நோம் (பண்டைய எகிப்து)
நோம் (nome)[1] பண்டைய எகிப்தின் ஆட்சிப் பிரிவு ஆகும்.[2]நோம் என்பது ஏறத்தாழ ஒரு மாவட்டத்தின் பரப்பளவு கொண்டதாகும். ஒவ்வொரு நோமும் ஒர ஆளுநரால் ஆளப்பட்டது.[3]பண்டைய எகிப்திய வரலாற்றில் நோம்களின் எண்ணிக்கை மாறுபட்டே கொண்டிருந்தது.[4] கிரேக்க மொழியில் நோம் என்பதற்கு மாவட்டம் என்று பொருள்.[5]பண்டைய எகிப்தை ஆண்ட கிரேக்கத் தாலமி வம்சத்தவர்களால் ஒரு மாவட்ட அளவிலான பிரதேசத்திற்கு நோம் என கிரேக்க மொழியில் பெயரிடப்பட்டது. [6]
வரலாறு
தொகுபண்டைய எகிப்திய அரசமரபுகள் வம்ச காலம்
தொகுவரலாற்றுக்கு முந்தைய எகிபதில் (கிமு 3,200 - கிமு 3100) இந்த நோம்கள் மேல் எகிப்து மற்றும் கீழ் எகிப்தில் தன்னாட்சி கொண்ட சிறு நகர இராச்சியங்களாக இருந்தது. பின்னர் எகிப்தின் துவக்க கால அரச மரபின் முதல் வம்ச மன்னர் நார்மெர் எனப்படும் மெனஸ், கிமு 3100-ஆம் ஆண்டில் மேல் எகிப்து மற்றும் கீழ் எகிப்து பகுதிகளின் நோம்களை ஒன்றிணைத்து ஒரு குடையின் கீழ் ஆட்சி செய்தார்.[7]
ஆட்சிப் பிரிவுகளை மூவாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக பெயர்களாகப் பிரிப்பது மட்டுமல்லாமல், தனிப்பட்ட பெயர்களின் பகுதிகளும் அவற்றின் வரிசைப்படுத்தலும் குறிப்பிடத்தக்க வகையில் நிலையானதாக இருந்தன. ஐந்தாம் வம்சத்தவர்களின் பலெர்மோ கற்பலகையில் சில நோம்களின் பெயர்கள் குறிக்கப்பட்டுள்ளது. பார்வோன்களின் பண்டைய எகிப்து 42 நோம்களாகப் பிரிக்கப்பட்டது.
வடக்கு எகிப்தின் நோம்கள்
தொகுபழைய எகிப்து இராச்சியக் காலத்தில் வடக்கு எகிப்தில் இருந்த மெம்பிசு நகரம் தலைநகராக இருந்தது. வடக்கு எகிப்தின் நைல் வடிநிலப் பகுதிகளில் 20 நோம்கள் இருந்தன. வடக்கு எகிப்தின் மெம்பிசு, சக்காரா, கீசா, அலெக்சாந்திரியா போன்ற நகரங்களை மையமாகக் கொண்டு நோம்கள் இருந்தது.
- வெள்ளைச் சுவர்கள் நோம்
- பயணிகள் நிலம்
- கால்நடைகள் நிலம்
- தெற்கத்திய காப்பு நிலம்
- வடக்கத்திய காப்பு நிலம்
- மலை எருது நிலம்
- மேற்கத்திய குத்தீட்டி நிலம்
- கிழக்கத்திய குத்தீட்டி நிலம்
- ஆண்ட்ஜெட்டி கடவுள் நிலம்
- கருப்பு எருது நிலம்
- ஹெசெப் எருது நிலம்
- பசுவும் கன்றும் நிலம்
- செழிக்கும் செங்கோல் நிலம்
- தூரக்கிழக்கு நிலம்
- திபிஸ் - தெஹட் நிலம
- மீன் நிலம்
- சிம்மாசன நிலம்
- தெற்கின் இளவரசன் நிலம்
- வடக்கின் இளவரசன் நிலம்
- பருந்து நிலம்
தெற்கு எகிப்தின் நோம்கள்
தொகுதெற்கு எகிப்து 22 நோம்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. நூபியாவின் வடக்கு எல்லைக்கருகே தெற்கு எகிப்தில் உள்ள நைல் ஆற்றின் முதல் புரை அருகே உள்ள எலிபென்டைன் தீவுவை மையாகக் (அஸ்வான் அருகே) கொண்டு முதல் நோம் உள்ளது. அங்கிருந்து, நைல் பள்ளத்தாக்கின் குறுகிய வளமான நிலப்பரப்பில் ஒரு ஒழுங்கான முறையில் நோம்கள் அமைந்துள்ளது. தீபை நகரம் தற்கால அல்-உக்சுர்) நான்காவது நோமாகவும், அமர்னா நகரம் 14-வது நோமாகவும், மைதும் நகரம் 21-வது நோமாகவும் உள்ளது.
