ஆரக்கிள்
ஆரக்களிள் என்பது பழங்கால கிரேக்கத்தில் இருந்த ஒரு நபர் அல்லது முகமை ஆகும். இவர்கள் முக்காலத்தையும் உணர்ந்தவர்கள் என கருதப்பட்டனர். அவர்களின் முன்னறிவு சக்தியினால் தங்கள் எதிர்காலம் குறித்து பலர் ஆலோசனையைக் கேட்டதாகக் கருதப்படுகிறது.
விளக்கம்
தொகுஆரக்கிள் என்பது இலத்தீன் மொழி வினைச்சொலான ōrāre என்பதில் இருந்து வந்தது. இதன் பொருள் பேசுதல் என்பதாகும். இது பூசாரிகள் கூறும் ஆருடத்தைக் குறிப்பிடுவது. காலப்போக்கில், ஆரக்கிள் என்ற சொல்லானது ஆரக்கிள் இருக்கும் இடத்தையும் குறிக்கக்கூடியதாகவும் ஆனது. ஆரக்கிள் உரைகளை கிரேக்க மொழியில் குர்செஷ் (χρησμοί) என்று அழைக்கப்பட்டது.
ஆரக்கிள்களால் கடவுளிடம் நேரடியாக பேசியதாக கருதப்பட்டனர். நாடி வந்தவர்களுக்கான கேள்விகளை கடவுளிடம் எழுப்பி, அவரிடமிருந்து பதில்களைப் பெற்று வந்தவர்களிடம் சொல்வதுதான் ஆரக்கிளின் பணி.[1] அவர்களுக்கு பறவைகள், விலங்குகள், மற்றும் பல்வேறு முறைகள் வழியாக கடவுளால் அறிவிக்கப்படும் அறிகுறிகளைப் புரிந்துகொள்ளும் ஆற்றல் உள்ளவர்களாக கருதப்பட்டனர்.
பழங்கால கிரேக்கத்தின் மிக முக்கியமான ஆரக்கிள்கள் பிய்த்தியா, டெல்பியில் உள்ள அப்போலோவின் பூசாரி, மற்றும் எயிரோஸில் உள்ள டோடோனாவில் சியுசு, டோனியின் ஆரக்கிள் போன்றவை ஆகும். அப்பல்லோவின் மற்ற கோவில்கள் ஆசியா மைனரின் கடற்கரையிலுள்ள தெத்மியாவில் கொரிந்தியிலும் பெலொபனேசியிலுள்ள பாஸ்ஸிலும் அமைந்திருந்தன. மற்றும் டிஜோஸ் தீவுகள் மற்றும் ஏஜியன் கடலில் ஏகினா தீவுகளில் ஆகிய இடங்களிலும் இருந்தன.
சிபிலின் ஆரக்கிள்ஸ் என்பது கிரேக்க ஹெக்செமட்டரில் எழுதப்பட்ட ஆரக்கிள் ஒலிப்புகளின் தொகுப்பாகும்.
மேற்கோள்கள்
தொகு- ↑ மருதன். "என் கேள்விக்கு என்ன பதில்?". கட்டுரை. தி இந்து தமிழ். பார்க்கப்பட்ட நாள் 11 அக்டோபர் 2017.
வெளி இணைப்புகள்
தொகு- "Oracle". பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம் (11th). (1911). Cambridge University Press.