எகிப்தின் துவக்க கால அரச மரபுகள்
எகிப்தின் துவக்க கால அரச மரபுகள் (Early Dynastic Period) மேல் எகிப்து மற்றும் கீழ் எகிப்தை ஒருங்கிணைந்த பின்னர் கிமு 3150 முதல் கிமு 2690 முடிய 460 ஆண்டுகள் எகிப்தை ஆண்ட முதல் வம்சம் மற்றும் இரண்டாம் வம்ச ஆட்சிக் காலத்தை எகிப்தின் துவக்க அரசமரபுகள் என்பர். எகிப்தின் முதல் அரச வம்சத்தினர், எகிப்தை கிமு 3150 முதல் கிமு 2890 வரையும்; இரண்டாம் அரச வம்சத்தினர் கிமு 2890 முதல் 2686 முடியவும் ஆண்டனர். [1][2]துவக்க கால எகிப்திய அரசை நிறுவிய மன்னர் நார்மெர் ஆவார்.
கிமு 3150 கிமு -–கிமு 2686 | |||||||||||
தலைநகரம் | முதலில் தினீஸ் நகரம், பின்னர் மெம்பிஸ் நகரம் | ||||||||||
பேசப்படும் மொழிகள் | எகிப்திய மொழி | ||||||||||
சமயம் | பண்டைய எகிப்திய சமயம் | ||||||||||
அரசாங்கம் | முடியாட்சி | ||||||||||
பார்வோன் | |||||||||||
• கிமு 3100 | நார்மெர் (முதலில்) | ||||||||||
• கிமு 2690 | கசேகேமி (இறுதி) | ||||||||||
வரலாறு | |||||||||||
• தொடக்கம் | கிமு 3150 கிமு - | ||||||||||
• முடிவு | கிமு 2686 | ||||||||||
| |||||||||||
தற்போதைய பகுதிகள் | எகிப்து |
பொதுவாக எகிப்தின் துவக்க கால அரச மரபுகளை, எகிப்தின் முதல் வம்சம் என்றும் எகிப்தின் இரண்டாம் வம்சம் எனப்பிரிப்பர். கிமு 2686ல் பழைய எகிப்து இராச்சியம் தோன்றிய பின் இத்துவக்க கால எகிப்திய அரச மரபுகள் முற்றிலும் மறைந்து போனது.[3]
ஒருங்கிணைந்த எகிப்தினை ஆண்ட முதல் அரச வம்சத்தின் ஆட்சிக் காலத்தில் தலைநகரம் தினீஸ் நகரத்திலிருந்து மெம்பிசுக்கு மாற்றப்பட்டது.
எகிப்தின் துவக்க கால அரச மரபுகளின் ஆட்சியின் போது, எகிப்திய நாகரீகம், பண்பாடு, சமயம், கட்டிடக் கலைகள் வளர்ச்சியுற்றது.
பண்டைய எகிப்திய துவக்க கால அரச மரபு மன்னர்கள் மைய அரசமைப்பை நிறுவி, மாகாணங்களில் அரச குடும்பத்தினரை ஆளுநர்களாக நியமித்தனர்.
எகிப்தின் மைய அரசின் கட்டிடங்கள் மரத்தால் அல்லது மணற்கற்களால் ஆன திறந்தவெளி கோயில்களாகக் கட்டினர். இவ்வரச மரபுகளுக்கு முன்னிருந்த பட எழுத்துகள் மூலம், அம்மக்களின் பேச்சு மொழி ஒரளவே தெரிய வருகிறது.
பண்பாட்டுத் தோற்றம்
தொகுகிமு 3600-க்கு முன்னர் கற்காலத்தில், எகிப்திய சமூகங்கள் நைல் ஆற்றின் இரு கரைகளிலே குடியிருப்புகள் அமைத்து, வீட்டு விலங்குகள் வளர்த்தும் வேளாண்மை செய்தும் வாழ்ந்தனர். [4]
கிமு 3600-க்கு பின்னர் அனைத்து துறைகளிலும் வளர்ச்சியடைந்த எகிப்திய சமூகம் பண்படைந்த நாகரீகத்தை நோக்கி வேகமாக முன்னேறியது.[5]
பண்டைய அண்மை கிழக்கின் தெற்கு லெவண்ட் பகுதிகளில் புழங்கிய கலைநயமிக்க அழகிய மட்பாண்டங்கள் போன்று எகிப்திலும் தயாரிக்கப்பட்டது. இக்காலத்தில் செப்புப் பாத்திரங்களின் பயன்பாடு மக்களிடையே பரவலாக இருந்தது. [5] துவக்க கால எகிப்திய அரச மரபுகளின் ஆட்சிக் காலத்தில் மெசொப்பொத்தேமியாவில் கையாண்ட கட்டிடக்கலை முறைகளை எகிப்தில் புகுத்தினர்.[5]
தனித்தனியாக செயல்பட்டுக் கொண்டிருந்த நைல் அற்றின் வடிநிலப் பகுதியான கீழ் எகிப்தியர்களும், நைல் ஆறு தோன்றும் மேல் எகிப்திய மக்களிடையே அடிக்கடி மோதல்கள் ஏற்பட்டது. [5] மேல் எகிப்தின் மனன்ர் நார்மேர், நைல் ஆற்றின் வடிநிலப் பகுதியான கீழ் எகிப்தியர்களை வென்று இரண்டு பகுதிகளை ஒருங்கிணைத்தார்.[6] எகிப்திய இராச்சியத்தில், கடவுளின் நேரடி பிரதிநிதியான, தெய்வத்தன்மை பொருந்திய மன்னர்களே கடவுளின் தலைமைப் பூசாரியாக அடுத்த மூவாயிரம் ஆண்டுகளுக்கு தொடந்தனர்.[7]
மறைந்த அரச குடும்பத்தினர்களின் உடலை அடக்கம் செய்து அதன் மீது எழுப்பும் பிரமிடுகளுக்கு முன்னோடியாக, துவக்க கால எகிப்திய அரச மரபுகளின் ஆட்சியில், இறந்த அரச குடும்பத்தினரின் உடல்களை, மஸ்தபா (mastaba) எனும் நித்திய வீட்டை எழுப்பி, அதில் புதைக்கும் வழக்கம் கொண்டிருந்தனர். இவர்களது ஆட்சிக் காலத்தில் எகிப்தில் எழுத்துக் கலை மேலும் வளர்ந்தது.
