நார்மெர் எகிப்தின் துவக்க வம்சத்தின், முதல் வம்சத்தை நிறுவிய மன்னராக கருதப்படுகிறார். இவர் ஒருவேளை துவக்க அரச மரபுக்கு முந்தைய மன்னர் பார்வோன் கா அல்லது இரண்டாம் இசுகோர்ப்பியோன் என்றும், சிலர் இவரை மேல் எகிப்து மற்றும் கீழ் எகிப்தினை ஒன்றிணைத்தவராகக் கருதுகின்றனர். இவர் தினீஸ் நகரத்தை நிறுவினார். மேலும் இவர் எகிப்தை ஒன்றிணைத்தை நினைவு கூறும் வகையில் நார்மெர் கற்பலகையை நிறுவினார். 5,100 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த கற்பலகையே உலக வரலாற்றை ஆவணப்படுத்தும் முதல் தொல்பொருள் ஆகும். இவரது கல்லறை உம் எல்-காப் எனுமிடத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

நார்மெர்
மெனெஸ்
நார்மெர் கற்பலகையில் மன்னர் நார்மெரின் உருவம்
எகிப்தின் பாரோ
ஆட்சிக்காலம்கிமு 3100, எகிப்தின் முதல் வம்சம்
முன்னவர்இரண்டாம் இசுகோர்ப்பியோன்
பின்னவர்ஹோர்-ஆகா
  • Horus name: Hor-Narmer (often show in a serekh with just the catfish)
    Ḥr-nˁr-mr
    Fierce catfish of Horus
    G5
    U23

    Second Horus name: Hor-Narmer-Tjai (rare-only one example exists)
    Ḥr-nˁr-mr-ṯ3j
    Manly catfish of Horus
    G5
    U23G47

துணைவி(யர்)நெய்த்தோதேப்
பிள்ளைகள்ஹோர்-ஆகா
அடக்கம்கல்லறை எண்கள் B17 மற்றும் B18, உம் எல்-காப், எகிப்து
கற்பலகையின் முன்பக்க வரைபடம்
கற்பலகையின் பின்பக்க வரைபடம்
மன்னர் நார்மெரின் செங்கோல்
நார்மெரின் செங்கோல்
நார்மெர் செங்கோலின் தலைப்பகுதி வரைபடம்.[2]
மன்னர் நார்மெர் அரசவை விழாக் காட்சியின் வரைபடம். இதில் போரில் சிறைபிடிக்கப்பட்டவர்கள் மற்றும் கொள்ளையடிக்கப்பட்டப் பொருட்களை மன்னன் நர்மருக்கு வழங்கப்படும் ஒரு விழாவை சித்தரிக்கிறது. மன்னர் நார்மெர் நீண்ட அங்கியுடன், தலையில் கீழ் எகிப்தின் சிவப்பு கிரீடத்தை அணிந்து கொண்டு, கையில் ஒரு உழவுக் கருவியை தாங்கியுள்ளார். இடதுபுறத்தில், நார்மெரின் பெயர் அரண்மனை முகப்பில் ஒரு பருந்து மூலம் காட்டப்பட்டுள்ளது. இதன் கீழ் போரில் கொள்ளையடிக்கப்பட்ட விலங்குகள் மற்றும் மனிதர்கள பதிவு உள்ளது. [1]

இதனையும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

  1. Millet 1990, ப. 53–59.
  2. Wengrow 2006, ப. 41–44.

வெளி இணைப்புகள் தொகு



"https://ta.wikipedia.org/w/index.php?title=நார்மெர்&oldid=3502553" இருந்து மீள்விக்கப்பட்டது