves 2015, ப. 522.

ஆதாரங்கள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Funerary mask of Tutankhamun
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=துட்டன்காமன்_முகமூடி&oldid=3629316" இலிருந்து மீள்விக்கப்பட்டது