எகிப்தின் நான்காம் வம்சம்

எகிப்தின் நான்காம் வம்சம் (Fourth Dynasty of ancient Egypt (notated Dynasty IV) பழைய எகிப்து இராச்சியத்தின் பிரமிடுக் காலம் அல்லது பொற்காலம் எனக்கருதப்படுகிறது. இவ்வம்சத்தவர்கள் பழைய எகிப்திய இராச்சியத்தை கிமு 2613 முதல் கிமு 2494 முடிய ஆண்டனர்.[1] இவ்வம்சத்தவர் பண்டைய எகிப்தை ஆண்ட காலத்தில் அமைதி மற்றும் செழிப்புடன் நிலவியது. மேலும் பிற நாடுகளுடன் மேற்கொண்ட வர்த்தகங்களை ஆவணப்படுத்தப்பட்ட காலமாகும்.

கிமு 2613–- கிமு 2494
தலைநகரம்மெம்பிசு
பேசப்படும் மொழிகள்எகிப்திய மொழி
சமயம்
பண்டைய எகிப்திய சமயம்
அரசாங்கம்முடியாட்சி
வரலாற்று சகாப்தம்வெண்கலக் காலம்
• தொடக்கம்
கிமு 2613
• முடிவு
- கிமு 2494
முந்தையது
பின்னையது
[[எகிப்தின் மூன்றாம் வம்சம்]]
[[எகிப்தின் ஐந்தாம் வம்சம்]]
எகிப்திய இராணி இரண்டாம் ஹெட்டேப்பியரசின் வண்ணம் தீட்டப்பட்ட சுண்ணாம்புக்கல் இசுபிங்சு

எகிப்தின் நான்காம் வம்ச பார்வோன்கள் ஆட்சியில் இறந்த மன்னர்களின் உடலை பதப்படுத்தி உயரமான பிரமிடு கட்டிடங்களில் அடக்கம் செய்யும் வழக்கம் செழித்தோங்கியது. இவ்வம்ச ஆட்சியில் பண்டைய எகிப்தில் சித்திரக் கலை, சிற்பக் கலை மற்றும் கட்டிடக் கலை வளர்ந்தது. பார்வோன் சினெபெரு காலத்தில் இறப்பிற்கு பிந்தைய வாழ்க்கைகான மஸ்தபா எனும் படிக்கட்டு பிரமிடு கட்டிடங்கள் கீசா நகரத்தில் நிறுவப்பட்டது.[2] இவ்வம்சத்தின் ஒவ்வொரு பார்வோனும் தனக்கென குறைந்தது ஒரு நினைவுச் சின்னமாக கல்லறைப் பிரமிடு நிறுவினார்கள்.

பழைய எகிப்திய இராச்சிய இராச்சியத்தை நிறுவுவதில், நான்காம் வம்சத்தவர்கள் இரண்டாவதாக விளங்கினர்கள். நான்காம் வம்சத்தின் முதல் பார்வோன் சினெபெரு மேற்கில் பண்டைய லிபியா, கிழக்கில் சினாய் தீபகற்பம், தெற்கில் நூபியா வரையிலான நிலப்பரப்புகளை வென்று எகிப்தின் பழைய இராச்சியத்தை விரிவாக்கினார். பழைய எகிப்திய இராச்சியத்தின் கீசா நகரத்தின் கிசாவின் பெரிய பிரமிடு உள்ளிட்ட பிரமிடுகளின் தொகுதிகளாலும், பெரிய ஸ்பிங்ஸ்களாலும் புகழ்பெற்றது.

