வத்செத்

(வாதுயீத்து இலிருந்து வழிமாற்றப்பட்டது)

வத்செத் என்பவர் பண்டைய எகிப்திய சமயத்தின் ஒரு பெண் கடவுள் ஆவார்.[1]இவர் கீழ் எகிப்தின் கடவுள் மற்றும் பாதுகாவலராக கூறப்படுகிறார். சூரிய தகடான யுரயசுவில் இவரது உருவம் பொறிக்கப்பட்ட சின்னத்தை கீழ் எகிப்திய பார்வோன்கள் அணிந்து வந்தனர். நிலத்தின் கடவுளாக கூறப்படும் வத்செட் எகிப்திய இராசநாகத்தை தலையாக கொண்டுள்ளார். இவர் இராவின் கண் மற்றும் ஓரசு கடவுளின் கண் ஆகியவற்றுடன் ஒப்பிடப்படுகிறார். வத்செத் கடவுளும் மேல் எகிப்தின் கடவுளான நெக்பெத்தும் இரு பெண்கள் என அழைக்கப்படுகின்றனர்.

அல்-உக்சுர் கோயில் சுவரில் வத்செட் கடவுளின் உருவம்
கழுத்து அணிகலன் பதக்கத்தில் அரியணையில் அமர்ந்திருக்கும் போர்க் கடவுள் செக்மெத் சிலைக்கு (நடுவில்) பெண் கடவுளர்களான பாம்பு உருவத்துடன் கூடிய வத்செத் மற்றும் கழுகு உருவத்துடன் கூடிய நெக்பெத் பூஜை சடங்குகள் நடத்தும் காட்சி, ஆண்டு கிமு 870

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Wadjet, EGYPTIAN GODDESS
"https://ta.wikipedia.org/w/index.php?title=வத்செத்&oldid=3866908" இலிருந்து மீள்விக்கப்பட்டது