சயீது துறைமுகம்
சயீது துறைமுகம் (Port Said) என்பது வடகிழக்கு எகிப்தில் அமைந்துள்ள ஒரு நகரமாகும். சுயஸ் கால்வாயின் வடக்கே மத்தியதரைக் கடலின் கரையோரத்தில், சுமார் 30 கிலோமீட்டர் (19 மைல்) பரப்பளவில் உள்ளது. தோராயமாக 603,787 (2010) மக்கள் தொகையை கொண்டுள்ளது. 1859 ஆம் ஆண்டில் சுயஸ் கால்வாய் கட்டப்பட்டபோது இந்த நகரம் நிறுவப்பட்டது.
சயீது துறைமுகம் | |
---|---|
மேலே இருந்து கடிகார திசையில்:
சயீது துறைமுகம், கடற்கரை பள்ளிவாசல், கால்வாயின் நுழைவாயிலிலுள்ள பள்ளிவாசல், நகரத்தின் கடற்கரைகள், கால்வாயில் சீகல்கள், நகரின் விடுதிகள் | |
அடைபெயர்(கள்): வீரம் நிறைந்த நகரம் | |
ஆள்கூறுகள்: 31°15′N 32°18′E / 31.250°N 32.300°E | |
Country | ![]() |
நிர்வாகம் | சயீது துறைமுகம் |
Founded | 1859 |
அரசு | |
• ஆளுநர் | அதெல் முகமது இப்ராகிம் [1] |
பரப்பளவு | |
• மொத்தம் | 1,351.1 km2 (521.7 sq mi) |
ஏற்றம் | 3 m (10 ft) |
மக்கள்தொகை (2010) | |
• மொத்தம் | 6,03,787 |
• அடர்த்தி | 450/km2 (1,200/sq mi) |
2010 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி | |
நேர வலயம் | எகிப்திய சீர் நேரம் (ஒசநே+2) |
தொலைபேசி குறியீடு | +20-66 |
இணையதளம் | PortSaid.gov.eg (in அரபு மொழி) |

அனைத்து தளங்களிலும் பிரமாண்டமான முகப்புகளுடன் ஏராளமான பழைய வீடுகள் உள்ளன. இது நகரத்திற்கு ஒரு தனித்துவமான தோற்றத்தை அளிக்கிறது. இதன் இரட்டை நகரம் புவாது துறைமுகம் ஆகும். இது சுயஸ் கால்வாயின் கிழக்குக் கரையில் அமைந்துள்ளது. புவாது துறைமுகத்தில் எந்த நகர மையமும் இல்லாத அளவிற்கு இரு நகரங்களும் ஒன்றிணைகின்றன. நகரங்கள் நாள் முழுவதும் இயங்கும் இலவச படகுகள் மூலம் இணைக்கப்பட்டுள்ளன. மேலும் அவை சேர்ந்து ஒரு பத்து இலட்சத்திற்கும் அதிகமான குடியிருப்பாளர்களைக் கொண்ட ஒரு பெருநகரப் பகுதியை உருவாக்குகின்றன. அவை ஆப்ப்பிரிக்க மற்றும் சுயஸ் கால்வாயின் ஆசிய பக்கங்களிலும் பரவியுள்ளன.இஸ்தான்புல், துருக்கி ( ஆசியா / ஐரோப்பா ) மற்றும் கோலோன், பனாமா ( வடக்கு / தென் அமெரிக்கா ) போன்றவற்றுடன், உலகின் இரண்டு கண்டங்களில் பரவியிருக்கும் சில கண்டம் தாண்டிய நகரங்களில் இதுவும் ஒன்றாகும்.
