கர்னாக் மன்னர்கள் பட்டியல்

விக்கிப்பீடியா:பட்டியலிடல்

கர்னாக் மன்னர்கள் பட்டியல் (Karnak king list), பண்டைய எகிப்தை ஆண்ட மன்னர்களின் பெயர்களை கொண்ட பட்டியலை, கர்னாக் கோயிலிலில், கிமு 15-ஆம் நூற்றாண்டில் புது எகிப்து இராச்சியத்தை ஆண்ட 18-ஆம் வம்ச மன்னர் மூன்றாம் தூத்மோஸ் ஆடசிக் காலத்த்தில் (கிமு 1479 முதல் கிமு 1425) கல்வெட்டாக வடித்தார்.

கர்னாக் மன்னர்களின் பட்டியலின் வரைபடம், ஆண்டு 1843

கர்னாக் கல்வெட்டில் பழைய எகிப்து இராச்சியத்தை ஆண்ட சினெபெரு முதல் 61 மன்னர்களின் பெயர்கள் உள்ளது. இருப்பினும் 31 மன்னர்களின் பெயர்கள் மட்டுமே தொல்லியல் வரலாற்று அறிஞர்கள் உறுதிபடுத்தியுள்ளனர். அபிதோஸ் மன்னர்கள் பட்டியல் மற்றும் துரின் மன்னர்கள் பட்டியல்களில் விடுபட்ட எகிப்தின் முதல் இடைநிலைக் காலம் மற்றும் இரண்டாம் இடைநிலைக் காலத்திய மன்னர்கள் பெயர்கள் கர்னாக் மன்னர்கள் பட்டியலில் உள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

கர்னாக் மன்னர்களின் பட்டியலை முதன்முதலாக 1825-இல் ஜேம்ஸ் பர்ட்டன் எனும் எகிப்தியவியல் அறிஞர் கண்டுபிடித்தார்.[1]1843-இல் ஜெர்மானிய எகிப்தியவியல் அறிஞரான கார்ல் ரிச்சர்டு லெப்சியஸ் என்பவர் நைல் நதி வடிநிலப் பகுதியில் இருந்த கர்னாக் கோயிலில் இருந்த எகிப்திய மன்னர்கள் பட்டியல் கொண்ட் குறுங்கல்வெட்டுகளை பாதுகாப்பாக பிரான்சு நாட்டிற்கு எடுத்துச் சென்றார்.[2][3]மோசமாக சிதிலமடைந்த கர்னாக் மன்னர்கள் பட்டியலின் குறுகல்வெட்டுகள் தற்போது பிரான்சு நாட்டின் பாரிஸ் நகரத்தின் இலூவா அருங்காட்சியகத்தில் உள்ளது.[4].

கர்னாக் மன்னர்கள் பட்டியல் விளக்கம் தொகு

 
கர்னாக் மன்னர்களின் பட்டியலின் வரைபடம். வெள்ளை நிறப்பகுதியில் உள்ள மன்னர்கள் பெயர்கள் ஏறக்குறைய சிதைந்துள்ளது அல்லது அழிந்துள்ள்து.

மன்னர்கள் பட்டியலின் விவரம் தொகு

கர்னாக் மன்னர்களின் பட்டியலின் பார்வோன்களின் உண்மையான பெயர் மற்றும் கல்வெட்டில் குறிப்பிட்ட பெயர்கள் தனித்தனியாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பட்டியல் மேல் வரிசை, இரண்டாம் வரிசை, மூன்றாம் வரிசை மற்றும் கீழ் வரிசை என நான்காகப் பிரிக்கப்பட்டுள்ள்து.[5]

இடது பக்கம் வலது பக்கம்
மேல் வரிசை
பார்வோன் பெயர் கல்வெட்டில் பெயர் பார்வோன் பெயர் கல்வெட்டில் பெயர்
1. அறியப்படவில்லை நெபர்-கா-ரே 32. மூன்றாம் செனுஸ்ரெத் கா-க-ரே
2. சினெபெரு S-நெபெரு 33. நான்காம் சொபெக்கோதேப் கா-நெபர்-ரே
3. சகுரா சகு-ரே 34. முதலாம் நெபெர்ஹோதேப் கா-சேகேம்-ரே
4. நியுசெர்ரே இனி இனி 35. அழிந்துள்ள்து அழிந்துள்ளது
5. ஜெத்கரே இசெஸ்சி இசெஸ்சி 36. முதலாம் சோபெக்கோதேப் செகெம்-ரே-கு- தவி
6. அழிந்துள்ளது அழிந்துள்ளது 37. ஆறாம் அமெனம்ஹத் எஸ்-ஆங்க்-இப்-ரே
7. அழிந்துள்ளது. அழிந்துள்ளது 38. முதலாம் நெபிரியா செ-வாட்ஜ்-இன்-ரே
8. ஜெகுதி செக்கெம்-ரெ-செமென்-லாவி 39. அறியப்படவில்லை ...கௌர்(ரே)
இரண்டாம் வரிசை
பார்வோன் பெயர் கல்வெட்டில் பெயர் பார்வோன் பெயர் கல்வெட்டில் பெயர்
9. அழிந்துள்ளது அழிந்துள்ளது 40. அழிந்துள்ளது அழிந்துள்ளது
10. இரண்டாம் இன்டெப்? இன்டெப் 41. இரண்டாம் நெப்ர்ஹோதேப் மெர்-செகெம்-ரே
11. முதலாம் இன்டெப்? இன்... 42. ஏழாம் சோபெக்ஹோத்தேப் மெர்-கௌ-ரே
12. முதலாம் மெண்டுகொதேப்? மென்... 43. எட்டாம் சொபெக்ஹோதேப்? செ-யுசர்-தவி
13.மூத்த இன்டெப்? இன்டெப் 44. அறியப்படவில்லை ...ரே
14. அறியப்படவில்லை தேத்தி 45. அறியப்படவில்லை செனெபெர்..ரே
15. அறியப்படவில்லை பெப்பி 46. காஹோதேப்ரே சோபெக்ஹோத்தேப் கா-ஹோதேப்-ரே
16. முதலாம் மெரென்ரே நெம்தியம்சப்? மெர்-ரென்-ரே 47. இரண்டாம் சோபெக்ஹோத்தேப் கா-ஆங்க்-ரே
மூன்றாம் வரிசை
பார்வோன் பெயர் கல்வெட்டில் பெயர் பார்வோன் பெயர் கல்வெட்டில் பெயர்
17.முதலாம் அமெனம்ஹத் செ-ஹோதெப்-இப்-ரே 48. ராஹோதேப் (செகெம்)ரெ வாக்கௌரே
18. இரண்டாம் அமெனம்ஹத் நெபு-கா-ரே 49. செவாஹெரென்ரே செனெப்மியு செ-வா-ரென்-ரெ
19. அழிந்துள்ளது அழிந்துள்ளது 50. மெர்ஹோதெப்பிரே சொபெக்கோத்தெப் மெர்-ஹோத்தெப்-ரே
20. அழிந்துள்ளது அழிந்துள்ளது 51. வேகாப கூ-தவி=ரே
21.நான்காம் அமெனம்ஹத் மாத்-கெ-ரே 52. அழிந்துள்ளது அழிந்துள்ளது
22. இராணி சோபெக்நெபரு சொபெக்-நெபெரு 53. அழிந்துள்ளது. அழிந்துள்ளது
23. செஹெதேப்கரே இன்டெப் ? இன்டெப் 54. முதலாம் செபொகெம்சாப் செகெம்-ரெ- வாட்ஜ்-காவ்
கீழ் வரிசை
பார்வோன் பெயர் கல்வெட்டில் பெயர் பார்வோன் பெயர் கல்வெட்டில் பெயர்
24. முதலாம் செனுஸ்ரெத் கெப்பெர்-கா-ரே 55.அறியப்படவில்லை ...ரே
25.செக்கியூனென்ரே தாவோ செ-கியுன்-இன்-ரே 56. நான்காம் செனுஸ்ரெத் ? செனெபெர்..ரே
26. செனக்தென்ரே அக்மோஸ் செ-நக்த்-இன்-ரே 57. அறியப்படவில்லை செவாட்ஜ்...ரே
27. பெபியான்க் செ-யுசர்-இன்-ரே 58. அறியப்படவில்லை செகேம்...ரே
28. நுப்கெபெரி இன்டெப் நுப்-கெப்பர்-ரே 59. அழிந்துள்ளது அழிந்துள்ளது
29. இரண்டாம் மெண்டுகொதேப் நெப்-ஹெபெத்-ரே 60. அழிந்துள்ளது அழிந்துள்ளது
30. மூன்றாம் மெண்டுகொதேப் செ-நெபர்-க-ரே 61. அழிந்துள்ளது அழிந்துள்ளது
31. அழிந்துள்ளது அழிந்துள்ளது

}

படக்காட்சிகள் தொகு

லூவர் அருங்காட்சியகத்தின் கர்னாக் மன்னர்களின் பட்டியலின் புகைப்படம்

இதனையும் காண்க தொகு

அடிக்குறிப்புகள் தொகு

  1. Burton, James: "Excerpta Hieroglypica", Plate Ia, Cairo, 1825
  2. "L'Illustration, Journal Universel", Vol. VII, p 244-245, Paris 1846
  3. Monderson, Frederick. "Temple of Karnak: The Majestic Architecture of Ancient Kemet" p. 58
  4. Chapelle des ancêtres in the Sully wing, Rez-de-chaussée, Room 12, Catalogue number E13481bis
  5. Abhandlungen der Königlichen Preußischen Akademie der Wissenschaften zu Berlin 1852 (1853) p.455

வெளி இணைப்புகள் தொகு