பண்டைய எகிப்தின் சமயம்

பண்டைய எகிப்திய சமயம் (Ancient Egyptian religion) பண்டைய எகிப்திய சமூகம் பல கடவுள் வணக்க முறை நம்பிக்கைகளும், சடங்குகளும் கொண்டது. எகிப்திய சமயத்தில் இறப்பிறகு பிந்தைய வாழ்க்கை உண்டு என நம்பிக்கை வலுவாக இருந்தது. எனவே இறந்த பார்வோன்கள் மற்றும் அரச குடும்பத்தினரின் உடல்கள் மம்மியாக்கப்பட்டு பதப்படுத்தி வைத்தனர். அனைத்து எகிப்தியர்களும் சூரியக் கடவுளான இரா எனும் கடவுளை வழிபட்டனர்.

பார்வோன் நார்மெர் (கிமு 3000) தனது வீரர்களுடன் உள்ளூர் கடவுளைக் குறிக்கும் விலங்குகள் சின்னங்களை ஏந்திச் செல்லுதல்
பார்வோன் அக்கெனதென் (கிமு 1356 - 1340) தன் குடும்பத்துடன் சூரியக் கடவுளான இராவை வணங்கும் சித்திரம்
ஓரசு கடவுளின் கண் சங்கிலி, மாயா ஜால வித்தைக்கான சின்னம்
பிரமிடுகளில் மம்மியை அடக்கம் செய்வதற்கு முந்தையச் சடங்குகள்
பண்டைய எகிப்தின் மூத் பெண் தெய்வத்தின் கையில் சிலுவை போன்ற ஆங்க் சின்னம்

உலகத்தை காத்தருளும் எகிப்திய கடவுள்களான இரா, அமூன், அதின், ஆத்தோர், ஒசைரிஸ், ஓரசு, சேத், இன்பு, சேக்மெட், வத்செட் மூத், கோன்சு, சகுமித்து மற்றும் தாவ் போன்ற கடவுள்களை வழிபட்டனர்.

மற்றும் தேவதைகளிடம், மக்கள் தங்கள் நலத்திற்கும், இயற்கை பேரழிவுகளிலிருந்தும் காப்பாற்றிக் கொள்ளவும், பல்வேறு பிரார்த்தனைகளும் மற்றும் பலி காணிக்கைளும் செலுத்தினர். எகிப்திய ஆட்சியாளர்களான பார்வோன்கள் தங்கள் கடவுள்களுக்கு சமயச் சடங்குகளை நிறைவேற்றும் தலைமைப் பூசாரிகளாகவும் விளங்கினார். இதனால் பார்வோன்கள் இறை சக்தி கொண்டவர்களாக மக்கள் கருதினர். மக்களுக்கும், கடவுளுக்கும் இடையே பார்வோன்கள் இடையாளர்களாகவும் செயல்பட்டனர்.

எகிப்தின் முதன்மைப் பிரபஞ்சக் கடவுளாக மாத் கருதப்பட்டார். எகிப்திய கடவுள்களுக்கு கோயில்கள் நிறுவப்பட்டு, பூசைகள் மேற்கொள்ளப்பட்டு, சடங்குகளின் போது விலங்கு மற்றும் மனிதப் பலிகளும் இடப்பட்டது. தனி மனிதர்கள் தங்கள் நலத்திற்கு கடவுளிடம் நேரடியாக பிரார்த்தனை செய்து ஆபூர்வ சக்திகளை வேண்டுவர். எகிப்திய பார்வோன்களின் ஆட்சி வீழ்ச்சி அடையும் வரை, எகிப்திய சமயமரபுகள் புகழ் பெற்று விளங்கியது.

பண்டைய எகிப்தியர்கள் இறப்பிற்கு பிந்தைய வாழ்க்கை உண்டு என்பதை உறுதியாக நம்பினர். எனவே இறந்தவர்களை அடக்கம் செய்யும் சடங்குகளில், பிணத்தின் இதயம் தவிர்த்த உள்ளுறுப்புகளை நீக்கி, மம்மியாகப் பதப்படுத்தி, பிரமிடு போன்ற கல்லறைக் கோயில்களில், இறப்பிற்கு பிந்தைய வாழ்க்கைக்கு தேவையான பொருட்களுடன் அடக்கம் செய்தனர். எகிப்தின் வரலாற்றுக்கு முந்தைய காலத்தில் தொடங்கிய சமய நம்பிக்கைகளின் வேர்களும், கிளைகளும் மூவாயிரம் ஆண்டுகளுக்கு மேலும் தொடர்ந்தது. காலம் தோறும் கடவுள்களின் முக்கியத்துவத்துவத்திற்கு ஏற்ப சமய நம்பிக்கைகளும் ஏற்ற, இறக்கங்களுடன் இருந்தது.

