கீழ் எகிப்து
பண்டைய கீழ் எகிப்து (Lower Egypt) (அரபு மொழி: مصر السفلى தற்கால எகிப்தின் தெற்கே அமைந்த மேல் எகிப்திற்கும், நடுநிலக்கடலுக்கும் இடையே அமைந்த நைல் ஆற்றின் முக்கோண வடிவில் அமைந்த வடிநிலப் பரப்பாகும். கீழ் எகிப்தில் நைல் ஆறு ஏழு கிளைகளாகப் பிரிந்து மத்தியதரைக் கடலில் கலக்கிறது. கீழ் எகிப்தில் அலெக்சாந்திரியா, அபுசிர், ஆவரிஸ், மென்டிஸ், பெலுசியம், சயீது துறைமுகம், சைஸ், தனீஸ், மெம்பிசு, எல் அய்யாத் மற்றும் தச்சூர் நகரங்கள் உள்ளது. கிமு 3,600-க்குப் பின்னர் நைல் ஆற்றின் வடிநிலத்தில் உலகின் முதன்மையான நாகரிகங்களில் ஒன்றான நைல் நாகரிகம் உருவானது. பண்டைய கீழ் எகிப்து இருபது ஆட்சிப் பிரிவுகளாக இருந்தது.[1] தற்போது கீழ் எகிப்தில் இரண்டு மிகப்பெரிய கால்வாய்களில் நைல் ஆறு பாய்கிறது. அதில் செங்கடலையும், மத்தியதரைக் கடலையும் இணைக்கும் சுயஸ் கால்வாய் முக்கியமானது ஆகும்.
கீழ் எகிப்து مصر السفلى | |||||||
---|---|---|---|---|---|---|---|
அறியப்படவில்லை–கிமு 3150 | |||||||
தலைநகரம் | மெம்பிசு | ||||||
பேசப்படும் மொழிகள் | எகிப்திய மொழி | ||||||
சமயம் | பண்டைய எகிப்திய சமயம் | ||||||
அரசாங்கம் | முடியாட்சி | ||||||
பார்வோன் | |||||||
வரலாறு | |||||||
• தொடக்கம் | அறியப்படவில்லை | ||||||
• முடிவு | கிமு 3150 | ||||||
| |||||||
தற்போதைய பகுதிகள் | எகிப்து |
புவியியல்
தொகுஇயற்கை வரலாற்று அறிஞர் பிளினி தமது இயற்கை வரலாறு எனும் நூலில் கீழ் எகிப்தின் பாயும் நைல் ஆறு, ஏழு கிளைகளாகப் பிரிந்து சென்றதை குறிப்பிட்டுள்ளார். தற்போது நைல் ஆறு, கீழ் எகிப்தில் இரண்டு பெரிய கால்வாய்கள், கிழக்கு மற்றும் மேற்கு பகுதி வழியாகப் பாய்ந்து மத்தியதரைக் கடலில் கலக்கிறது. இப்பெரும் கால்வாய்களிலிருந்து கணக்கற்ற வாய்க்கால்கள் வழியாக கீழ் எகிப்தின் வடிநிலத்தை வளப்படுத்துகிறது. மத்தியதரைக் கடலை ஒட்டி கீழ் எகிப்து உள்ளதால், மேல் எகிப்தை விட கீழ் எகிப்தின் தட்பவெப்பம் மிதமாகவும், அதிக மழைப் பொழிவும் கொண்டுள்ளது.[2]
வரலாறு
தொகுகீழ் எகிப்து நோம் எனும் 20 ஆட்சிப் பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது. பண்டைய எகிப்திய இராச்சியத்தின் தலைநகராக மெம்பிசு நகரம் விளங்கியது. இந்நகரத்தின் காவல் தெய்வம் நாகக் கடவுளான வத்செட் எனும் பெண் தெய்வம் ஆகும். கீழ் எகிப்தின் சின்னங்கள் பாபிரஸ் மற்றும் தேனீ ஆகும்.
புதிய கற்காலத்தின் கிமு 3,600 துவக்கத்தில் நைல் ஆற்றின் கரைகளில் வேளாண்மையும், காட்டு விலங்குகளான கழுதை, ஆடு, மாடு, நாய், பூனை, குதிரை போன்றவைகளை வீட்டு விலங்குகளாகப் பழக்கி வீட்டு வேலைக்கும், வேளாண்மைக்கும், காவலுக்கும், போக்குவரத்திற்கும், பால் கறப்பதற்கும் பயன்படுத்தினர். [3]
கிமு 3600-க்குப் பின்னர் எகிப்திய நாகரிகம் வேகமாக வளர்ச்சியுற்று புதிய பண்பட்ட நாகரிக சமுதாயத்தை உருவாக்கியது. [1] இக்கால கட்டத்தில் பண்டைய அண்மை கிழக்கின் தெற்கு லெவண்ட் பகுதி தொடர்புடைய பீங்கான் மட்பாண்டங்கள், கீழ் எகிப்தின் மக்கள் பயன்படுத்தினர்.[1] மெசொப்பொத்தேமியாவின் வெயிலில் காய வைத்து களிமண் செங்கல் தயாரிக்கும் முறை, கட்டிடக் கலை, வில் வித்தை மற்றும் வளைவுடன் கூடிய சுவர்கள் கட்டும் முறைகளை எகிப்தியர்கள் கற்றுக் கொண்டு பயன்படுத்தத் தொடங்கினர்.[1]
இப்பண்பாட்டின் தொடர்ச்சியாக கீழ் எகிப்தும், மேல் எகிப்தும் ஒன்றியணையத் துவங்கியது. [1]முன்னர் கீழ் எகிப்தியர்களுக்கும், மேல் எகிப்தியர்களுக்கு அடிக்கடி தொடர் தாக்குதல் நடந்து கொண்டிருந்தன.[1] மேல் எகிப்தை ஆண்ட எகிப்தின் துவக்க அரச மரபுபின் மன்னர் நர்மேர் கீழ் எகிப்தின் எதிரிகளை வென்று, இரு பகுதிகளை ஒன்றிணைத்து ஒரே குடையின் கீழ் ஆண்டார்.[4]
துவக்க கால கீழ் எகிப்தின் ஆட்சியாளர்கள்
தொகுஎகிப்தின் துவக்க கால வம்ச மன்னர் நார்மெருக்கு முன்னர் கீழ் எகிப்தின் ஆட்சியாளர்கள் குறித்தான பாலேர்மோ கல்வெட்ட்டில் குறிக்கப்பட்டுள்ளது.
