முதன்மை பட்டியைத் திறக்கவும்

கர்னக்

பண்டைய எகிப்திய கோயில் தொகுதி
(கர்னாக் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

கர்னக் என்பது, எகிப்து நாட்டில் உள்ள ஒரு சிறிய ஊர் ஆகும். நைல் நதியின் கரையில் அமைந்துள்ள இவ்வூர் லக்சோரில் இருந்து 2.5 கி.மீ தொலைவில் உள்ளது. மிகப் பழமையான எகிப்தியக் கோயில்கள் அமைந்துள்ளதே இவ்வூர் முக்கியத்துவம் பெறக் காரணமாகும். கர்னக் கோயில் இவ்வூரின் கட்டிடங்கள் அமைந்துள்ள பகுதியிலும் இரண்டு மடங்கு அளவுள்ளதாகும். கர்னாக் ஒரு ஊர் என்பதிலும், ஒரு கோயில் தொகுதியாகவே பெரிதும் அறியப்படுகிறது.

கர்னக்
Karnak-Hypostyle3.jpg
Pillars of the Great Hypostyle Hall from the Precinct of Amun-Re
Lua error in Module:Location_map at line 502: Unable to find the specified location map definition: "Module:Location map/data/Egypt" does not exist.
இருப்பிடம்El-Karnak, Luxor Governorate, எகிப்து
பகுதிUpper Egypt
ஆயத்தொலைகள்25°43′7″N 32°39′31″E / 25.71861°N 32.65861°E / 25.71861; 32.65861ஆள்கூற்று: 25°43′7″N 32°39′31″E / 25.71861°N 32.65861°E / 25.71861; 32.65861
வகைSanctuary
பகுதிThebes
வரலாறு
கட்டுநர்Senusret I
கட்டப்பட்டது3200 BC
காலம்Middle Kingdom to Ptolemaic Kingdom
Official name: Ancient Thebes with its Necropolis
TypeCultural
Criteriai, iii, vi
Designated1979 (3rd session)
Reference No.87
RegionArab States
கோயிலின் உட்புறம்
ஆமொன் வளாகத்தின் நுழைவாயிலின் மேற்குப் பக்கத்திலிருந்தான தோற்றம்.

கர்னக் கோயில் பகுதி ஒரு பாரிய திறந்தவெளி அருங்காட்சியகம் என்பதுடன், உலகின் மிகப் பெரிய பண்டைய சமயம் சார்ந்த இடமாகவும் திகழ்கின்றது. எகிப்தில் கெய்ரோவுக்கு அண்மையில் உள்ள கீசா பிரமிட்டுகளுக்கு அடுத்தபடியாக, கூடுதலான சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்ற இடமும் இதுவேயாகும்.

இது நான்கு பகுதிகளைக் கொண்டது. இவற்றுள் ஒன்று மட்டுமே சுற்றுலாப் பயணிகளும், பொதுமக்களும் பார்ப்பதற்காக விடப்பட்டுள்ளது. இதுவே முக்கியமான கோயில் பகுதியும், பெரியதும் ஆகும். பெரும்பாலானவர்களுக்கு, கர்னக் என்பது இந்த அமொன் ரே வளாகம் மட்டுமே. ஏனைய மூன்று பகுதிகளுக்கு உள்ளும் பொதுமக்கள் உட்செல்ல முடியாது.

மேற்குறிப்பிட்ட நான்கு முக்கிய பகுதிகளையும் சூழவுள்ள மதிலுக்கு வெளியேயும் சில சிறிய கோயில்களும், ஸ்ஃபிங்ஸ் எனப்படும் உருவங்களின் வரிசைகளைக் கொண்ட பாதைகளும் காணப்படுகின்றன. இப் பாதைகள், மூத் வளாகம் (Precinct of Mut), அமொன் ரே வளாகம், லக்சோர் கோயில் என்பவற்றை இணைக்கின்றன.

கர்னக் பகுதியிலுள்ள கோயில்களின் மிக நீண்ட கால வளர்ச்சியும், பயன்பாடும் அதனை எகிப்தில் உள்ள ஏனைய தொல்லியல் மற்றும் கோயில் களங்களிலிருந்து வேறுபடுத்துகின்றது. இப் பகுதியின் கட்டுமானப் பணிகள் கி.மு 16 ஆம் நூற்றாண்டில் தொடங்கியதாகக் கணிக்கப்பட்டுள்ளதுடன், 30 ஃபாரோக்கள் (pharaohs) இங்கே கட்டிடங்களைக் கட்டியுள்ளார்கள். இதனால் இக் கட்டிடத் தொகுதி, வேறு எங்கும் காணப்படாத வகையில், பாரிய அளவு கொண்டதாகவும், சிக்கலானதாகவும், பல்வகைமை கொண்டதாகவும் அமைய உதவியது.

இதனையும் காண்கதொகு

மேற்கோள்கள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கர்னக்&oldid=2455715" இருந்து மீள்விக்கப்பட்டது