பல்வேறு காலகட்டங்களில், சில கடவுள்கள் மற்ற கடவுள்களை விட முக்கியத்துவம் பெற்றனர். குறிப்பாக சூரியக் கடவுளான இரா வழிபாடு பண்டைய எகிப்தில் புகழுடன் இருந்தது. பிற்காலத்தில் இரா எனும் சூரிய வழிபாட்டை நீக்கிய, அக்கெனதென் எனும் பார்வோன் அதின் எனும் சூரியக்கதிர் வழிபாட்டை எகிப்தில் பரப்பினார்

நம்பிக்கைகள்

தொகு

பண்டைய எகிப்திய பண்பாட்டில் சமயம் விரிவான நம்பிக்கைகளும் மற்றும் சடங்குகளுடன் கூடியது. எகிப்திய சமயம் மனிதர்களின் உலகத்துக்கும், தெய்வீக உலகத்துக்கும் இடையிலான தொடர்பில் நம்பிக்கை வைத்திருந்தது. தெய்வீக சாம்ராச்சியத்தில் வசிக்கும் தெய்வங்களின் குணாதிசயங்களுடன், எகிப்தியர்கள் தாங்கள் வாழ்ந்த உலகின் பண்புகள் பற்றிய புரிதலுடன் பிரிக்கமுடியாத வகையில் பிணைக்கப்பட்டு வாழ்ந்தனர். [1]

கடவுள்கள்

தொகு
 
சூரியக் கடவுள் இரா (நடுவில்) பாதாள உலகத்தில் பயணிக்கும் சித்திரம்

பண்டைய எகிப்திய தொன்மவியலில் கூறப்படும் இறப்பின் கடவுள் ஒசைரிஸ் ஆவார். இவர் இகவாழ்வு, இறப்பு, மறுவாழ்வு, பாதாளம் ஆகியவற்றின் கடவுள் ஆவார். இவர் பச்சை நிற தோலுடன், பார்வோன்களுக்கு இருக்கும் தாடியும் கொண்டவராகக் கருதப்படுகிறார். ஓசிரிசின் பெற்றோர் கெப் மற்றும் நூட் ஆவர். இவரது சகோதரர்கள் இசிசு, சேத், நெப்தைசு மற்றும் மூத்த ஓரசு ஆவர்.[2]

 
இடமிருந்து வலமாக ஒசைரிஸ், ஓரசு மற்றும் தாவ் கடவுள்களின் சித்திரங்கள்

பண்டைய எகிப்தியர்கள் தங்களுக்குள் தெய்வீக சக்திகளாகவும் இருப்பதாக நம்பினர்[3] எகிப்தியர்கள் இயற்கையின் மற்றும் மனித சமுதாயத்தின் அனைத்து அம்சங்களிலும் பங்கு கொண்டிருந்த பல கடவுள்களை நம்பினர். கடவுளர்களை சமாதானப்படுத்தி, இறை சக்தியை மனித நன்மைக்காக மாற்றுவதற்கான முயற்சிகளாக எகிப்தியர்களின் சமய வழிபாட்டு நடைமுறைகள் இருந்தது.[4]

பல கடவுட் கொள்கை கொண்ட எகிப்திய சமயத்தின் அமைப்பு மிகவும் சிக்கலானது. சில தெய்வங்கள் பலவிதமான வெளிப்பாடுகளில் இருப்பதாக நம்பப்பட்டது, சில தெய்வங்கள் புராணக் கதை மாந்தர்களாக இருந்தனர். மாறாக சூரியன் போன்ற பல இயற்கை சக்திகள் பல தெய்வங்களுடன் தொடர்பு கொணடிருந்தன. பிரபஞ்சத்தில் முக்கிய பாத்திரங்களைக் கொண்ட கடவுளர்கள் முதல் சிறு தெய்வங்கள் அல்லது "மட்டுப்படுத்தப்பட்ட அல்லது உள்ளூர்மயமாக்கப்பட்ட செயல்பாடுகளைக் கொண்ட ஆவிகள்" வரை, மாறுபட்ட தெய்வங்களை பண்டைய எகிப்திய சமயம் கொண்டிருந்தது.[5] பல கடவுளர்கள் எகிப்தின் குறிப்பிட்ட பகுதிகளுடன் தொடர்பு கொண்டிருந்தனர். அங்கு அவர்களின் வழிபாட்டு முறைகள் மிக முக்கியமாக இருந்தது. காலப்போக்கில் பார்வோன்களின் வம்சங்கள் மாறும் போது அப்பழக்கம் மறையத் துவங்கியது.