பெயர் |
---|
சேக்கியு [5] |
காயூ[5] |
தியூ [5] |
தீஷ்[5] |
நெஹெப்[5] |
வாஸ்னெர்[5] |
மேக்கு [5] |
(பெயர் அழிந்துள்ளது)[5] |
ஆட்சிப் பிரிவுகள்
தொகுஎண் | எகிப்தியப் பெயர் | தலைநகரம் | தற்காலப் பெயர் | தமிழ் மொழிபெயர்ப்பு |
---|---|---|---|---|
1 | நெபு-ஹெட்ஜ் | நெப்-ஹெட்ஜ் / ( மெம்பிசு) | மித் ரகினா | வெள்ளைச் சுவர்கள் |
2 | கேன்சு | கேம் | அவ்சிம் | பசுவின் கால் |
3 | அமெண்ட் | இமு | மேற்கு | |
4 | சபி-ரெஸ் | திகேக்கா | தண்டா | தெற்கின் கவசம் |
5 | சப்-மே | சௌ | சயீல் ஹக்கர் | வடக்கின் கவசம் |
6 | காசேத் | காசு | சக்கா | மலை எருது |
7 | அமெண்ட் | மெட்டேலிஸ் | தாமன்ஹர் | மேற்கின் எறியுளி |
8 | அபித்து | தெஜெக்கு | டெல் -எல் மஸ்குதா | கிழக்கு எறியுளி |
9 | ஆதி | ஜெத் | அபு சிர் பாரா | கிழக்கின் கடவுள் |
10 | கா-கெம் | அத்ரிபிஸ் | டெல் அத்ரிப் | கருப்பு எருது |
11 | கா-ஹெசெப் | தரெமு | டெல் எல்-உரிதம் | எருது |
12 | தேப்-கா | ஜெப்நுத்ஜெர் | சமனுத் | கன்றும் பசுவும் |
13 | ஹெக்-அத் | இன்னு | மெத்திரியா (கெய்ரோவின் வெளிப்புறம்) | வளம் தரும் செங்கோல் |
14 | கெண்ட்-அப்த் | சர்வ் | டெல் அபு செபா | தூரக்கிழக்கு |
15 | தெகுத் | பாஹ | பாக்லியா | |
16 | கா | ஜெதேத் | டெல் எல்-ரப்பி | மீன் |
17 | செமபெக்தேத் | கீழ் தயஸ்போலிஸ் | டெல் எல்-பாலமூன் | கிரீடம் |
18 | அம்-கெண்ட் | பெர்-பஸ்தேத் | டெல் பஸ்தா | தெற்கின் இளவரசன் |
19 | அம்-பெகு | டிஜானெத் | டெல் நெபிசா | வடக்கின் இளவரசன் |
20 | சேப்து | பெர்-சேப்து | சாப்ட் எல்- ஹின்னா | வல்லூறின் இறகு |
இதனையும் காண்க
தொகு- பண்டைய எகிப்து
- மேல் எகிப்து
- எகிப்தின் துவக்க கால அரச மரபுகள் - (கிமு 3150 - கிமு 2686)
- பழைய எகிப்து இராச்சியம் - (கிமு 2686 – கிமு 2181)
- எகிப்தின் மத்தியகால இராச்சியம் - (கிமு 2055 - கிமு 1650)
- புது எகிப்து இராச்சியம் (கிமு 1550 – கிமு 1077)
- எகிப்தின் கிரேக்கப் பேரரசு - (கிமு 305 – கிமு 30)
- பண்டைய எகிப்தியக் கடவுள்கள்
- பண்டைய எகிப்தியக் கோவில்கள்
- எகிப்தின் முதல் வம்சம்
- எகிப்தின் பதினெட்டாம் வம்சம்
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 Carl Roebuck, The World of Ancient Times (Charles Scribner's Sons: New York, 1966) p. 52-53.
- ↑ Lower Egypt GEOGRAPHICAL DIVISION, EGYPT
- ↑ Carl Roebuck, The World of Ancient Times (Charles Scribner's Sons Publishing: New York, 1966) p. 51.
- ↑ Carl Roebuck, The World of Ancient Times (Charles Scribner's Sons Publishers: New York, 1966), p. 53.
- ↑ 5.0 5.1 5.2 5.3 5.4 5.5 5.6 5.7 Breasted (1909) p.36