- விற்கள் நிலம்
- ஓரசின் சிம்மாசன நிலம்
- கோவில் நிலம்
- செங்கோல் நிலம்
- இரு பருந்துகள் நிலம்
- முதலை நிலம்
- சிஸ்ட்ரம் (இசைக் கருவி) நிலம்
- பெருநிலம்
- மின்-கடவுள் நிலம்
- நாக நிலம்
- சா-செட் (விலங்கு) நிலம்
- வைப்பர் மலை நிலம்
- மேல் சிக்காமோர் மற்றும் வைப்பர் நிலம்
- கீழ் சிக்காமோர் மற்றும் வைப்பர் நிலம்
- முயல்கள் நிலம்
- மான்களின் நிலம்
- அனுபிஸ் (கடவுள்) நிலம்
- சேத் கடவுள் நிலம்
- இரட்டை செங்கோல் நிலம்
- தெற்கத்திய சிக்காமோர் நிலம்
- வடக்கத்திய சிக்காமோர் நிலம்
- கூரான கத்தி நிலம்
கிரேக்கத் தாலமி பேரரசு காலத்திய எகிப்து
தொகுபண்டைய எகிப்தை ஆண்ட கிரேக்க தாலமி வம்ச காலத்தில் (கிமு 305 – கிமு 30) கூடுதலாக சில நோம்கள் சேர்க்கப்பட்டதுடன், சில நோம்களின் பெயர்களை மாற்றப்பட்டது.[8] எடுத்துக்காட்டாக முதலை நோமின் அர்சினோ நோம் எனப்பெயர் மாற்றம் செய்யப்பட்டது. அர்தியன் நோம் புதிதாக சேர்க்கப்பட்டது.
ரோமானிய எகிப்து
தொகுகிரேக்கத் தாலமி வம்ச காலத்தில் இருந்த நோம்களின் எண்ணிக்கை மற்றும் பெயர்கள் மாற்றம் செய்யப்படாமல், ரோமானியர் ஆண்ட எகிப்திலும் தொடர்ந்தது. இருப்பினும் ஒவ்வொரு நோம் ஆட்சியாளர்கள் தங்களது சொந்த நாணயங்கள் வெளியிட அனுமதிக்கப்பட்டனர். கிபி 307/8 காலத்தில் நோம் ஆட்சியாளர்களின் நாணயங்களுக்கு பதிலாக ரோமானியர்கள் வெளியிட்ட பகஸ் நாணயம் புழக்கத்தில் இருந்தது.
நோம் ஆட்சியாளர்கள்
தொகுபண்டைய எகிப்திய வரலாற்றின் பெரும்பகுதியில், நோம்கள் ஒவ்வொன்றும் ஒரு ஆளுநரின் தலைமையில் இருந்தது. சில நோம்களின் ஆளுநர்கள் பரம்பரையாக ஆண்டனர். பிற நோம்களின் ஆளுநர்கள் பார்வோன்களால் நியமிக்கப்பட்டனர். பொதுவாக, தேசிய அரசாங்கம் வலுவாக இருந்தபோது, அரசரால் நியமிக்கப்பட்ட ஆளுநர்கள் நோம்களை நிர்வகித்தனர். பண்டைய எகிப்திய நடுவண் அரசு வீழ்ச்சிடைந்த போதும் அல்லது வெளிநாட்டு படையெடுப்புகள் அல்லது உள்நாட்டுப் போர்களின் போது, நோம் பகுதிகளை அதன் ஆளுநர்கள் பரம்பரையாக ஆண்டனர்.[4] இந்த வெவ்வேறு பரம்பரை நோம் ஆளுநர்களுக்கு இடையேயான முரண்பாடுகள் பொதுவானவை. குறிப்பாக முதல் இடைநிலைக் காலத்தின் முடிவின் போது, ( 7வது வம்சம் முதல் }11-வது வம்ச வரை) மத்திய அதிகாரத்தில் ஒரு முறிவு ஏற்பட்டது. நோம் ஆட்சியாளர்கள் மீண்டும் முழு நாட்டையும்பார்வோன் தலைமையில் கட்டுப்படுத்தும் அளவுக்கு வலிமை பெற்றனர்.
