எறியுளி என்பது பெரும்பாலும் திமிங்கிலம், சுறா போன்ற பெரிய வகை மீன்களைப் பிடிக்கப் பயன்படும் ஈட்டி போன்ற எறியக்கூடிய ஆயுதம். இதனோடு வலுவான கயிறு பிணைக்கப்படிருக்கும்.

இனுவிட்டு (Inuit) வேட்டையாடுநர் கயாக்கு (kayak) என்னும் குழிப்படகில் அல்லது பொந்துப்படகில் இருந்து எறியுளியைக் கொண்டு வேட்டையயடுதல். இடம் வட அமெரிக்காவில் உள்ள அடுசன் குடா, காலம் தோராயமாக 1908-1914

வரலாறு

தொகு
 
Epipaleolithic Azilian Le Mas-d'Azil, Ariège department, France
 
"Manner in which Natives of the East Coast strike turtle." Near Cooktown, Australia. From Phillip Parker King's Survey. 1818.

சங்க காலத்தில் தமிழர்கள் இரவில் கடலில் சென்று திமிங்கிலத்தை வேட்டையாடும்பொழுது எறியுளியைப் பயன்படுத்தினார்கள் என்று பல இடங்களில் கூறப்பட்டுள்ளது. எடுத்துக்காட்டாக,

குறியிறைக் குரம்பைக் கொலைவெம் பரதவர்
எறியுளி பொருத ஏமுறு பெருமீன்
புண்ணுமிழ் குருதி புலவுக்கடல் மறுப்பட
விசும்பணி வில்லிற் போகிப் பசும்பிசிர்த்
திரைபயில் அழுவம் உழக்கி உரனழிந்து
நிரைதிமில் மருங்கில் படர்தருந் துறைவன்..
(அகநாநூறு 210)

சங்ககாலத் தமிழ் நூல்களில் கூறப்படுவது மட்டும் அல்லாமல், இவ்வகையான ஆயுதங்களின் பயன்பாடு பல தொல்குடிகளிடம் இருந்துள்ளது[1] பிரான்சின் தெற்கே உள்ள காசுக்கே குகை என்னும் இடத்தில் 16,000 ஆண்டுப் பழமையான ஒவியங்களில் எறியுளி போன்ற ஆயுதத்தைப் பயன்படுத்தி சீல் (seal) என்னும் கடல்வாழ் உயிரினத்தைக் கொன்ற காட்சிகள் காட்டப்பட்டுள்ளன.

விவிலியத்தில், எறியுளியின் பயன்பாடு பற்றிய குறிப்பு உள்ளது, ஆனால் விரிவாக விளக்கப்படவில்லை.[2]

கிரேக்க வரலாற்று ஆசிரியர் பாலிபியுசு (Polybius) (~ கி.மு 203-120), அவர் எழுதிய வரலாற்று நூலில் ("The Histories (Polybius)") வாள்மீன் (swordfish) என்னும் மீனை எறியுளியால் வேட்டை ஆடியதைப் பற்றி விளக்கியுள்ளார்.[3] . அரப்பாவில் வாழ்ந்தவர்கள் செப்பு மாழையால் செய்த எறியுளியைப் பயன்படுத்தியது பற்றியும்[4],[5], அந்தமான் நிக்கோபார் மக்கள் மீன் பிடிக்கப் பயன்படுத்தியதைப் பற்றியும் அறிந்துள்ளார்கள்.[6].

குறிப்புகள்

தொகு
  1. Guthrie, Dale Guthrie (2005) The Nature of Paleolithic Art. Page 298. University of Chicago Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0226311260
  2. Canst thou fill his skin with barbed irons? or his head with fish spears? 41:7
  3. Polybius, "Fishing for Swordfish", Histories Book 34.3 (Evelyn S. Shuckburgh, translator). London, New York: Macmillan, 1889. Reprint Bloomington, 1962.
  4. Ray 2003, page 93
  5. Allchin 1975, page 106
  6. Edgerton 2003, page 74

உசாத்துணை

தொகு

வெளியிணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=எறியுளி&oldid=3236400" இலிருந்து மீள்விக்கப்பட்டது