மெடிநெத் அபு மன்னர்கள் பட்டியல்
மெடிநெத் அபு மன்னர்கள் பட்டியல், பண்டைய எகிப்தின் நைல் நதியின் மேற்கு கரையில் உள்ள அல்-உக்சுர் நகரத்திற்கு அருகே உள்ள மெடிநெத் அபு எனுமிடத்தில் உள்ள மெடிநெத் அபு கோயில் சுவரில் புது எகிப்து இராச்சியத்தின் 9 மன்னர்கள் பெயர்கள் குறுங்கல்வெட்டுகளில் செதுக்கப்பட்டுள்ளது.
புது எகிப்திய இராச்சியத்தை ஆண்ட எகிப்தின் இருபதாம் வம்சத்தின் இரண்டாம் பார்வோன் மூன்றாம் ராமேசஸ் ஆட்சிக் காலத்தில் (கிமு 1186 - கிமு 1155) புது எகிப்திய இராச்சியத்தை ஆண்ட மன்னர்கள் பட்டியலை கல்வெட்டில் செதுக்கி வைக்கப்பட்டது.
மன்னர் இரண்டாம் ராமேசஸ் என்பவர் முதல் வமச மன்னர்கள் முதல் பத்தொன்பதாம் வம்ச மன்னர்களின் பெயர்களை துரின் மன்னர்கள் பட்டியல், அபிதோஸ் மன்னர்கள் பட்டியல் மற்றும் கர்னாக் மன்னர்கள் பட்டியல்களை கற்பலகையில் குறுங்கல்வெட்டுகளிலும், பாபிரஸ் காகிதத்திலும் குறித்துள்ளார்.
மெடிநெத் அபு மன்னர்கள் பட்டியல் கல்வெட்டில், மன்னர் மூன்றாம் ராமேசஸ், மின் கடவுளுக்கான எகிபதியத் திருவிழாவின் போது முன்னின்று செல்வது போன்று காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. 16 குறுங்கல்வெட்டுகளில் புது எகிப்திய இராச்சியத்தின் ஒன்பது மன்னர்களின் பெயர்கள் மட்டும் இடம் பெற்றுள்ளது.
மெடிநெத் அபு மன்னர்கள் பட்டியல் கல்வெட்டு முதலில் 1845-இல் ஜீன்-பிரான்காய்ஸ் சாம்போல்லியன் என்பவரால் வெளியிடப்பட்டப்பட்டது.[1]பின்னர் நான்கு ஆண்டுகள் கழித்து கார்ல் ரிச்ச்சர்டு லெப்சியஸ் என்பவர் இப்பட்டியலை காட்சிப்படுத்தினார்.[2] [3]
பட்டியலில் குறிப்பிட்ட மன்னர்களின் பெயர்
தொகுஇப்பெயர் பலகையில் இரண்டு பகுதிகளாகக் கொண்டது. இடது புறம் ஏழு மூத்த பார்வோன்களை ஊர்வலமாக அழைத்துச் செல்லப்படுகின்றனர். வலது புறத்தில் ஒன்பது மன்னர்கள் நடந்து செல்கின்றனர்.
இடது பக்கம் | வலது பக்கம் | ||||
---|---|---|---|---|---|
# | பார்வோன் | கல்வெட்டில் பெயர் | # | பார்வோன் | கல்வெட்டில் பெயர் |
1 | மூன்றாம் ராமேசஸ் | யுசர்மாத்திரி-மெரியமூன் | 8 | மூன்றாம் ராமேசஸ் | யுசர்மாத்திரி-மெரியமூன் |
2 | செத்னக்தே | யுசர்கௌரே-மெரியமூன் | 9 | செத்னக்தே | யுசர்கௌரே-மெரியமூன் |
3 | இரண்டாம் ராமேசஸ் | யுசர்மாத்திரி-செதெப்பனரே | 10 | இரண்டாம் சேத்தி | யுசர்கெப்பெருரே-செதெப்பனரே |
4 | மெர்நெப்தா | பாயின்ரே-மெரியமூன் | 11 | மெர்நெப்தா | பாயின்ரே-மெரியமூன் |
5 | மூன்றாம் ராமேசஸ் | யுசர்மாத்திரி-மெரியமூன் | 12 | இரண்டாம் ராமேசஸ் | யுசர்மாத்திரி-செதெப்பனரே |
6 | செத்னக்தே | யுசர்கௌரே-மெரியமூன் | 13 | முதலாம் சேத்தி | மென்மாத்திரி |
7 | இரண்டாம் சேத்தி | யுசர்கெப்பெருரே-செதெப்பனரே | 14 | முதலாம் ராமேசஸ் | மென்பெத்தியரே |
15 | ஹொரெம்ஹெப் | ஜேசெர்கெபெருரெ-செதெப்பனரே | |||
16 | மூன்றாம் அமென்கோதேப் | நெப்மாத்திரி |
இதனையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Jean François Champollion (1845). Monuments de l'Égypte et de la Nubie, Vol II, plates 213-214, Paris
- ↑ Carl Richard Lepsius (1849). Denkmaeler aus Aegypten und Aethiopien, III, plates 212-213, Leipzig
- ↑ The Epigraphic Survey (1940). Medinet Habu IV, Festival Scenes of Ramses III, plates 203-207, Oriental Institute Press, Chicago
ஆதார நூற்பட்டியல்
தொகு- Jean François Champollion: Monuments de l'Égypte et de la Nubie, Vol. III, plates 213-214 (Paris: 1845)
- Carl Richard Lepsius: Denkmaeler aus Aegypten und Aethiopien, III, plates 212-213, (Berlin: 1849)
- The Epigraphic Survey: Medinet Habu: Volume IV, OIP 51, Plates 203-207 (Chicago: 1940)
- Kenneth A. Kitchen: Ramesside Inscriptions, Vol V, pp. 205:12-13; 209:11-12 (Oxford: 1983)