எண் | நோமின் சின்னம் | நோம் பெயர் | தலைநகரம் | தற்காலப் பெயர் | மொழிபெயர்ப்பு | கடவுள் | ||
---|---|---|---|---|---|---|---|---|
அறியப்பட்டது. | மாறுபாடுகள் | |||||||
1 | Inebu-hedj | 𓈠 Inebu-hedj | Ineb-Ḥedjet [ 𓏠𓈖𓄤𓆑𓂋𓉴𓊖 மெம்பிசு | Mit Rahina | வெள்ளைச் சுவர்கள் | தாவ் | ||
2 | Khepesh | 𓈡 (Khensu) | 𓐍𓋉𓅓𓊖 Khem [Sekhem/ Iry] (Letopolis) | அவ்சிம் | பசுவின் தொடை | ஓரசு | ||
3 | Imentet/ Amentet | 𓈢 Iment (Ament) | I-am/ Imu (Apis) | Kom El Hisn | மேற்கத்திய காப்பு நிலம் | ஆத்தோர் | ||
4 | Nit Resu | 𓈣 (Sapi-Res) | Ptkheka | Tanta | தெற்கத்திய காப்பு நிலம் | சோபெக், இசிசு, அமூன் | ||
5 | Nit Meḥtet, Nit Meḥetet | 𓈤/𓈥 (Sap-Meh) | 𓊃𓅭𓄿𓅱𓊖 சைஸ் | Sa El Hagar | வடக்கத்திய காப்பு நிலம் | Neith | ||
6 | Khasu'u/ Khasu'wu | 𓈦 (Khaset) | 𓆼𓋴𓅱𓅱𓏏𓊖 Khasu (Xois) | சகா | மலை எருது நிலம் | அமூன்-இரா | ||
7 | Ḥui-ges Imenti/ Ḥui-ges Amenti | 𓈧 (A-ment) | 𓂧𓏇𓇌𓊖𓏌𓅃𓏤 (Hermopolis Parva, Metelis) | தமான்ஹர் | மேற்கத்திய குத்தீட்டி நிலம் | ஹு | ||
8 | Ḥui-ges Iabti/ Ḥui-ges Aabti | 𓈨 Nefer-Iabti (A-bt) | Thek/ Tjeku / Iset-Tem [= 𓉐𓏤𓏏𓍃𓅓𓏏𓊖 பிதோம் | Tell al-Maskhuta | கிழக்கத்திய குத்தீட்டி நிலம் | ஆத்தும் | ||
9 | ‘Andjeti/ ‘Anedjti | 𓈩 (Ati) | 𓉐𓏤𓊨𓁹𓎟𓊽𓂧𓅱𓊖 Djed/ Djedu [Iti] (Busiris) | அபு சிர் பாரா | ஆண்ட்ஜெட்டி கடவுள் நிலம் | ஒசிரிசு | ||
10 | Kem-Ur/ Kem-Wer | 𓈪 Ka-Ka'm (Ka-khem) | 𓉗𓏏𓉐𓇾𓁷𓄣𓊖 Hut-hery-ib (Athribis) | பன்கா | கருப்பு எருது நிலம் | ஓரசு | ||
11 | Ḥesbu/ Ḥesebu | 𓈫 (Ka-heseb) | Taremu/ Ikhenu (Leontopolis) | உரியதம் தொல்லியல் மேடு | ஹெசெப் எருது நிலம் | இசிசு | ||
12 | Tjeb-Netjer | 𓈬 (Theb-ka) | 𓊹𓍿𓃀𓊖 Tjebnutjer (Sebennytos) | சமனூத் | பசுவும் கன்றும் நிலம் | அன்ஹுர் | ||
13 | Ḥeka-Redj | 𓈭 (Heq-At) | (ஹெல்லியோபோலிஸ் | செழிமைக்கான செங்கோல் நிலம் | இரா | |||
14 | Khenti-Iabti/ Khenti-Aabti | 𓈮 (Khent-abt) | Tjaru/ Dj‘anet (Sile, Tanis) | Tell Abu Sefa | தூரக்கிழக்கு நிலம் | ஓரசு | ||
15 | Djeḥuti | 𓈯 (Tehut) | Ba'h / Weprehwy (Hermopolis Parva) | Baqliya | திபிஸ் - தெஹட் நிலம | தோத் | ||
16 | Ḥat Meḥit | 𓈰 (Kha) | Djedet/ Ā'atjaba (Mendes) | Tell El Rubˁ | மீன் நிலம் | Banebdjedet,or Hatmehyt | ||
17 | Beḥdet/ Beḥedet | 𓈱/𓈲 Sma-Beḥut (Sema-Beḥut) | Semabehdet (Diospolis Inferior) | Tel El Balamun | சிம்மாசன நிலம் | அமூன்-இரா | ||