-
எகிப்தின் துவக்க கால அரச வம்ச ஆட்சிக் காலத்திய ஒரு பலகையில் வரையப்பட்ட படகில் செல்லும் மனிதன், நீர் யாணை மற்றும் முதலையின் உருவங்கள்
-
துவக்க கால எகிப்திய வம்ச காலத்தில் தீபை நகரத்தில் கிடைத்த ஒரு அயல்நாட்டவரின் தலைச்சிற்பம்
முதல் பார்வோன்
தொகுமேல் எகிப்தையும், கீழ் எகிப்தையும் ஒருங்கிணைத்த, எகிப்தின் முதல் வம்சத்தின் முதல் மன்னர் நார்மெர் ஆவார். நெக்ரபோலிசில்[8] கிடைத்த முத்திரைகளில் முதலாம் வம்சத்தின் ஐந்தாம் மன்னர் பாரோ டென்னின் கல்லறை கண்டெடுக்கப்பட்டுள்ளது. [9][10][11][12]
முக்கிய ஆட்சியாளர்கள்
தொகு- நார்மெர்
- ஜெர்
- ஜெத்
- மெர்நெய்த் (அரசி மற்றும் இணை ஆட்சியாளர்)
- டென்
- குவா
- ஹோடெப்செகெம்வி
- நெப்ரா
- நய்நெத்செர்
- சேத்-பெரிப்சென்
- சேக்கெமிப்-பெரென்மாத்
- காசெகெம்வி
எகிப்தின் வரலாற்றுக் கால வரிசை
தொகு- பண்டைய எகிப்திய அரசமரபுகள் (கிமு 3100 - கிமு 30)
- பழைய எகிப்து இராச்சியம் (கிமு 2686 – கிமு 2181)
- எகிப்தின் முதல் இடைநிலைக் காலம் - (கிமு 2181 - கிமு 2055)
- எகிப்தின் மத்தியகால இராச்சியம் -(கிமு 2055 – கிமு 1650)
- எகிப்தின் இரண்டாம் இடைநிலைக் காலம் - (கிமு 1650 - கிமு 1580)
- புது எகிப்து இராச்சியம் (கிமு 1550 – 1077)
- எகிப்தின் மூன்றாம் இடைநிலைக் காலம் - (கிமு 1100 – கிமு 650)
- பிந்தைய கால எகிப்திய இராச்சியம் - (கிமு 664 - கிமு 332)
- தாலமைக் பேரரசு - (கிமு 305 – கிமு 30)
இதனையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ The Predynastic And Early Dynastic Periods
- ↑ Early Dynastic Period In Egypt
- ↑ Shaw, Ian, ed. (2000). The Oxford History of Ancient Egypt. Oxford University Press. p. 479. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-19-815034-2.
- ↑ Carl Roebuck, The World of Ancient Times (Charles Scribner's Sons Publishing: New York, 1966) p. 51.
- ↑ 5.0 5.1 5.2 5.3 Carl Roebuck, The World of Ancient Times (Charles Scribner's Sons: New York, 1966) p. 52-53.
- ↑ Carl Roebuck, The World of Ancient Times (Charles Scribner's Sons Publishers: New York, 1966), p. 53.
- ↑ Kinnaer, Jacques. "Early Dynastic Period" (PDF). The Ancient Egypt Site. பார்க்கப்பட்ட நாள் 4 April 2012.
- ↑ Necropolis
- ↑ Den (pharaoh)
- ↑ Qa'a and Merneith lists http://xoomer.virgilio.it/francescoraf/hesyra/Egyptgallery03.html
- ↑ The Narmer Catalog http://narmer.org/inscription/1553 பரணிடப்பட்டது 2020-02-08 at the வந்தவழி இயந்திரம்
- ↑ The Narmer Catalog http://narmer.org/inscription/4048 பரணிடப்பட்டது 2020-02-19 at the வந்தவழி இயந்திரம்
மேலும் படிக்க
தொகு- Shaw, Ian (2003). The Oxford History of Ancient Egypt. UK: Oxford University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-19-280458-7.
- Wilkinson, Toby (2001). Early Dynastic Egypt: Strategies, Society and Security. New York: Routledge. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-415-26011-6.
- Wengrow, David (2006). The Archaeology of Early Egypt: Social Transformations in North-East Africa, c. 10,000 to 2,650 BC. New York: Cambridge University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-521-83586-0.
வெளி இணைப்புகள்
தொகு