பள்ளிகளில் குழந்தைகள் ‘கல்தட்டு’(Slate) என்னும் கற்பலகையில் எழுதுகிறார்கள். இந்தப் பலகை, இயல்பான கல்லின் ஒருவகையாகும்.[1]

கற்பலகை (~1950)


உருவாக்கம்

தொகு

மணல் கலந்த களிமண் பாறை (Shale) வெப்பத்தாலும், அழுத்தத்தாலும் நீண்ட காலம் இறுகி உருமாறும். அதனால் இப்பாறையின் உருவமும் தன்மையும் மாறிக் மாக்கல் உண்டாகிறது.

அமைவிடம்

தொகு

கற்பலகைக்கான மாக்கல்லைப் பெரும்பாலும் திறந்தவெளிச் சுரங்கங்களிலிருந்து வெட்டி எடுக்கிறார்கள். பிரித்தானியா, அமெரிக்கா, செருமனி, இத்தாலி முதலிய நாடுகளில் இது பெருமளவில் கிடைக்கின்றது. இந்தியாவில் சாம், பீகார், மகாராட்டிரம், ஆந்திரப் பிரதேசம், பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் இது கிடைக்கிறது.

மேற்கோள்கள்

தொகு
  1. "குழந்தைகள் கலைக் களஞ்சியம்",1992, சென்னை:தமிழ் வளர்ச்சிக் கழகம்.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கற்பலகை&oldid=3743845" இலிருந்து மீள்விக்கப்பட்டது