ஆவரிஸ்
ஆவரிஸ் (Avaris) தற்கால எகிப்தின் கீழ் எகிப்து (வடக்கு எகிப்து) பிரதேசத்தில் பாயும் நைல் நதி வடிநிலப் பரப்பின் கிழக்கில் அமைந்த பண்டைய நகரம் ஆகும்.[1] பண்டைய எகிப்தின் வடக்கு பிரதேசத்தை ஆண்ட பதினைந்தாம் வம்சத்தவர்களான ஐக்சோஸ் மக்களின் தலைநகரமாகவும், வணிக மையமாகவும் ஆவரிஸ் நகரம் விளங்கியது.[2] [3]
ஆவரிஸ் | |
---|---|
கீழ் எகிப்தில் நைல் நதி வடிநிலத்தில் ஆவரிஸ் நகரத்தின் அமைவிடம் | |
இருப்பிடம் | சர்கியா ஆளுநகரம், எகிப்து |
பகுதி | கீழ் எகிப்து |
ஆயத்தொலைகள் | 30°47′14.7″N 31°49′16.9″E / 30.787417°N 31.821361°E |
வகை | குடியிருப்பு |
கிமு 1550-இல் 17-ஆம் வம்சத்தின் இறுதிப் பார்வோன் முதலாம் அக்மோஸ் கீழ் எகிப்தின் பிலிஸ்தியர்களையும், கானானியர்களையும் வென்று மேல் எகிப்தையும் கீழ் எகிப்தையும் ஒன்றிணைத்தார். [4] 17-ஆம் வம்சத்தவர்கள் தீபை நகரத்தை தலைநக்ரமாகக் கொண்டதால் ஆவரிஸ் நகரம் கைவிடப்பட்டது. இதனால் காலப்போக்கில் இந்நகரம் பாழ்பட்டு போனது. ஆவரிஸ் நகரம் கல்லறைகளுக்கான இடமானது. ஆவரிஸ் நகரம் அருகே 19-ஆம் வம்ச பார்வோன் இரண்டாம் ராமேசஸ் (கிமு 1279 – 1213), பாழ்பட்ட ஆவரிஸ் நகரம் அருகே பை-ராமேசஸ் எனும் புதிய நகரத்தை நிறுவி தன தலைநகரத்தை தீபையிலிருந்து பை-ராமசேசுக்கு மாற்றினார்.
இதனையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Holladay, John S. Jr. (1997) "The Eastern Nile Delta During the Hyksos and Pre-Hyksos Periods: Toward a Systemic/Socioeconomic Understanding", in Eliezer D. Oren (1997). The Hyksos: new historical and archaeological perspectives. University Museum, University of Pennsylvania. pp. 183–252. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-924171-46-8.
- ↑ Avaris_Capital_of_the_Hyksos
- ↑ Baines and Malek "Atlas of Ancient Egypt" p 15 nome list and map, p 167 enlarged map of the delta.
- ↑ Some claim that Kamose and Ahmose were the same person and that, after the capture of Avaris and the expulsion of the Hyksos made the founding of the Eighteenth dynasty of Egypt possible, Kamose changed his name (see discussion in Baines and Ma'lek)
ஆதார நூற்பட்டியல்
தொகு- Carl Nicholas Reeves (2000). Ancient Egypt: the great discoveries : a year-by-year chronicle. Thames & Hudson. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-500-05105-4.
- Pierce, R.W., Entry on "Rameses" in Geoffrey W. Bromiley (June 1995). The International Standard Bible Encyclopedia: Q-Z. Vol. IV. Wm. B. Eerdmans Publishing. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8028-3784-4. பார்க்கப்பட்ட நாள் 2010-11-27.
- Manfred Bietak (1996). Avaris, the capital of the Hyksos: recent excavations at Tell el-Dabʻa. British Museum Press for the Trustees of the British Museum. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-7141-0968-8.
- David Rohl (2010). The Lords Of Avaris. Random House. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4070-1092-2.
வெளி இணைப்புகள்
தொகு- Tell el-Dabʿa Homepage - available in German and English