மம்மி (Mummy) என்பது தற்செயலாகவோ, திட்டமிட்டோ காலத்தால் பாதுகாக்கப்பட்ட உயிரினத்தின் சடலத்தை குறிக்கும். இயற்கையாகவே சில வேதிப்பொருள்களாலும், கடும் குளிராலும் இறந்த உயிரினத்தின் சடலம் பாதுகாக்கப்படுவது உண்டு. இவ்வாறு காலத்தால் அழியாத மனித மம்மிகளையும், மற்ற விலங்குகளின் மம்மிகளையும் உலகமெங்கும் அகழ்வாராட்சியாளர்கள் கண்டுடெடுத்துள்ளனர். எகிப்தில் மட்டும் நூறு கோடி விலங்குகளின் மம்மிகள் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவற்றில் அதிக அளவில் கண்டுபிடிக்கப்பட்ட மிருகம் பூனை ஆகும். அதற்கு அடுத்தபடியாக அதிக அளவில் கண்டுபிடிக்கப்பட்டவை புனித இபிஸ் எனப்படும் கொக்கைப் போன்ற ஆப்ரிக்க கண்டத்தின் பறவை ஆகும். இதன் காலம் கதிரியக்கக்கரிமக் காலக்கணிப்புப்படி ஏறத்தாழ கி.மு 450 முதல் கி.மு 250 ஆகும். இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட மம்மிகளிலேயே மிகவும் பழையது 1940 இல் வட அமெரிக்காவில் கண்டுபிடுக்கப்பட்ட மம்மிக்கலாகும். அவை 9400 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மனிதர்கள் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

வத்திகன் அருங்காட்சியகத்தில் உள்ள ஓர் எகிப்திய மம்மி

சொற்றோற்றம்தொகு

மம்மி என்ற சொல் ஆங்கிலத்தின் மம்மி என்ற சொல்லிருந்தும், அச்சொல் இலத்தீன் மொழியின் மம்மியா என்ற பதத்திலிருந்தும், இலத்தீன் மொழிச் சொல், பாரசீக மற்றும் அராபிய மொழிகளில் உள்ள மும்மியா (مومية) என்ற பதத்திலிருந்தும் தோன்றியதாக அறியப்படுகிறது. பாரசீக மொழியில் இப்பதம் நிலக்கீல் எனப் பொருள்படும். மம்மிகளின் நிறம் கருநிற நிலக்கீலின் நிறத்தை ஒத்திருப்பதாலும், எகிப்திய சடலப்பதனிடல் இப்பொருள் உபபோகப்படுத்தப்பட்டதாக கூறப்படுவதாலும் இப்பெயர் சூட்டப்பட்டதாக அறிய முடிகிறது.

வகைகள்தொகு

மம்மிக்களில் இருவகைகள் உள்ளன. ஒன்று மனித இனத்தால் உருவாக்கப்பட்டவை மற்றோன்று தானக உருவானவை. மனித இனத்தால் வழிபாடு போன்ற ஏதாவது ஒரு காரணத்துக்காக உருவாக்கப்படும், அல்லது இயற்கையாக தட்பவெட்பங்களின் மூலம் உடலானது பதப்படுத்தப்பட்டு மம்மியாகிவிடும். உதாரணமாக ஏட்சி பனிமனிதன் இவ்வாறு உருவான ஒரு மம்மியாகும். எகிப்திய கலாச்சாரங்களில் இவ்விரு வகை மம்மிக்களும் காணப்படுகின்றன.

திட்டமிட்டு பாதுகாக்கப்பட்ட மம்மிகள்தொகு

 
பிரித்தானிய அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ள ஒரு மம்மி.

பண்டைய எகிப்து நாகரிகத்தில் அரசர்கள் இறந்தவுடன் மறுஉலகிற்கு செல்வதாகவும், அவ்வுலகில் வாழ அவர்களுக்கு இப்பூவுலக உடல் தேவைபடுவதால், இறந்த அரசர்களின் சடலங்களை பாதுகாப்பது அவசியம் என்ற நம்பிக்கை இருந்தமையால், அரசர்களின் சடலங்கள் பதனிடப் பட்டன. மனிதர்களின் சடலங்கள் மட்டுமல்லாது முதலை, பூனை ஆகியவற்றின் சடலங்களும் சடலப்பதனிடல் பட்டன. பண்டைய கிரேக்க வரலாற்றாசிரியர்களின் குறிப்பிலிருந்து பாரசீகத்தில் சில அரசர்களின் சடலங்களும் மெழுகை பயன்படுத்தி பதனிடலாக்கப் பட்டதாக அறிய முடிகிறது. எகிப்திய மம்மிகளே பொதுவாக அறியப்பட்டாலும், சடலப்பதனிடல் தொன்மையானவர்களாக கருதப்படுவோர், தென் அமெரிக்காவில் உள்ள சிலி மற்றும் பெரு நாட்டில் வாழ்ந்த சின்சொரோ மக்களே. சின்சொரோ மம்மிகள், எகிப்திய மம்மிகளை விட பல ஆயிரம் ஆண்டு தொன்மையானவை. இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட எகிப்திய மம்மிகளில் மிகவும் பழைய மம்மியின் வருடம் கி.மு 3000 ஆகும். ஆனால் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட சின்சொரோ மம்மிகளில் மிகவும் பழைய மம்மியின் வருடம் கி.மு 5050 ஆகும். சின்சொரோ மம்மிகள் ஏறத்தாழ 2000 வருடங்கள் பழமையானது. மற்றொரு பழமையான மம்மி நடு சகாராவில் உள்ள உன் முகுக்கியாக் என்ற இடத்தில் கண்டெடுக்கப்பட்ட சிறுவனின் மம்மியாகும். இம்மம்மியின் அகவை சுமார் 5500 வருடங்களாகும். இயற்கையாக பதப்படுத்தப்பட்ட சின்சிரோ மம்மிகளில் மிகவும் பழையது அட்டகாமா பாலைவனத்தில் கண்டெடுக்கப்பட்ட கி.மு 7020ஐச் சேர்ந்த மம்மியாகும்.[1]

