அபுசிர்
அபுசிர் (Abusir (அரபு மொழி: ابو صير பழைய எகிப்து இராச்சிய காலத்தில் கீழ் எகிப்தில் இருந்த நகரம் ஆகும். இந்நகரம் பண்டைய எகிப்தியக் கடவுள்களான ஒசிரிசுவின் இருப்பிடம் ஆகும். பழைய எகிப்திய இராச்சியத்தை ஆண்ட் ஐந்தாம் வம்சத்தவர்கள் காலத்தில், அபுசிர் நகரத்தின் மேற்கில் இறந்த மன்னர்களின் கல்லறைகள் மற்றும் பிரமிடுகள் எழுப்பப்பட்டது.[1][2] 19ஆம் நூற்றாண்டில் இறுதியில் அபுசிர் நகரத்தின் தொல்லியல் அகழாய்வில் பழைய எகிப்திய இராச்சிய காலத்திய அபுசிர் பாபிரஸ் காகிதத் துண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டது.
அபுசிர் | |
---|---|
மாற்றுப் பெயர் | பூசிரி |
இருப்பிடம் | எகிப்து |
பகுதி | கொய்ரோ ஆளுநரகம் |
ஆயத்தொலைகள் | 29°54′N 31°12′E / 29.9°N 31.2°E |
| |||||
பூசிரி படவெழுத்து முறையில் |
---|
அபுசிர் தொல்லியல் மேட்டில் பழைய எகிப்து இராச்சியத்தை ஆண்ட ஐந்தாம் வம்சத்தவர்களின் 14 பிரமிடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவைகளில் பெரும்பாலும் படிகள் பிரமிடுகள் ஆகும்.
பெரிய பிரமிடுகள்
தொகு- நெபெரிர்கரே கலை பிரமிடு, அபுசிரின் மிக உயர்ந்த பிரமிடு
- நியுசெரேரே பிரமிடு
- மன்னர் சகுராவின் பிரமிடு
சிறிய பிரமிடுகள்
தொகு- முற்றுப்பெறாத நெபரெப்பிரே பிரமிடு
- இராணி கென்கௌஸ் பிரமிடு
- முற்றுப்பெறாத மன்னர் செப்சேஸ்கரே பிரமிடு [3]
- லெப்சியஸ் பிரமிடு பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8021-3935-3</ref>
மஸ்தபாக்கள் அல்லது நித்திய வீடுகள்
தொகு- பிதாசெப்சசின் மஸ்தபா
- இளவரசன் நக்தகரேவின்
தெற்கு அபுசிர் கல்லறைகள்
தொகு- மூன்றாம் வம்ச மன்னர் இட்டியின் கல்லறை
- எகிப்தின் மூன்றாம் வம்ச பூசாரி ஹெடேப்பியின் கல்லறை
- நான்காம் வம்ச பூசாரி காபேரின் கல்லறை
- ஐந்தாம் வம்ச பூசாரி ரகோதேப்பின் கல்லறை
- ஐந்தாம் வம்ச முடிவின் பூசாரி பெதேக்தியின் கல்லறை
- ஆறாம் வம்ச மன்னர் குவார் மற்றும் அவரது மகனின் கல்லறை
- தேரோட்டியின் குடைவரை கல்லறை
கோயில்
தொகுஇரண்டாம் ராமேசஸ் நிறுவிய 500 நீளமுள்ள சுண்ணாம்புக்கல்லால் கட்டிய கோயில் அபுசிர் நகரத்தில் கண்டெடுக்கப்பட்டது.[4]
2011-இல் கொள்ளையடிக்கப்பட்ட களங்கள்
தொகுஅபுசிர், சக்காரா, தச்சூர் தொல்லியல் களங்களின் நினைவுச்சின்னங்கள், 2011-இல் கிளர்ச்சியாளர்களால் கொள்ளையடிக்கப்பட்டது.[5][6]மம்மிகள் போன்ற தொல்பொருள் கொள்ளை நிகழ்வுகள் 2013 வரை நடைபெற்றது.[7]
தட்ப வெப்பம்
தொகுதட்பவெப்ப நிலைத் தகவல், அபுசிர் | |||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
மாதம் | சன | பிப் | மார் | ஏப் | மே | சூன் | சூலை | ஆக | செப் | அக் | நவ | திச | ஆண்டு |
உயர் சராசரி °C (°F) | 19.6 (67.3) |
21.2 (70.2) |
24.5 (76.1) |
29 (84) |
32.9 (91.2) |
35.3 (95.5) |
35.5 (95.9) |
35.2 (95.4) |
32.9 (91.2) |
30.7 (87.3) |
25.9 (78.6) |
21.4 (70.5) |
28.68 (83.62) |
தினசரி சராசரி °C (°F) | 13.5 (56.3) |
14.5 (58.1) |
17.5 (63.5) |
21.1 (70) |
24.8 (76.6) |
27.5 (81.5) |
28.4 (83.1) |
28.3 (82.9) |
26.2 (79.2) |
24.1 (75.4) |
19.8 (67.6) |
15.4 (59.7) |
21.76 (71.17) |
தாழ் சராசரி °C (°F) | 7.4 (45.3) |
7.9 (46.2) |
10.6 (51.1) |
13.3 (55.9) |
16.8 (62.2) |
19.8 (67.6) |
21.3 (70.3) |
21.4 (70.5) |
19.5 (67.1) |
17.5 (63.5) |
13.7 (56.7) |
9.4 (48.9) |
14.88 (58.79) |
பொழிவு mm (inches) | 4 (0.16) |
3 (0.12) |
2 (0.08) |
1 (0.04) |
0 (0) |
0 (0) |
0 (0) |
0 (0) |
0 (0) |
0 (0) |
2 (0.08) |
4 (0.16) |
16 (0.63) |
ஆதாரம்: Climate-Data.org, altitude: 18m[8] |
இதனையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Abū Ṣīr, archaeological site, Egypt
- ↑ Abusir
- ↑ Verner, Miroslav. The Pyramids: The Mystery, Culture, and Science of Egypt's Great Monuments. Grove Press. 2001 (1997). பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8021-3935-3
- ↑ M. Barta, L. Varadzin, J. Janák, J. Mynářová, V. Brúna: The temple of Ramesses II in Abusir, in Egyptian Archaeology, Spring 2018, 52, 10-14
- ↑ "Egyptological Looting Database 2011". Archived from the original on 2012-09-18. பார்க்கப்பட்ட நாள் 2020-11-26.
- ↑ "iDNES.cz".
- ↑ Disaster of Abusir: Government neglicence wastes an historical era (Arabic)
- ↑ "Climate: Abu Sir - Climate graph, Temperature graph, Climate table". Climate-Data.org. பார்க்கப்பட்ட நாள் 28 October 2013.
வெளி இணைப்புகள்
தொகு- Czech Institute of Egyptology: Abúsír, the site
- Egyptian monuments: Abusir Necropolis
- Waseda University Expedition to Abusir South பரணிடப்பட்டது 2018-10-01 at the வந்தவழி இயந்திரம்