எகிப்திய மம்மியின் வாய் திறப்புச் சடங்கு


மம்மியின் வாய்த் திறப்புச் சடங்கு (opening of the mouth ceremony) பண்டைய எகிப்தியர்கள் இறுதிச் சடங்குகளின் போது செய்யப்படும் சடங்குகளில் ஒன்றாகும். இந்த இறுதிச் சடங்கு பழைய எகிப்து இராச்சிய காலம் (கிமு 2686) முதல்,[1] எகிப்தை ஆண்ட கிரேக்க தாலமி வம்சம் காலம் (கிமு 305 - கிமு 30) வரை நடைமுறையில் இருந்தது. மறு வாழ்ககியில் நம்பிக்கை உடைய பண்டைய எகிப்தியர்கள், இறந்தவர் மறுவாழ்வின் போது, மூச்சு விடுவதற்கும், பேசுவதற்கும், உணவு உண்பதற்கும், நீர் குடிப்ப்பதற்கும் வாய் திறப்பு சடங்கின் போது இறப்பு, இறந்தோர் உடலைப் பதப்படுத்தல் மற்றும் கல்லறைக் காவல் கடவுளான இன்புவின் பூசாரி மம்மியின் சவப்பெட்டி மீதான வாய்ப்பகுதி மேல் ஒரு துளையிட்டு வாய்த் திறப்புச் சடங்கை நடத்துவர்.[2][3] வாய் திறப்பு சடங்கின் போது ஒப்பாரி வைத்து அழுவதற்கு பெண்கள் இருப்பர்.

இறப்பு, இறந்தோர் உடலைப் பதப்படுத்தல் மற்றும் கல்லறைக் காவல் கடவுளான இன்புவின் பூசாரி மம்மியின் வாய்த் திறப்பு சடங்கை நடத்துதல்
18-ஆம் வம்ச மன்னரின் கல்லறைச் சுவரில் மம்மியின் வாய்த் திறப்புச் சடங்கின் போது மாமிசத்தை படையல் போடும் சிற்பம்
பார்வோன் ஆய், இறந்த துட்டன்காமன் மம்மியின் வாய்த் திறப்புச் சடங்கை நடத்தும் சுவர் ஓவியம்

இதனையும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு