அபிதோஸ் மன்னர்கள் பட்டியல் அல்லது அபிதோஸ் அட்டவணை (Abydos King List or Abydos Table), பண்டைய எகிப்தை ஆண்ட 72 மன்னர்களின் பெயர்கள், அபிதோஸ் எனுமிடத்தில் முதலாம் சேத்தியின் கோயில் சுவற்றில் மூன்று வரிசைகளில், 38 குறுங்கல்வெட்டுகளில் பொறித்துள்ளனர். எகிப்திய பார்வோன் முதலாம் சேத்தி ஆட்சிக் காலத்தில் (கிமு 1290 - 1279) இக்குறுங்கல்வெட்டுகள் நிறுவப்பட்டது.[1]
மேல் இரண்டு வரிசைக் குறுங்கல்வெட்டுகளில் முதல் வம்ச மன்னர்கள் முதல் 16-ஆம் வம்ச மன்னர்கள் வரையிலான பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளது.
கீழ் உள்ள மூன்றாவது வரிசைக் குறுங்கல்வெட்டுகளில் எகிப்தின் பதினேழாம் வம்சம் மற்றும் 18-ஆம் வம்சம் மற்றும் 19-ஆம் வம்ச பார்வோன்கள் பெயர்கள் மட்டும் பொறிக்கப்பட்டுள்ளது.
அபிதோஸ் மன்னர்கள் பட்டியலில், முறை தவறி ஆட்சி செய்த எகிப்திய மன்னர்கள், அரசிகள் மற்றும் எகிப்தியரல்லாத மன்னர்கள் பெயர்கள் சேர்க்கப்படவில்லை. அவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள், எகிப்தியர் அல்லாத ஐக்சோஸ் மன்னர்கள் (15-ஆம் வம்ச மன்னர்கள்), 18-ஆம் வம்சத்தின் ஆட்சியாளர்களான அரசி ஆட்செப்சுட்டு, பார்வோன்கள் அக்கெனதென், மென்கௌரே, துட்டன்காமன் மற்றும் ஆய் போன்றோர் ஆவர்.
எகிப்திய மன்னர்கள் பட்டியலின் சுருக்கம்
தொகு
குறுங்கல்வெட்டுகள் 40 to 47
|
n°
|
கல்வெட்டில் பெயர்
|
பொதுவான பெயர்
|
|
40 |
நெத்ஜெர்கரே |
நெத்ஜெர்கரே
|
41 |
மென்கரே |
மென்கரே
|
42 |
நெபர்கரே |
இரண்டாம் நெபர்கரே
|
43 |
நெபர்கரே நெபி |
நெபர்கரே நெபி
|
44 |
ஜெத்கரே செமாய் |
ஜெத்கரே செமாய்
|
45 |
நெபர்கரே கெண்டு |
நெபர்கரே கெண்டு
|
46 |
மெரென்ஹோர் |
மெரன்ஹோர்
|
47 |
சினெபெர்கா |
நெபெர்காமின்
|
குறுங்கல்வெட்டுகள் 48 to 56
|
n°
|
கல்வெட்டில் பெயர்
|
பொதுவான பெயர்
|
|
48 |
நிகரே |
நிகரே
|
49 |
நெபர்கரே தேரெரு |
நெபர்கரே தேரெரு
|
50 |
நெபர்காஹோர் |
நெபர்காஹோர்
|
51 |
நெபர்கரே பெபிசெனெப் |
நெபர்கரே பெபிசெனெப்
|
52 |
சினெபெர்கா அனு |
நெபர்காமின் அனு
|
53 |
கௌகரா |
காகரே இபி
|
54 |
நெபர்கௌரே |
இரண்டாம் நெபர்கௌரே
|
55 |
நெபர்கௌஹோர் |
நெபர்கௌஹோர்
|
56 |
நெபரிகரே |
நெபரிகரே
|
குறுங்கல்வெட்டுகள் 75 and 76
|
n°
|
கல்வெட்டில் பெயர்
|
பொதுவான பெயர்
|
|
75 |
மென்பெத்திரா |
முதலாம் ராமேசஸ்
|
76 |
மென்மாத்திரா |
முதலாம் சேத்தி
|