மூத்து
மூத் அல்லது மௌத் (Mut or Maut and Mout), பண்டைய எகிப்தியக் கடவுள்களில் தாய்க் கடவுள் ஆவார். இவர் அமூன் எனும் தலைமைக் கடவுளின் மனைவி ஆவார். எகிப்திய மொழியில் மூத் என்பதற்கு தாய் எனப்பொருளாகும்.[1]பண்டைய எகிப்தியப் பண்பாட்டு வரலாற்றில் மூத் கடவுளின் தெய்வீகப் பங்களிப்புகள் பல மாற்றங்களுடன் கூடியது.
மூத் எகிப்திய தாய்க் கடவுள் | |
---|---|
கையில் ஆங்க் திறவுகோல், தலையில் இரட்டை மணிமகுடம் மற்றும் கழுகு கொண்ட மூத் கடவுளின் உருவம் | |
துணை | அமூன் |
பெற்றோர்கள் | இரா |
சகோதரன்/சகோதரி | சேக்மெத், ஆத்தோர், மாத் மற்றும் பஸ்தேத் |
குழந்தைகள் | கோன்சு |
எகிப்திய தொன்மவியலில் நீரிலிருந்து தோன்றிய அனைத்து உயிர்களுக்கும் மூத் கடவுளே ஆதாரம் எனக்கருதப்படுகிறது. இவர் சூரியக் கடவுளும், படைப்புக் கடவுளான அமூனின் மனைவியாகக் கருதப்படுகிறார். மேலும் மூத் தெய்வம் உலகத்தின் தாயாகவும் கருதப்படுகிறார். இத்தாய் கடவுளின் மகனாக கோன்சு உள்ளார். பண்டைய எகிப்தின் தலைநகரான தீபை நகரத்தில் உள்ள கர்னாக் கோயிலில் அமூன், மூத் மற்றும் கோன்சு கடவுள்களை மக்கள் வழிபட்டனர்.
கையில் ஆங்க் திறவுகோலுடன் கூடிய மூத் கடவுளின் தலையில் இரட்டை மணிமகுடம், கழுகை தாங்கிய உலகின் சக்தியாக சித்தரிக்கப்படுகிறார். மூத் கடவுளின் வழிபாடு உச்சநிலையில் இருக்கையில், எகிப்தின் பார்வோன்கள், மூத் கடவுளின் வழிபாட்டை ஆதரித்தனர். ஒபெத் திருவிழா போன்ற முக்கிய விழாக்களின் போது மூத் தாய்க் கடவுளின் வழிபாடு முக்கியத்துவம் வாய்ந்தது. மூத் தெய்வத்திற்கான கோயில், தீபை அருகே உள்ள கர்னாக்கில் உள்ளது.
பழைய எகிப்திய இராச்சியத்தில் (கிமு 2686 – கிமு 2181) அமூன் கடவுளின் துணையாக மூத் தெய்வம் வழிபடபட்டது. புது எகிப்திய இராச்சியத்தை (கிமு 1550 – 1077) ஆண்ட 19-ஆம் வம்ச பார்வோன் இரண்டாம் ராமேசஸ் ஆட்சியில் கோயில்களில் அமூன், மூத் தெய்வங்களுடன் இரண்டாம் ராமேசஸ் சிற்பங்கள் நிறுவப்பட்டது. பிந்தைய கால எகிப்திய இராச்சியத்தில் (கிமு 664 - கிமு 332) மூத் தெய்வத்தின் முக்கியத்துவம் குறைக்கப்பட்டு, மேல் எகிப்து பகுதியில் உள்ள தீபை நகரத்தின் காவல் தெய்வம் என்ற நிலைக்குச் சென்றது.[2]
இதனையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- Pinkowski, Jennifer (2006). "Egypt's Ageless Goddess". Archaeology 59 (5). http://archive.archaeology.org/0609/abstracts/mut.html. பார்த்த நாள்: 29 November 2015.
வெளி இணைப்புகள்
தொகு- பொதுவகத்தில் மூத்து தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.