இந்நகரம் நிறுவப்பட்டதிலிருந்து ஒரு உலகளாவிய நகரமாக செயல்பட்டது. குறிப்பாக பத்தொன்பதாம், இருபதாம் நூற்றாண்டின் முதல் பாதியில் பல்வேறு தேசிய இனங்கள் மற்றும் மதங்கள் வசித்து வந்தபோது செழித்திருந்தது. அவர்களில் பெரும்பாலோர் மத்திய தரைக்கடல் நாடுகளைச் சேர்ந்தவர்கள். அவர்கள் சகிப்புத்தன்மையுடன் இணைந்து, ஒரு பிரபஞ்ச சமூகத்தை உருவாக்கினர். பிரித்தானிய எழுத்தாளர் இரட்யார்ட் கிப்ளிங் என்பவர் இந்நகரத்தைப் பற்ரி புகழ்ந்து குறிப்பிட்டுள்ளார். [2]
பெயர் தொகு
இந்நகரத்தின் பெயர் முதலில் 1855 இல் தோன்றியது. ஐக்கிய இராச்சியம், பிரான்ஸ், உருசியப் பேரரசு, ஆத்திரியா, எசுபானியா, பீட்மாண்ட் ஆகியவற்றைக் கொண்ட ஒரு சர்வதேச குழுவால் இது தேர்ந்தெடுக்கப்பட்டது. இது இரண்டு பகுதிகளைக் கொண்ட ஒரு கூட்டுப் பெயர்: துறைமுகம் (கடல் துறைமுகம்) மற்றும் சயீது (அந்த நேரத்தில் இருந்த எகிப்தின் ஆட்சியாளரின் பெயர்). சுயஸ் கால்வாயைத் தோண்டுவதற்கான சலுகையை பிரெஞ்சு தொழிலதிபரான பெர்டினாண்ட் டி லெசெப்சு என்பவருக்கு வழங்கினார்.
பொருளாதாரம் தொகு
இந்நகரம் 2009 மற்றும் 2010 ஆம் ஆண்டுகளில் மனித மேம்பாட்டுக் குறியீட்டின்படி எகிப்திய நகரங்களில் இரண்டாவது இடத்தைப் பிடித்தது. [3] நகரத்தின் பொருளாதாரம் மீன்பிடித்தல்,வேதிப்பொருட்கள், பதப்படுத்தப்பட்ட உணவு, சிகரெட்டுகள் போன்ற தொழில்களை நம்பி இருக்கிறது. மேலும், இங்கு அமைந்துள்ள துறைமுகம் பருத்தி மற்றும் அரிசி போன்ற எகிப்திய பொருட்களின் ஏற்றுமதிக்கு ஒரு முக்கியமான துறைமுகமாகவும், சுயஸ் கால்வாய் வழியாக செல்லும் கப்பல்களுக்கு எரிபொருள் நிரப்பும் நிலையமாகவும் இருக்கிறது. இது சுங்க வரியில்லா துறைமுகமாகவும், குறிப்பாக கோடையில் ஒரு சுற்றுலா விடுதியாகவும் இருக்கிறது. [4] இங்கு வலுவூட்டப்பட்ட கான்கிரீட்டினால் கட்டப்பட்ட உலகின் முதல் கலங்கரை விளக்கம் உள்ளது.
அதன் சிறந்த புவியியல் இருப்பிடம் காரணமாக, நகரம் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி வணிகங்களுடன் தளவாட தொடக்க நிலைகளை ஈர்க்க வடிவமைக்கப்பட்டுள்ளது. [5]2019 ஆம் ஆண்டில், எகிப்திய அதிபர் அப்துல்_பத்தா அல்-சிசி தலைமையிலான புதிய சுயஸ் கால்வாய் கட்டுமானத்தை நகரம் கண்டது.
மேற்கோள்கள் தொகு
- ↑ "Egypt's new provincial governors: Who's who?". Ahram Online. http://english.ahram.org.eg/NewsContent/1/64/177478/Egypt/Politics-/Egypts-new-provincial-governors-Whos-who.aspx. பார்த்த நாள்: 17 October 2016.
- ↑ Port-Saïd : Architectures XIXe-XXe siècles
- ↑ "Consejos para la vida –". http://www.rosaonline.net/Daily/News.asp?id=36636.
- ↑ "الصفحة الرئيسية -السياحه". http://www.portsaid.gov.eg/tourism/default.aspx.
- ↑ https://www.listcompany.org/Port_Said_Near_Egypt.html