எகிப்திய மம்மிக்கள்தொகு

 
எகிப்தில் சடலங்களை மம்மியாக பதப்படுத்தும் காட்சி

ஆரம்பகால, கி.மு. 3500 க்கும் முற்பட்ட எகிப்திய மம்மிகள் அவை புதைக்கப்பட்ட சுற்றுச்சூழலின் காரணமாக இயற்கையாக மம்மிக்களாக உருவாகின. பண்டைய எகிப்தில் சமூகத் தகுதிநிலை அறிந்து புதைக்கும் வழக்கங்கள் இல்லை. இறந்தவர்களின் உடல்கள் சாதாரண மண் குழிகள் புதைக்கப்படும். சூடான, வறண்ட பாலைவன மண்ணானது இயற்கையாக இறந்தவர்களின் உடல்களில் இருந்த நீரை ஆவியாக்கி மம்மிக்களாக உருவாக்கிவிடும். இயற்கையாக சடலங்கள் பதப்படுத்தப்பட்டது போல் ஆனது எகிப்திய கலாச்சாரத்திலும், மதத்திலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. எகிப்தின் இரண்டாவது வம்சக் காலகட்டத்தில் (கி.மு 2800 காலகட்டம்) இறந்தவர்களின் உடல்களை பதப்படுத்துதல் என்பது இறந்தோருக்கு செய்யப்படும் சடங்குளில் ஒன்றானது. இறந்ததற்கு பிறகான வாழ்க்கையை வாழ உடலைப் பதப்படுத்துதல் முக்கியம் என அவர்கள் கருதத் தொடங்கினார்கள். எகிப்தியர்களின் செல்வம் பெருக பெருக இறந்தப்பிறகு செய்யப்படும் சடங்கானது சமூகத் தகுதிநிலையை உணர்த்துவதாகக் கருதப்பட்டது. இதன்காரணமாக பெரும் பெரும் கல்லரைகள் கட்டும் பழக்கங்களும், அதிநவீன பதப்படுத்தும் முறைகளும் நடைமுறைக்கு வந்தன.

நான்காவது வம்சக் காலகட்டத்தில் (கி.மு 2600 காலகட்டம்) பதப்படுத்தும் முறைகளின் மூலம் மம்மிக்களை உருவாக்கி சாதித்தார்கள். இதயம் தவிர்த்த பிற உள் உடலுறுப்பு நீக்கம் முறையின் மூலம் மம்மிக்களை உருவாக்கினார்கள். தேவையற்ற உறுப்புகளை நீக்கிவிட்டு சில வகையான எண்ணெய்கள் மற்றும் கனிமங்களை இட்டு நிரப்பிவிடுவார்கள். பின்னர் எண்ணெய்யில் நனைத்த பருத்தி துணியால் உடல் முழுவதும் பல முறை சுற்றுவர். மம்மியின் தலை உருவம் ஒன்றை கவசம் போன்று தலைப்பகுதியில் பொருத்துவர். மம்மியை மரப்பெட்டியில் வைத்து பிரமிடில் அடக்கும் செய்வர்.

கிருத்துவ மம்மிக்கள்தொகு

கிருத்துவர்கள், வழிபாட்டின் பொருத்து மதப் பெரியோரின் உடல்களைப் பதப்படுத்துவார்கள்.

உடல்கள் பதனிடப்படும் பிற கலாச்சாரங்கள்தொகு

ஆப்ரிக்காதொகு

எகிப்து அல்லாது பிற ஆப்ரிக்க கண்டத்தின் பகுதிகளிலும் இயற்கை மற்றும் செயற்கை ஆகிய இருவகை மம்மிக்களும் கண்டுபிடிக்கப்பட்டன.

ஆசியாதொகு

ஆசிய பகுதிகளில் மம்மிக்கள் ஈரான் பகுதிகளில் உள்ள பாலைவனங்களில் உருவாகியுள்ளன. ஆசியாவின் தட்ப வெட்ப நிலையினால் கல்லறையை விட்டு எடுத்தால் உடனே சிதைந்துவிடும்.

நெகிழிமருவம்தொகு

இது மம்மிசெய்யப் பயன்படுத்தப்படும் முறைகளில் ஒன்று ஆகும். இம்முறையின்படி உடல் அல்லது உடல் உறுப்பு பதப்படுத்தப்படும். உடல் அல்லது உடல் உறுப்பில் உள்ள தண்ணீர் மற்றும் கொழுப்புகள் நீக்கப்பட்டு அதற்கு பதிலாக நெகிழி நிறப்பப்படும். இவ்வகையான பதப்படுத்துதல் முறையில் உடலின் நுண்ணியப் பண்புகளைக் கூட சிதைவுராமல் பாதுகாக்கப்படும். உலகம் முழுவது 40 நிறுவனங்களில் நெகிழிமருவம் செய்யப்படுகிறது. அவ்வுடல்கள் மருத்துவ ஆராய்ச்சிக்காகவும், கல்விக்காகவும் பயன்படுத்தப்படுகிறது.[2]

மேற்கோள்கள்தொகு

  1. Arthur C. Aufderheide, The Scientific Study of Mummies. Cambridge University Press, 2003 ISBN 0521818265 p.142
  2. "International Society for Plastination". Isp.plastination.org. பார்த்த நாள் 9 March 2012.

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=மம்மி&oldid=3047289" இருந்து மீள்விக்கப்பட்டது