நான்காம் வம்ச ஆட்சியாளர்கள்

தொகு
Initial Fourth Dynasty Royalty
மன்னர்களின் பெயர் இயற்பெயர் Dates பிரமிடு மனைவிகள்
பெயர்
சினெபெரு நெப்மாத் கிமு 2613–2589 செம்பிரமிடு
வளைந்த பிரமிடு
மைய்டும் பிரமிடு
முதலாம் ஹெட்டிபெயரஸ்
கூபு மெட்ஜெடு கிமு 2589–2566 கிசாவின் பெரிய பிரமிடு முதலாம் மெரிட்டீஸ்
ஹெனுத்சென்
ஜெதெப்பிரே கேபர் கிமு 2566–2558 ஜெதெப்பிரே பிரமிடு இரண்டாம் ஹெட்டிபெயரஸ்
கெந்தெட்கா
காப்ரா யுசரிப் கிமு 2558–2532 காப்ராவின் பிரமிடு மூன்றாம் மெரேசங்க்
முதலாம் காமெரேர்னெப்டி
ஹெக்கேனுஹெத்ஜெட்
பெர்செனெத்
மென்கௌரே காக்தேத் கிமு 2532–2503 மென்கௌரே பிரமிடு இரண்டாம் காமெரேர்னெப்டி
செப்செஸ்காப் ?? கிமு 2518–2510  ? சக்காராவின் பார்வோன்கள் மேசை புனெபெர்

நான்காம் வம்ச கால வரிசை

DjedefptahShepseskafMenkaureBikherisKhafreDjedefreKhufuSneferu

சினெபெரு

தொகு

பழைய எகிப்திய இராச்சியத்தை ஆண்ட நான்காம் வம்ச மன்னர்களில் முதலாமவர் பார்வோன் சினெபெரு ஆவார். இவர் மேல் எகிப்தையும், கீழ் எகிப்தையும் வென்று பண்டைய எகிப்தை ஒரே குடையின் கீழ் ஆண்டவர். நடு எகிப்தில் பிறந்த சினெபெரு, எகிப்தின் பட்டத்து இளவரசியை மணந்ததன் மூலம் எகிப்தின் மன்னரானவர் சினெபெரு தன்னை எகிப்திய சூரியக் கடவுளான இராவின் அவதாரம் என அழைத்துக் கொண்டார். சினெபெருவின் மகன் கூபுகூபுவும் தன்னை சூரியக் கடவுளின் அவதாரம் எனக் கூறிக்கொண்டார்.

பழைய எகிப்திய இராச்சியத்தில் இரண்டு அதிகார மையங்கள் விளங்கின. ஒன்று பார்வோன்கள் மற்றவர்கள் எகிப்தியக் கோவில்களின் தலைமைப் பூசாரிகள். பார்வோன்கள் மக்களை கோவில் பூசாரிகள் மூலம் மட்டும் ஆள முடியும். பண்டைய எகிப்தியக் கடவுள்களின் தெய்வீகச் சக்தி கொண்டவர்களாக பார்வோன்கள் சித்தரிக்கப்பட்டு, பார்வோன்களுக்கு கோயில்களும் எழுப்பப்பட்டது.

பார்வோன் சினெபெரு முதலில் கட்டிய நேர்த்தியான பிரமிடாக இருப்பினும் வளைந்து இருந்தது. மேலும் இவர் நிறுவிய சுண்ணாம்புக் கல் சிவப்பு பிரமிடு அகலமாகவும், உயரமாகவும் உள்ளது.[3] சினெபெரு கீசாவில் மொத்தம் மூன்று பிரமிடுகளை எழுப்பினார். பிரமிடுகளைக் கட்டுவதற்கு தேவையான தொழிலாளர்கள் மற்றும் கட்டுமானப் பொருட்களுக்காக, மன்னர் சினபெரு வெளிநாடுகளின் மீது குறிப்பாக லிபியா, நூபியா மீது படையெடுத்து, 11,000 போர்க் கைதிகளையும், 13,000 விலங்குகளையும் எகிப்திற்கு கொண்டு வந்தார்.

பிரமிடு காலத்திய பிற மன்னர்கள்

தொகு

மன்னர் கூபு

தொகு
 
கூபு மன்னர் நிறுவிய கிசாவின் பெரிய பிரமிடுக்கு முன்புறம் அமைந்த பெரிய ஸ்பிங்ஸ்

மன்னர் சினெபெருக்குப் பின்னர் எகிப்தின் அரியணை ஏறிய பார்வோன் கூபு, கீசா நகரத்தில் கட்டிய தனது தனது கல்லறை பிரமிடை கட்டினார். இவரது கல்லறைக் கோயில், பிந்திய காலத்தில் கொள்ளையர்களால் சூறையாடப்பட்டது.[4]

மன்னர் ஜெதெப்பிரே

தொகு

கூபுவிற்குப் பின்னர் அரியணை ஏறிய ஜெத்தேபிரே எட்டு ஆண்டுகள் எகிப்தை ஆண்டார். இவர் தனது கல்லறைக்கான பிரமிடை கீசா நகரத்திற்கு வடக்கே எட்டு கிலோ மீட்டர் தொலைவில் கட்டினார். கல்லறையில் இவர் தனது பட்டத்து இராணி இரண்டாம் ஹெடேப்பியரசின் உருவத்தை ஸ்பிங்கசு வடிவத்தில் அமைத்தார்.