எடுத்துக்காட்டாக துவக்கத்தில் தீபை நகரத்தின் காவல் தெய்வமாக மொண்டு தெய்வம் இருந்தது. எகிப்தின் மத்தியகால இராச்சியத்தின் ஆட்சியில் தீபை நகரத்தின் காவல் தெய்வமாக அமூன் தெய்வத்தை வழிபட்டனர்.[6]

எகிப்திய தொன்மவியலில், ஒரு தெய்வத்தின் குடும்ப உறுப்பினர்களான தந்தை, தாய் மற்றும் குழந்தையை ஒன்றாக வழிபடும் வழக்கம் இருந்தது. ஒன்பது குடும்ப உறுப்பினர்களைக் கொண்ட என்னீத் தெய்வக் குடும்பக் கடவுள்களை படைப்பு, அரசுரிமை மற்றும் இறப்பிற்கு பிந்தைய வாழ்க்கைக்கான தெய்வங்களாக வழிபட்டனர்.[7] சில நேரங்களில், ஒத்திசைவு கொண்ட தெய்வங்கள் மிகவும் ஒத்த குணாதிசயங்களுடன் இணைந்திருந்தது. பிற நேரங்களில் இது மிகவும் மாறுபட்ட இயல்புகளுடன் கடவுளர்களுடன் இணைந்திருந்தது. மறைக்கும் தன்மை கொண்ட அமூன் தெய்வத்தை சூரியக் கடவுளான இராவுடன் இணைத்துப் பார்க்கப்பட்டது. இதன் விளைவாக உருவான அமுன்-ரா கடவுள், எல்லாவற்றிற்கும் பின்னால் இருக்கும் சக்தியை இயற்கையில் மிகப் பெரிய மற்றும் புலப்படும் சக்தியுடன் ஒன்றிணைக்கப்பட்டது. [8]

பண்டைய எகிப்தில் பல கடவுள் வழிபாடு இருப்பினும், எகிப்திய அரச குடும்பத்தினர் ஓரசு, சூரியக் கடவுளான இரா மற்றும் தாய்க் கடவுளான இசிசை பெரிதும் வழிபட்டனர். [9] புது எகிப்திய இராச்சியத்தின் (கிமு 1550 – 1070) அரச குடும்பத்தினர் அமூன் கடவுளை பெருந்தெய்வமாக வழிபட்டனர். [10]

அண்டவியல்

தொகு
 
காற்றின் கடவுள் சூவை சூழ்ந்த தேவதைகள் கையை உயர்த்தி பிடித்த வானத்தின் கடவுள் நூத், அடியில் பூமியின் கடவுள் ஜெப்

எகிப்திய அண்டவியலில் பிரபஞ்சத்தின் மையத்தில் மாத் (Ma'at) கடவுள் இருப்பதாக கருதப்பட்டது.[11]எனவே படைப்பு மற்றும் காலத்தின் கடவுளான மாத் தெய்வத்திடம், இயற்கைப் பேரழிவிலிருந்து தற்காத்துக் கொள்ள எகிப்தியர்கள் பிரார்த்தனை செய்து கொண்டதுடன், பலி காணிக்கைகளும் இட்டனர்.[12][13]

சூரியக் கடவுளான இராவின் இயக்கத்தால் எகிப்தின் நைல் ஆற்றில் வருடாந்திர வெள்ளங்களும், ஆட்சி மாற்ற நிகழ்வுகளும் ஏற்படுகிறது என எகிப்தியர்கள் கருதினர். [14][15]

பூமி தட்டையானது என்றும் அதன் தேவதையான் ஜெப் மற்றும் வானத்தின் தேவதையான நூத்தை எகிப்தியர்கள் வழிபட்டனர். பூமியையும், வானத்தையும் பிரிக்கும் காற்றுக்கான தேவதையாக சூ இருந்தது. பாதாளத்திற்கும், வானத்திற்கு அப்பாலும் உள்ள பகுதியின் தேவதையாக நூ விளங்கியது. [16][17]

