பலெர்மோ கல்
பலெர்மோ கல் (Palermo Stone), பண்டைய எகிப்தைஆண்ட எகிப்தின் முதல் வம்ச (கிமு 3150 – கிமு 2890) பார்வோன்கள் முதல் ஐந்தாம் வம்ச (கிமு 2392 – கிமு 2283) பார்வோன்களின் பெயர்கள் மற்றும் ஆட்சிக் காலம் குறித்த வரலாற்றுப் பதிவுகளை, பண்டைய எகிப்திய மொழியில் குறித்த, ஏழு கற்பலகைகளில் ஒன்றாகும். மேலும் இக்கற்பலகைகளில் எகிப்தில் ஒவ்வொரு ஆண்டிலும் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளையும், பண்டைய எகிப்திய மொழியில் குறிக்கப்பட்டுள்ளது. இக்கற்பலகைகளை பழைய எகிப்து இராச்சியத்தவர்களால் நிறுவப்பட்டது.[1]நிறுவப்பட்டது.
உயரம் | 43.5 செண்டி மீட்டர் |
---|---|
அகலம் | 25 செண்டி மீட்டர் |
உருவாக்கம் | கிமு] 2338 |
தற்போதைய இடம் | பலெர்மோ, சிசிலி, இத்தாலி |
இக்கற்பலகைகளில் ஒன்று தற்போது இத்தாலி நாட்டின் பலெர்மோ நகரத்தின் தொல்லியல் அருங்காட்சியகத்தில் உள்ளதால், இதற்கு பலெர்மோ கல் எனப்பெயராயிற்று. இற்கற்பலகைகள், எரிமலை குழம்புக் கற்களால் ஆனது. இந்தக் கற்பலகையின் ஐந்து துண்டுகள் கெய்ரோ நகர அருங்காட்சியகத்திலும், ஒரு துண்டுக் கற்பலகை இலண்டன் அருங்காடசியகத்திலும் உள்ளது.
தொல்லியல் வரலாறு
தொகுஇற்கற்பலகைகள் விவரிக்கும் வரலாற்றுப் பதிவுகள், ஐந்தாவது வம்சத்தை விட பிற்பகுதியில் இருந்து வந்ததா என்பது தெரியவில்லை. எகிப்தின் இருபத்தி ஐந்தாம் வம்சத்தின் (கிமு 747-656) ஆட்சிக்குப் பின்னர் இந்த கற்பலகைகள் மிகவும் பின்னர் செய்யப்பட்டது என இற்கற்பலகையின் உள்ளடக்கத்திலிருந்து தெளிவாகத் தெரிகிறது. பலேர்மோ கல் மற்றும் பிற துண்டுகளால் பாதுகாக்கப்படுவதால், அவை விவரிக்கும் காலகட்டத்தில் செதுக்கப்படவில்லை என்றும், அவைகள் நேரடியாக பழைய எகிப்திய இராச்சியத்தின் அசலை அடிப்படையாகக் கொண்டவை என பண்டைய எழுத்துக் கலை ஆய்வாளர்கள் கருதுகின்றனர். [2]
முக்கியத்துவம்
தொகுபலெர்மோ கல் மற்றும் இது தொடர்பான பிற கற்பலகைகள் பழைய எகிப்து இராச்சிய காலத்திய பண்டைய எகிப்திய மொழியின் ஆவணமாகும். இக்கற்பலகைகள் எகிப்தின் முதல் வம்சம் முதல் எகிப்தின் ஐந்தாம் வம்ச பார்வோன்களின் பெயர்களையும், அவர்களது ஆட்சிக் காலங்களையும், வரலாற்றையும் விவரிக்கும் முக்கிய எழுத்து ஆவணம் ஆகும்.[3][4]
இதனையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Dodson, Aidan (2004) The Complete Royal Families of Ancient Egypt, p.62. Thames & Hudson, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-500-05128-3.
- ↑ Wilkinson, Toby A. H. (2000), p.23ff.
- ↑ Palermo Stone, EGYPTIAN ARCHAEOLOGY
- ↑ The Palermo Stone
உசாத்துணை
தொகு- Partial and dated English translation of the text in J.H. Breasted, (1906). Ancient Records of Egypt, vol. I, sections 76–167. Chicago: University of Chicago Press.
- St. John, Michael (1999). The Palermo Stone: An Arithmetical View. London: University Bookshop Publications.பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-9536-8650-7
- Wilkinson, Toby A. H. (2000). Royal Annals of Ancient Egypt. New York: Columbia University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7103-0667-9.
- Wilkinson, Toby A. H. (1999). Early Dynastic Egypt. London: Routledge. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-203-02438-9.
- O'Mara, P.F. (1979). The Palermo Stone and the Archaic Kings of Egypt. Calif: Paulette Pub. Co, 113-131.
வெளி இணைப்புகள்
தொகு- Extract of a lecture given by T.A.H. Wilkinson, University College London 2000
- Image of London fragment and translation, Petrie Museum
- Gallery of images of Palermo Stone and Cairo fragments (and more) by J.D. Degreef.
- Christine Tetley's book பரணிடப்பட்டது 2017-02-11 at the வந்தவழி இயந்திரம்.
- New research and insights into the Palermo Stone