26 ஆண்டு காலம் ஆண்ட மன்னர் காப்ரா தனது கல்லறைப் பிரமிடை, மன்னர்களின் சமவெளியில் கீசா நகரத்தில் தனது தந்தை கூபுவின் பிரமிடுவிற்கு அருகே நிறுவினார். மேலும் பிரமிடுவுக்கு முன் பகுதியில், தனது சிறப்பை விளக்க பெரிய ஸ்பிங்ஸ் ஒன்றை நிறுவினார்.[5]

 
பார்வோன் மென்கௌரே மற்றும் இராணி இரண்டாம் காமெரெர்நெப்டியின் சிற்பம்

மன்னர் மென்கௌரே தனது பிரமிடை கீசா நகரத்தில் மிகச்சிறிய அளவில் நிறுவினார். எரிமலை கற்களாலான இந்த பிரமிடு எட்டு அடி நீளமும், மூன்று அடி உயரமும் கொண்டது.

மன்னர் செப்சேஸ்காப்

தொகு

எகிப்தின் நான்காம் வம்சத்தின் இறுதி மன்னராக செப்சேஸ்காப் கருதப்படுகிறார். இவர் தனது பிரமிடு கல்லறையை, முந்தைய மன்னர்கள் கட்டிய பிரமிடுகளின் வடிவத்தில் கட்டாது, முக்கோண வடிவிலான கற்களைக் கொண்டு முக்கோண வடிவில் பிரமிடைக் கட்டினார். [6]

பண்டைய எகிப்திய வம்சங்கள்

தொகு

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Shaw, Ian, ed. (2000). The Oxford History of Ancient Egypt. Oxford University Press. p. 480. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-19-815034-3.
  2. Egypt: Land and Lives of the Pharaohs Revealed, (2005), pp. 80–90, Global Book Publishing: Australia
  3. Levy, Janey (30 December 2005). The Great Pyramid of Giza: Measuring Length, Area, Volume, and Angles. Rosen Classroom. p. 4. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4042-6059-7.
  4. Tyldesley, Joyce. "Who was Khufu?". eds.a.ebscohost.com.libproxy.nau.edu (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 14 April 2018.
  5. Spencer, A. J. (1990). "The Egyptian Pyramids. A Comprehensive Illustrated Reference. By J.P. Lepre. 233 × 156mm. Pp. xviii + 341, many ills. Jefferson, North Carolina: McFarland and Company, Inc.1990. ISBN 0-89950-461-2. £37•50." (in en). The Antiquaries Journal 70 (2): 479. doi:10.1017/S0003581500070906. https://www.cambridge.org/core/journals/antiquaries-journal/article/egyptian-pyramids-a-comprehensive-illustrated-reference-by-lepre-jp-233-156mm-pp-xviii-341-many-ills-jefferson-north-carolina-mcfarland-and-company-inc1990-isbn-0899504612-3750/647F11F2EBA11A12F2433FCCEF17787D. பார்த்த நாள்: 21 April 2018. 
  6. Spencer, A. J. (1990). "The Egyptian Pyramids. A Comprehensive Illustrated Reference. By J.P. Lepre. 233 × 156mm. Pp. xviii + 341, many ills. Jefferson, North Carolina: McFarland and Company, Inc.1990. ISBN 0-89950-461-2. £37•50." (in en). The Antiquaries Journal 70 (2): 479. doi:10.1017/S0003581500070906. https://www.cambridge.org/core/journals/antiquaries-journal/article/egyptian-pyramids-a-comprehensive-illustrated-reference-by-lepre-jp-233-156mm-pp-xviii-341-many-ills-jefferson-north-carolina-mcfarland-and-company-inc1990-isbn-0899504612-3750/647F11F2EBA11A12F2433FCCEF17787D. பார்த்த நாள்: 21 April 2018.