எகிப்தியர்கள் துவாத் எனுமிடத்தை இறப்பிற்கும், மறுபிறவிக்கானது எனக் கருதினர். அன்றாடம் சூரியக் கடவுள் இரா பூமியின் குறுக்கே பயணித்து, இரவில் துவாத் பகுதிக்குச் சென்று மீண்டும் விடியலில் புதுப் பிறவி எடுக்கிறது என எகிப்தியர்கள் நம்பினர்.[18]எகிப்தியர்களின் நம்பிக்கையின் படி, இப்பிரபஞ்சத்தில் கடவுள்கள், இறந்தவர்களின் ஆவிகள் மற்றும் மனிதர்கள் வாழ்வதாக நம்பிக்கைக் கொண்டிருந்தனர்.[19]

 
பழைய எகிப்திய இராச்சியத்தின் பார்வோனை தழுவிய நிலையில் ஓரசு கடவுளின் சிற்பம்

மன்னர்

தொகு

எகிப்தியவியல் அறிஞர்கள் எகிப்திய ஆட்சியாளர்களான பார்வோன்களை மக்கள் கடவுளாக கோயில் கட்டி வழிப்பட்டனர். பார்வோன்களுக்கும், சாதரான குடிமக்களுக்கு இருக்கும் குணங்கள் இருப்பினும், பார்வோன்கள் இறையருள் பெற்றவர்களாகப் போற்றி கோயில் கட்டி மக்கள் வழிபட்டனர்.

மேலும் எகிப்திய பார்வோன்கள் குடிமக்களுக்கும், இறைவனுக்கும் இடையே பாலமாக விளங்கும் ஒரு பூசாரியாகவும் விளங்கினார்.[20] இருப்பினும் புது எகிப்திய இராச்சியத்தின் ஆட்சிக் காலத்தின் முடிவில் பார்வோன்களின் சமய ஆதிக்கம் முடிவுற்றது.[21][22]

சில பார்வோன்கள் குறிப்பிட்ட தேவதைகளுடன் தொடர்புறுத்தி அறியப்பட்டார்கள். பார்வோன்கள் இறப்பின் கடவுளான ஒசைரிஸ்வுடன் நேரடியாக தொடர்புறுத்தப்பட்டனர். மேலும் இரா எனும் கடவுளின் மகனாகவும் கருதப்பட்டனர். புது எகிப்து இராச்சியத்தின் துவக்கத்தில் பார்வோன்கள் அண்டத்தின் அதிபதியான அமூன் கடவுளுடன் தொடர்புறுத்தி வணங்கப்பட்டார்கள்.[23] ஒரு பார்வோன் இறந்த பிறகு அவனை ஒரு தெய்வமாக வழிபடும் வழக்கம் எகிப்தில் இருந்தது. பார்வோன் இறந்தவுடன் அவன் நேரடியாக இரா மற்றும் பிறப்பு மற்றும் இறப்பின் கடவுளான ஓசைரிசுடன் தொடர்புறுத்தப்பட்டு மக்கள் கோயில் கட்டி வழிபட்டனர். [24] இறந்த எகிப்திய பார்வோன்களின் உடல்களை மம்மியாக்கி கல்லறையில் அடக்கம் செய்து கடவுள்களாக வழிபட்டனர்.

இறப்பிற்கு பிந்திய வாழ்வு

தொகு

பண்டைய எகிப்தியர்கள் இறப்பிற்கு பிந்தைய வாழ்க்கையில் பெரும் நம்பிக்கைக் கொண்டிருந்தனர். எகிப்தியர்கள் மனிதனில் இரண்டு ஆன்ம தத்துவங்கள் இருப்பதை நம்பினர். இறப்பிற்கு முந்தைய ஆன்மாவுடன், இறப்பிற்கு பிந்தைய ஆன்மாவுடன் ஒன்றிணைந்து உயிர் பெறும் என நம்பினர். [25] புது எகிப்து இராச்சிய ஆட்சியில் இறப்பிற்குப் பிந்தைய வாழ்க்கைத் தத்துவம் பெரிதும் வளர்ச்சியடைந்தது. ஒரு மனிதன் இறந்த பின்னர், கடவுளர் அவனது இதயத்தை எடை போட்டு பூமியில் மறுவாழ்வு அல்லது பாதாள வாழ்க்கை அல்லது நரகம் அளிப்பர்.[26]

வழிபாடுகள்

தொகு
 
இசிஸ் கடவுளின் கோயில்

கோயில்கள்

தொகு

அரசு சமயச் சடங்குகள் மற்றும் திருவிழாக்கள்

தொகு

வழக்கமான தெய்வ வழிபாடுகளுடன், பார்வோன்கள் அரசுரிமை ஏற்கும் நாள் மற்றும் சேத் திருவிழா வெகு சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. [27]எகிப்திய மன்னர்களின் வார்சிகளின் வளர்ச்சிக்காக ஒபெத் திருவிழா கொண்டாடப்பட்டது.

