நியூசெர்ரே இனி

நியூசெர்ரே இனி (Nyuserre Ini) பண்டைய எகிப்தின் பழைய இராச்சியத்தை ஆண்ட, ஐந்தாம் வம்சத்தின் ஆறாவது ஆட்சியாளர் ஆவார். பார்வோன் நெபெரிர்கரே ககையின் மகனான இவர் கிமு 25-ஆம் நூற்றாண்டின் இரண்டாம் பாதியில் பண்டைய எகிப்தை 24 முதல் 35 ஆண்டுகள் ஆட்சி செய்தார். இவருக்குப் பின் எகிப்தை மென்கௌஹோர் கையூ ஆட்சி செய்தார்.

நியூசெர்ரே இனி
படிமம்:File:Niuserre Double Statue.jpg
எகிப்தின் பாரோ
ஆட்சிக்காலம்24 முதல் 35 ஆண்டுகள், கிமு 25-ஆம் நூற்றாண்டின் பிந்தைய காலம் [note 1][note 2], ஐந்தாம் வம்சம்
முன்னவர்செப்செஸ்கரே அல்லது நெபெரிபிரே
பின்னவர்மென்கௌஹோர் கையூ
துணைவி(யர்)ரெப்டினூப்
பிள்ளைகள்இளவரசி காமெரெர்நெப்தி, ரெபுத்நெப்த, செரெத்நெப்தி ,
கெண்டிகௌஹோர், ஒக்போ
மென்கௌஹோர் கையூ
தந்தைநெபெரிர்கரே ககை
தாய்இரண்டாம் கெண்ட்கௌஸ்
நினைவுச் சின்னங்கள்நியூசெர்ரே இனி பிரமிடு
24-ஆம் லெபிசியஸ் பிரமிடு
இரட்டைப் பிரமிடு
இரா கடவுள் கோயில்
நெபெரிர்கரே ககையின் முமுமையாக கட்டுதல்
நெபரெபிரே பிரமிடை முழுமையாக்குதல்
யுசர்காப்பின் இரா கோயில் வளாகத்தை முழுமையாக்கல்

மன்னர் மென்கௌரேவின் பிரமிடு, நினைவுக் கோயிலை முழுமையாக்கல்

இவரது ஆட்சியின் போது இராணுவ நடவடிக்கைகளுக்கு சிறிய சான்றுகள் உள்ளன; எகிப்திய அரசு லெவண்டைனின் (தற்கால லெபனான் கடற்கரை நகரான பைப்லோசுடன் வணிக உறவுகளை கொண்டிருந்தது. மேலும் சினாய் தீபகற்பம் மற்றும் கீழ் நுபியாவுடன் கல் சுரங்கங்கள் தொடர்பாக வணிக உறவுகளை வளர்த்தது. இவரது ஆட்சியில் எகிப்து வளர்ச்சி அடைந்தது. மேலும் நோம்களின் ஆளுநர்கள் திறம்பட நிர்வாகம் செய்தனர்.

பழைய இராச்சிய பாரோக்களைப் போலவே, பார்வோன் நியுசெர்ரே மரணத்தின் போது இறுதிச் சடங்குகள் நடத்தப்படது. நியூசெர்ரேவின் நினைவுக் கோயிலில் வழிபாட்டு முறை, மத்தியகால இராச்சியத்தை ஆண்ட எகிப்தின் பன்னிரண்டாம் வம்சம் வரை நீடித்தது. மன்னர் நியூசெர்ரே விசுவாசிகளுக்கும், கடவுள்களுக்கும் இடையில் ஒரு பரிந்துரையாளராக அழைக்கப்பட்டார்.

மன்னர் நியூசெர்ரே இனி தனக்கான புதிய பிரமிடுவை கட்டியதுடன், 24-ஆம் லெபிசியஸ் பிரமிடு, இரட்டைப் பிரமிடு, இரா கடவுள் கோயில், நெபெரிர்கரே ககையின் பிரமிடு, யுசர்காப்பின் இரா கோயில் வளாகம், மன்னர் மென்கௌரேவின் பிரமிடு மற்றும் நினைவுக் கோயிலை முழுமையாக கட்ட்டி முடித்தார்.

படக்காட்சிகள்தொகு

இதனையும் காண்கதொகு

மேற்கோள்கள்தொகு

 1. Verner 2001b, ப. 589.
 2. Hawass & Senussi 2008, ப. 10.
 3. LACMA 2016.
 4. Altenmüller 2001, ப. 599.
 5. Encyclopædia Britannica 2016.
 6. Clayton 1994, ப. 60.
 7. Ziegler 2007, ப. 215.
 8. Malek 2000a, ப. 100.
 9. Rice 1999, ப. 141.
 10. Van de Mieroop 2011, ப. 55.
 11. Strudwick 2005, ப. xxx.
 12. von Beckerath 1999, ப. 283.
 13. Hornung 2012, ப. 491.
 14. Nolan 2012, ப. 3.
 15. Strudwick 1985, ப. 3.
 16. Hayes 1978, ப. 58.
 17. Verner 2001a, ப. 404.
 18. von Beckerath 1997, ப. 56.
 19. Clayton 1994, ப. 61.
 20. 20.0 20.1 Leprohon 2013, ப. 40.
 21. Leprohon 2013, ப. 40, see also footnote 59.
 22. von Beckerath 1999, ப. 59.
 23. 23.0 23.1 Leprohon 2013, ப. 40, see also footnote 58.

உசாத்துணைதொகு

வெளி இணைப்புகள்தொகு

முன்னர்
செப்செஸ்கரே அல்லது
நெபெரேபிரே
பழைய எகிப்திய இராச்சிய மன்னர்
எகிப்தின் ஐந்தாம் வம்சம்
பின்னர்
மென்கௌஹோர் கையூபிழை காட்டு: <ref> tags exist for a group named "note", but no corresponding <references group="note"/> tag was found

"https://ta.wikipedia.org/w/index.php?title=நியூசெர்ரே_இனி&oldid=3624562" இருந்து மீள்விக்கப்பட்டது