இரண்டாம் இசுகோர்ப்பியோன்

வரலாற்றுக்கு முந்தைய எகிப்தின் தெற்கு எகிப்தை ஆண்ட மன்னர்

இரண்டாம் இசுகோர்ப்பியோன் (Scorpion II), மூன்றாம் நக்காடா பண்பாட்டு காலத்தில் (கிமு 3320 - 3000) வரலாற்றுக்கு முந்தைய எகிப்தின் தெற்கு எகிப்தை ஆண்ட ஆட்சி செய்த மன்னர் ஆவார். பண்டைய எகிப்திய மொழியில் இவரை செல்க் (Selk) அல்லது வேகா (Weha) என்றும் அழைப்பர். இவர் தினீஸ் நகரத்தை தலைநகராக் கொண்டு மேல் எகிப்தை ஆட்சி செய்தார்.

இரண்டாம் இசுகோர்ப்பியோன்
Scorpion II
வேகா, செல்க்
மன்னர் இரண்டாம் இசுகோர்ப்பியோனின் சிற்பம்
எகிப்தின் பாரோ
முன்னவர்பார்வோன் கா
பின்னவர்பார்வோன் நார்மெர்
  • Horus name: வேகா/செல்க்

    தேள் ?

    Z1

இடது மார்பகத்திற்கு கீழே மன்னர் தேள் என்ற ஹோரஸ் பெயரைக் கொண்ட ஒரு மனிதனின் உடல்.
மன்னர் இரண்டாம் ஸ்கார்ப்பியனைக் குறிக்கும் 6 இதழ்கள் கொண்ட தங்க நிற பூ அல்லது இலை

இரண்டாம் இசுகோர்ப்பியோன் பெயர் நவீன எகிப்தியவியலில் பெரும் சர்ச்சைக்குரியதாக உள்ளது. இவரின் பெயர் பெரும்பாலும் வட்ட வடிவில் அமைந்த ஆறு அல்லது 6 தங்க நிற இலை அல்லது பூக்களால் அறியமுடிகிறது. இந்த சின்னத்தை எகிப்தின் பண்டைய தொல்பொருட்களில் காண முடிகிறது.

ஆதாரங்கள்

தொகு

மன்னர் இரண்டாம் தேளின் சூலாயுதம்

தொகு

எகிப்தின் பண்டைய நெக்கென் தொல்லியல் களத்தில், எகிப்தியவியல் அறிஞர்களான ஜேம்ஸ் இ. கியூபெல்லி மற்றும் பெடரிக் டபிள்யூ. கிரீன் ஆகியோர் 1897-98ஆம் ஆண்டுகளில் அகழாய்வு செய்கையில் மன்னர் இரண்டாம் இசுகோர்ப்பியோனின் சூலாயுதம் கொண்ட ரொசெட்டாக் கல் கண்டெடுக்கப்பட்டது.[1]

ரொசெட்டாக் கல்லில் இரண்டாம் இசுகோர்ப்பியோன் மன்னர் தெற்கு எகிப்திற்குரிய ஒற்றை மணிமுடி சூடியிருந்தார். அத்துடன் கையில் வேளாண்மை செய்வதற்கான கொழு போன்ற கருவியை கையில் ஏந்தியிருக்கும் காட்சியும், மன்னரின் பின்புறத்தில் (இடது பக்க்தில்) இரண்டு பேர் விசிறி ஏந்தி நிற்கும் காட்சியும் உள்ளது.

மேலும் ரொசெட்டாக் கல்லில் பாபிரஸ் காகிதக்கட்டுகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. ரொசெட்டாக் கல்லின் மேற்பகுதியில் ஆடலரசிகள் மற்றும் பூசாரிகளின் உருவங்கள் உள்ளது. பூசாரி தம் கையில் t வடிவ பதாகை ஏந்தியிருக்கும் காட்சி உள்ளது. இரண்டாம் இசுகோர்ப்பியோனின் சூலாயுத ரொசெட்டாக் கல்லின் அடிப்பகுதி சிதிலமடைந்துள்ளது. மன்னர் மற்றும் அவரது அவையோர் எதிரில் போர் வீரர்களின் அணிவகுப்பு காட்சி இடம் பெற்றுள்ளது.

மன்னர் இரண்டாம் இசுகோர்ப்பியோனின் சூலாயுதம் கொண்ட ரொசெட்டாக் கல்லில் சேத் கடவுள், மின் கடவுள் மற்றும் நெம்டி கடவுளர்களின் உருவங்கள் பொறிக்கப்பட்டுள்ளது.[2][2]

மன்னர் இரண்டாம் இசுகோர்ப்பியோனின் சூலாயுதம்[3]
மட்பாண்டத்தின் மேற்புறத்தில் இரண்டாம் இசுகோர்ப்பியோனின் வட்ட வடிவத்தில் பூக்களின் சின்னம்
தேள் உருவம் மற்றும் மன்னர் தேள் கையில் கொழு போன்ற கருவியை ஏந்தியிருக்கும் வரைபடம்
 
கிமு 31-ஆம் நூற்றாண்டில், இரண்டாம் இசுகோர்ப்பியோனின் ஆட்சிக் காலத்தில் மெசொப்பொத்தேமியா-பண்டைய எகிப்து வணிகப் பாதை கொண்டிருக்கலாம் எனக்கருதப்படுகிறது. [4][5]

படக்காட்சிகள்

தொகு

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "The Narmer Palette", The Ancient Egypt, archived from the original on June 15, 2006, பார்க்கப்பட்ட நாள் September 19, 2007.
  2. 2.0 2.1 Krzysztof Marek Ciałowicz: La naissance d'un royaume: L’Egypte dès la période prédynastique à la fin de la Ière dynastie. Institute of Archaeology, Jagiellonian University, Kraków, 2001, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 83-7188-483-4, pp. 97–98.
  3. Scorpion Macehead
  4. Redford, Donald B. Egypt, Canaan, and Israel in Ancient Times. (Princeton: University Press, 1992), p. 22.
  5. Hartwig, Melinda K. (2014). A Companion to Ancient Egyptian Art (in ஆங்கிலம்). John Wiley & Sons. p. 427. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781444333503.

உசாத்துணை

தொகு

ஆதார நூற்பட்டியல்

தொகு
முன்னர் வரலாற்றுக்கு முந்தைய எகிப்து
கிமு 31-ஆம் நூற்றாண்டு
பின்னர்