விலங்கு வழிபாடுகள்

தொகு
 
அபிஸ் எருது
 
எகிப்தியர்கள் வழிபட்ட விலங்குகளின் சித்திரங்கள்

மெம்பிசு நகரத்தில் அபிஸ் எனும் எருது வழிபாடு நடைபெற்றது.[28] எகிப்தின் இருபத்தி ஆறாம் வம்ச ஆட்சியில், குறிப்பிட்ட தேவதைக்குரிய விலங்கை மம்மியாக்கி கோயில்களில் வைத்து வழிபட்டனர்.[29][30]

குறி கேட்டல்

தொகு

புது எகிப்திய இராச்சியத்தின் ஆட்சியின் போதும், அதற்குப் பின்னரும் எகிப்தியர்கள் தங்கள் கடவுளிடம், சட்டச் சிக்கலைத் தீர்ப்பதற்கும் அல்லது இராச்சியத்தின் கொள்கை முடிவுகளை எடுப்பதற்கும் குறி கேட்கும் வழக்கம் கொண்டிருந்தனர்.[31]

இறப்புச் சடங்குகள்

தொகு

பழைய எகிப்து இராச்சியத்தில் அரச குடும்பத்தினர், உயர் குடியினர், குறிப்பாக பார்வோன்களின் இறப்புச் சடங்குகள் எகிப்தியர்களிடம் பிரபலமாக விளங்கியது. இறப்பிற்கு பிந்தைய வாழ்க்கைக்காக, இறந்த மனித உடலை மம்மியாக பதப்படுத்தி, மறுவாழ்விற்கு தேவையான பொருட்களுடன் கல்லறைகளில் அடக்கம் செய்வது எகிப்தியர்களிடம் சிறப்பாக விளங்கியது. [32]

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Assmann 2001, ப. 1–5, 80.
  2. Osiris
  3. Assmann 2001, ப. 63–64, 82.
  4. Allen 2000, ப. 43–44.
  5. Wilkinson 2003, ப. 30, 32, 89.
  6. Teeter 2001, ப. 340–44.
  7. Wilkinson 2003, ப. 74–79.
  8. Wilkinson 2003, ப. 33–35.
  9. Wilkinson 2003, ப. 36, 67.
  10. Assmann 2001, ப. 189–92, 241–42.
  11. Allen 2000, ப. 115–17.
  12. Assmann 2001, ப. 4–5.
  13. Shafer 1997, ப. 2–4.
  14. Assmann 2001, ப. 68–79.
  15. Allen 2000, ப. 104, 127.
  16. Lesko 1991, ப. 117–21.
  17. Dunand & Zivie-Coche 2005, ப. 45–46.
  18. Allen, James P., "The Cosmology of the Pyramid Texts", in Simpson 1989, ப. 20–26.
  19. Allen 2000, ப. 31.
  20. Wilkinson 2003, ப. 54–56.
  21. Wilkinson 2003, ப. 55.
  22. Van Dijk, Jacobus, "The Amarna Period and the Later New Kingdom", in Shaw 2000, ப. 311–12.
  23. David 2002, ப. 69, 95, 184.
  24. Wilkinson 2003, ப. 60–63.
  25. Allen 2000, ப. 94–95.
  26. Fleming & Lothian 1997, ப. 104.
  27. Thompson, Stephen E., "Cults: Overview", in Redford 2001, vol. I, 326–332
  28. Dunand & Zivie-Coche 2005, ப. 21, 83.
  29. Quirke & Spencer 1992, ப. 78, 92–94.
  30. Owen, James (2004). "Egyptian Animals Were Mummified Same Way as Humans". National Geographic News. https://news.nationalgeographic.com/news/2004/09/0915_040915_petmummies.html. பார்த்த நாள்: 2010-08-06 
  31. Kruchten, Jean-Marie, "Oracles", in Redford 2001, ப. 609–611
  32. David 2002, ப. 300–1.

ஆதார நூற்பட்டியல்

தொகு

மேலும் படிக்க

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பண்டைய_எகிப்தின்_சமயம்&oldid=4060833" இலிருந்து மீள்விக்கப்பட்டது