அப்துல் பத்தா அல்-சிசி

அப்துல் ஃபத்தா சயீது காலில் அல்-சிசி (Abdel Fattah Saeed Hussein Khalil El-Sisi, அரபு மொழி: عبد الفتاح سعيد حسين خليل السيسي‎; பிறப்பு: 19 நவம்பர் 1954) எகிப்திய அரசுத்தலைவர். எகிப்திய படைத்துறைக் கட்டளைத் தளபதியாகவும், பாதுகாப்பு அமைச்சராகவும் 12 ஆகத்து 2012 முதல் 26 மார்ச் 2014 வரை பணியாற்றினார்.[3] படைத்துறைத் தலைவராக இவர் பணியாற்றிய போது முன்னாள் இசுலாமிய அரசுத்தலைவராக இருந்த முகம்மது முர்சியைப் பதவியில் இருந்து அகற்றுவதற்கு இவர் முக்கிய பங்காற்றினார். அதன் பின்னர் இவர் முதலாவது பிரதிப் பிரதமராக நியமிக்கப்பட்டார். 2014 மார்ச் 26 இல் இவர் அரசுத்தேர்தலில் பங்கேற்கும் பொருட்டு தனது பதவிகளைத் துறந்தார்.[3] 2014 மே 26-28 இல் இடம்பெற்ற தேர்தல்களில் இவர் பெரும் வெற்றி பெற்று அரசுத்தலைவராக அறிவிக்கப்பட்டார்.[4]

அப்துல் பத்தா அல்-சிசி
Abdel Fattah el-Sisi
எகிப்தின் அரசுத்தலைவர்
பதவியில் உள்ளார்
பதவியில்
7 சூன் 2014[1]
பிரதமர்இப்ராகிம் மாலாப்
முன்னையவர்அட்லி மன்சூர் (பதில்)
எகிப்தியப் பிரதிப் பிரதமர்
பதவியில்
16 சூலை 2013 – 26 மார்ச் 2014
பிரதமர்ஆசெம் அல் பெப்லாவி
இப்ராகிம் மாலாப்
முன்னையவர்மொம்தாசு அல்-சாயீது
44வது பாதுகாப்பு அமைச்சர்
பதவியில்
12 ஆகத்து 2012 – 26 மார்ச் 2014
முன்னையவர்முகமது உசைன் தந்தாவி
பின்னவர்செட்கி சோபி
எகிப்தியப் படைத்துறைத் தலைவர்
பதவியில்
12 ஆகத்து 2012 – 26 மார்ச் 2014
முன்னையவர்முகமது உசைன் தந்தாவி
பின்னவர்செத்கி சோபி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு19 நவம்பர் 1954 (1954-11-19) (அகவை 70)
கெய்ரோ, எகிப்து
அரசியல் கட்சிசுயேட்சை
துணைவர்எந்திசார் ஆமெர் (1977–இன்று)
பிள்ளைகள்முஸ்தபா, மகுமுது, அசன், ஆயா[2]
முன்னாள் கல்லூரிஎகிப்திய இராணுவ அகாதெமி
இணையத்தளம்அதிகாரபூர்வ இணையதளம்
Military service
பற்றிணைப்பு எகிப்து
கிளை/சேவைஎகிப்திய இராணுவம்
சேவை ஆண்டுகள்1977–2014
தரம் படைத்துறை உயர்தரப்பணியாளர்
அலகுகாலாட்படை
போர்கள்/யுத்தங்கள்வளைகுடாப் போர்
சினாய் கிளர்ச்சி

மேற்கோள்கள்

தொகு
  1. "El-Sisi faces factious agenda after landslide victory". Ahram Online. 31 May 2014. http://english.ahram.org.eg/NewsContent/1/64/102610/Egypt/Politics-/ElSisi-faces-factious-agenda-after-landslide-victo.aspx. பார்த்த நாள்: 3 June 2014. 
  2. "Egyptian presidential candidates' wives in the spotlight". Ansa Med. 13 May 2014. http://www.ansamed.info/ansamed/en/news/sections/politics/2014/05/13/egyptian-presidential-candidates-wives-in-the-spotlight_84db062c-a9aa-483d-8a03-bb5562446bfb.html. பார்த்த நாள்: 3 June 2014. 
  3. 3.0 3.1 "Egypt's El-Sisi bids military farewell, says he will run for presidency". Ahram Online. 26 மார்ச் 2014. பார்க்கப்பட்ட நாள் 26 மார்ச் 2014. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)
  4. "Former army chief scores landslide victory in Egypt presidential polls". Egypt News.Net இம் மூலத்தில் இருந்து 31 மே 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140531124018/http://www.egyptnews.net/index.php/sid/222436239/scat/d7006824400aaac1/ht/Former-army-chief-scores-landslide-victory-in-Egypt-presidential-polls. பார்த்த நாள்: 29 May 2014. 

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=அப்துல்_பத்தா_அல்-சிசி&oldid=3286052" இலிருந்து மீள்விக்கப்பட்டது