18 | Imty Khenti/ Amty Khenti | 𓈳 Im-Khent (Am-Khent) | Per-Bastet (Bubastis) | Tell Bastah (near Zagazig) | தெற்கின் இளவரசன் நிலம் | Bastet | ||
19 | Imty Peḥu/ Amty Peḥu | 𓈴 Im-Peḥ (Am-Peḥu) | Dja'net (Leontopolis Tanis) | Tell Nebesha or San El Hagar | வடக்கின் இளவரசன் நிலம் | வாதுயீத்து | ||
20 | Sepdju/ Sepedju | 𓈵 Sep-d (Sopdu) | Per-Sopdu | Saft El Hinna | பருந்து நிலம் | சோபெக் |
எண் | நோமின் சின்னம் | நோம் பெயர் | பண்டையத் தலைநகரம் | தற்காலத் தலைநகரம் | மொழிபெயர்ப்பு | கடவுள் | ||
---|---|---|---|---|---|---|---|---|
அறியப்பட்டது. | மாறுபாடுகள் | |||||||
1 | Ta-Seti | 𓈶 𓈶(Ta-Seti) | 𓍋𓃀𓃰𓅱𓎶𓈊 (எலிபென்டைன் தீவு) | Sunnu/ Irp-Ḥesp (அஸ்வான்) | வில்லின் நிலம் | Khnemu | ||
2 | Wetjes-Ḥer | 𓈷 (Wetjes-Hor) | 𓌥𓃀𓊖 Djeba (Apollonopolis Magna) | Ineb/ Iset-Unep/ Iset-en-Rā/ Iset-Neterui/ Iset-Ḥeq/ Iset-Khnem-Iten/ Iset-Sekhen-en-Ḥeru-Iakhuti/ Iset-Shu/ Isebt/ Ā'ay-t-en-Beḥud/ Ā'a-t-enty-Ā'ap (Edfu) | ஓரசின் சிம்மாசன நிலம் | Horus-Behdety | ||
3 | Nekhen | 𓈸 (Nekhen) | Nekhen (Hierakonpolis) | El Kab | கோவில் நிலம் | நெக்கேபெத் | ||
4 | Waset/ Uaset | 𓈹 Uas (Uaset/ Waset) | Niwt-rst / Waset [Ir-t Rā/ Iset-Sekhenu-en-Ākhemu/ Ānkh] (தீபை) | கர்னக் | செங்கோல் நிலம் | அமூன்-இரா | ||
5 | Netjerui | 𓈺 (Herui) | 𓎤𓃀𓅂𓊖 Gebtu/ Iter-Shemā (Coptos) | Qift | இரு பருந்துகள் நிலம் | Min | ||
6 | Meseḥ/ Mes-ḥ | 𓈻 (Iqer) | In/ In-en-P'teḥ/ In-en-Nut/ | முதலை நிலம் | ஆத்தோர் | |||
7 | Bat | 𓈼 (Seshesh) | Seshesh/ Pa-Khen-Iment/ Uas-Meḥ (Diospolis Parva) | ஹு | சிஸ்ட்ரம் (இசைக் கருவி) நிலம் | ஆத்தோர் | ||
8 | Ta-Wer/ Ta-Ur | 𓈽 Ta-wer | Thinis | பெருநிலம் | Anhur | |||
9 | Menu/ Minu | 𓈾 (Min) | Ip/ Ipi/ Ipu/ Apu/ [later: Khen-Min, perhaps another name for "Khemenu"]/ Ārty-Ḥeru (Panopolis) | Akhmim | Min | Min | ||
10 | Wadjyt/ Uadjyt | 𓈿/𓉀 Uadj (Wadjet) | Djew-qa / Tjebu (Antaeopolis) | Qaw El Kebir | நாகப்பாம்பு நிலம் | ஆத்தோர் | ||
11 | Sha | 𓉁/𓉂 (Set) | Shashotep (Hypselis) | Shutb | சேத் கடவுளுடன் | Khnemu | ||
12 | Dju-fet | 𓉃 (Tu-ph) | Pr nmty (Hieracon) | al Atawla | வைப்பர் மலை நிலம் | ஓரசு | ||
13 | Nedjfet Khentet/ Nedjefet Khentet | 𓉄 (Atef-Khent) | Zawty (z3wj-tj, Lycopolis) | Asyut | மேல் சைக்கோமோர் மற்றும் சுருட்டை வீரியன் நிலம் | அபுவத் | ||
14 | Nedjfet Peḥtet/ Nedjefet Peḥtet | 𓉅 (Atef-Peḥu) | Qesy (Cusae) | El Qusiya | கீழ் சைக்கோமோர் மற்றும் சுருட்டை வீரியன் நிலம் | ஆத்தோர் | ||
