மெடிநெத் அபு

மெடிநெத் அபு (Medinet Habu) (அரபு மொழி: مدينة هابو‎; எகிப்தியம்: Tjamet or Djamet) எகிப்து நாட்டில் பாயும் நைல் நதியின் மேற்கு கரையில் உள்ள தீபை நகரத்திற்கு அருகில் உள்ள அல்-உக்சுர் நகரத்திற்கு அண்மையில் அமைந்த பண்டைய தொல்லியல் நகரம் ஆகும். புது எகிப்து இராச்சியத்தை ஆண்ட இருபதாம் வம்சத்தின் இரண்டாம் பார்வோன் மூன்றாம் ராமேசஸ் ஆட்சிக் காலத்தின் போது (கிமு 1186 - கிமு 1155) மெடிநெத் அபு நகரத்தில் தனது கல்லறைக் கோயிலையும் கட்டியும், கோயில் சுவற்றில் எகிப்திய மன்னர்களின் பெயர்கள் கொண்ட கல்வெட்டையும் நிறுவினார்.

மெடிநெத் அபு நகரத்தின் வான்பரப்புக் காட்சி
U28G14X1
O49
style="background: வார்ப்புரு:Hiero/lp/bgcolour; border-bottom: 1px solid வார்ப்புரு:Hiero/lp/bordercolour; padding: 0.5em" | ḏꜣmwt[1][2]
படவெழுத்து முறையில்
U28G14X1 X1
N25
style="background: வார்ப்புரு:Hiero/pt/bgcolour; border-bottom: 1px solid வார்ப்புரு:Hiero/pt/bordercolour; padding: 0.5em" | ḏꜣmwt(t)[1]
படவெழுத்து முறையில்

மெடிநெத் அபுவில் மூன்றாம் ராமேசஸ் தனக்காக நிறுவிய கல்லறைக் கோயில் 150 மீட்டர் நீளம் கொண்டது. மேலும் இக்கோயிலில் எகிப்திய மன்னர்களின் பெயர்கள் கல்வெட்டில் பொறிக்கப்பட்டுள்ளது.

மெடிநெத் அபுவில் மூன்றாம் ராமேசசின் கல்லறைக் கோயில்

இதனையும் காண்க தொகு

படக்காட்சிகள் தொகு

இலக்கியம் தொகு

  • James Henry Breasted The Excavation of Medinet Habu. Volume 1 General Plans and Views. University of Chicago Press, Chicago 1934.
  • Uvo Hölscher: The Excavation of Medinet Habu. University of Chicago Press, Chicago 1934–1954.

மேற்கோள்கள் தொகு


"https://ta.wikipedia.org/w/index.php?title=மெடிநெத்_அபு&oldid=3132301" இருந்து மீள்விக்கப்பட்டது