15 | Wenet/ Uenet/ Unit | 𓉆 (Wenet) | Khemenu (Hermopolis Magna) | El Ashmounein | முயல்கள் நிலம் [9] | தோத் | ||
16 | Ma-Ḥedj | 𓉇 (Ma-hedj) | Herwer? | Hur? | மான்களின் நிலம் | ஓரசு | ||
17 | Input | 𓉈 Inpu (Anpu) | Saka (Cynopolis) | El Qais | அனுபிஸ் கடவுள் நிலம் | அனுபிஸ் | ||
18 | Nemti | 𓉉/𓉊 (Sep) | Teudjoi / Hutnesut (Alabastronopolis) | El Hiba | சேத் கடவுள் நிலம் | அனுபிஸ் | ||
19 | Wabwi/ Uabwi/ Uabui | 𓉋 (Uab) | Per-Medjed/ Per-Mādjet/ Uabu-t (Oxyrhynchus) | El Bahnasa | இரு செங்கோல்கள் | சேத் | ||
20 | N‘art Khentet/ N‘aret Khentet | 𓉌 (Atef-Khent) | Henen-nesut (Herakleopolis Magna) | Ihnasiya | தெற்கத்திய சிக்காமோர் நிலம் | Heryshaf | ||
21 | N‘art Peḥtet/ N‘aret Peḥtet | 𓉍 (Atef-Peḥu) | Shenakhen / Semenuhor/ Ium'ā (முதலை, அர்சினோ) | பையூம் | வடக்கத்திய சிக்காமோர் நிலம் | Khnemu | ||
22 | Mednit/ Medenit | 𓉎/𓉏 (Maten) | 𓁶𓏤𓃒𓏪𓊖 Tepihu (Aphroditopolis) | அத்பி | கூரான கத்தி நிலம் | ஆத்தோர் |
மேற்கோள்கள்
தொகு- ↑ Merriam-Webster's Collegiate Dictionary, Eleventh Edition. Merriam-Webster, 2007. p. 841
- ↑ "Nome | ancient Egyptian government". Encyclopedia Britannica (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-09-14.
- ↑ Bunson, Margaret (2014). Encyclopedia of Ancient Egypt. Infobase Publishing. p. 280. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4381-0997-8.
- ↑ 4.0 4.1 "Nomes". Ancient Egypt Online (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-09-14.
- ↑ "Provinces of Egypt". www.ucl.ac.uk. பார்க்கப்பட்ட நாள் 2017-05-21.
- ↑ "Ptolemaic Dynasty". World History Encyclopedia. பார்க்கப்பட்ட நாள் 2020-09-14.
- ↑ Herodotus, Euterpe, 2.4.1 and 2.99.1ff.
- ↑ Bagnall, Roger S. (1996). Egypt in Late Antiquity (Fourth printing ed.). Princeton: Princeton University Press. p. 333. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0691069867. பார்க்கப்பட்ட நாள் 2 February 2015.
- ↑ Wolfram Grajetzki, The Middle Kingdom of ancient Egypt: history, archaeology and society. London, Duckworth Egyptology, 2006, pp. 109-111
ஊசாத்துணை
தொகு- Bagnall, Roger S. (1996), Egypt in Late Antiquity, Princeton: Princeton University Press.
- Bowman, Alan K. (1990), Egypt after the Pharaohs, Oxford: Oxford University Press.
வெளி இணைப்புகள்
தொகு